பல உலக மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் Bigg Boss. வெவ்வேறு உலக நாடுகளில் வேற பெயர்கள் கொண்டிருந்தாலும், நிகழ்ச்சியின் நோக்கம் ஒன்று தான். இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் அதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உளவியல் பற்றியும், அவர்களின் நடவடிக்கைகளை மக்கள் கண்காணித்து முடிவெடுக்கும் ஒரு இடத்தை கொடுக்கும் நிகழ்ச்சியாகும்.
இதில் தமிழ் மொழியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் உடைய நேர்த்தியான தமிழில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, கடந்த 7 சீசன்களாக அவருக்கு பல கொடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சியை ஒளிபரப்பிவந்தனர். இப்பொய்த்து Bigg Boss 8 ல் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்திருப்பதும், இதற்காக அவர் வாங்கும் சம்பளம் பற்றியும் பல கேள்விகள் உண்டு.
Bigg Boss 8 நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இதில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது பற்றிய ஒரு ஏறத்தாழ பட்டியல் தான் இது.
விஜய் சேதுபதி
பொதுவாக நடிகர்கள் தொலைக்காட்சிகளில் நடிப்பதோ, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஒப்புக்கொள்வதோ அவர்களுக்கு சினிமா வாய்ப்பு வராமல் இருந்தால் தான். அப்படி ஒரு கூற்று இருக்கும்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட கைவசம் 4- 5 படங்கள் வரிசைகட்டி நடிப்பதற்கு இருந்தும், இந்த Bigg Boss 8 நிகழ்சியில் வார இறுதியில் வந்தது தொகுத்து வழங்க அவருக்கு ஏறத்தாழ 15 கோடி முதல் 17 கோடி வரை கொடுப்படுகிறதாம்.
பிக் பாஸ் சீசன் 8 – விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?!
ரவீந்தர் சந்திரசேகர்
Bigg Boss 8 நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக பங்கேற்பதற்கு முன் அந்த நிகழ்ச்சியை பற்றி வெளியே இணையத்தில் தினசரி விமரிசித்தும், விவாதித்தும் வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவருக்கு வெளியே விமர்சகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் பின்தொடர்வதால், இவர் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்பது சேனல் தரப்பிலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும், தனிப்பட்ட முரையில் இவருக்கும் லாபகமாக அமைவதால் ஒரு நாள் சம்பளமாக இவருக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ரஞ்சித்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கதாநாயகனாக, துணை வேடங்களில் நடித்தும் வந்தவர் நடிகர் ரஞ்சித். இவரை பற்றி பெரிய சர்ச்சைகள் ஏதும் பல இதனை ஆண்டுகள் இல்லாமல் இருந்தாலும், சமீபத்தில் அவர் இயக்குனராக களமிறங்கி தனக்கு தானே சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டார். அந்த படத்தால் இணையத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டவர், இந்த Bigg Boss 8ல் போட்டியாளராக பங்கேற்க ஏறத்தாழ 50 ஆயிரம் சம்பளமாக ஒவ்வொரு நாளும் பெறுகிறார்.
தீபக்
தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகங்களில் ஒன்று VJ தீபக். அவர் 30 ஆண்டுகளாக பல சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, அதில் பங்கேற்றும் உள்ளார். நடிகராகவும் இவர் சில பல சீரியல்களில் நடித்திருப்பதால் இவருக்கான ரசிகர்கள் Bigg Boss நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்ற கணிப்பில் இவருக்கு பிக் பாஸ் வீட்டில் தாங்கும் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் சம்பளம் என தெரிகிறது.
சாச்சனா
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி உடைய மகளாக, படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சாச்சனா. இவர் பெரிதாக பார்வையாளர்களால் அறியப்படாத போட்டியாளர் என்றாலும், இவருடைய சமீபத்திய புகழ் மற்றும் இந்த சீசனில் இவரின் பங்கேற்பு நல்ல TRP ரேட்டிங் பெற்று தரும் என்ற முனைப்பில் இவரை நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் சம்பளம் கொடுத்து இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே வெளியேற்றினாலும், மீண்டும் போட்டியாளராக சேர்த்துள்ளனர்.
25 ஆயிரம் சம்பளம் பெரும் விஜய் டிவி பிரபலங்கள்
Bigg Boss 8 நிகழ்ச்சியில் இந்த முறை பெரும்பாலான போட்டியாளர்கள் விஜய் டிவியில் நடிகர்களாக, நடன கலைஞர்களாக, தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அப்படி ஜாக்குலின், அருண், சுனிதா, தர்ஷா குப்தா, அர்னவ், சத்யா, பவித்ரா ஜனனி, அன்ஷிதா, விஷால், தர்ஷிகா ஆகியோர் நாள் ஒன்றுக்கும் 25 ஆயிரம் சம்பளம் பேசியுள்ளதாக தெரிகிறது.
விஜய் டிவியை சேராத சில போட்டியாளர்கள் ஆனந்தி நாள் ஒன்றுக்கு 25 ஆயிரமும், பேச்சாளர் முத்துக்குமரன் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரமும், மாடல் சௌந்தர்யா மற்றும் கானா பாடகர் ஜெப்ஃபிரி ஆகியோரும் நாள் ஒன்றுக்கும் 10 ஆயிரம் பெறுவதாக கூறப்படுகிறது.