இந்த பிக் பாஸ் சீசன் தொடங்கி ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவு என ஆண்கள் தரப்பில் பெண்களை பல விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்தவும், பெண்கள் தரப்பில் ஆண்களை வலு இழக்க செய்வதும் என இரண்டாவது வாரத்தில் தான் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
வீட்டிற்குள் பிரிவினையை தங்களின் பலமாக பயன்படுத்தி கொண்டு ஆண்கள் பெண்களிடம் தொடர்ந்து பல விதிமுறைகளையும் அதை மீறினால் தண்டனை என திட்டமிட்டு வர, இந்த வாரம் ஒரே ஒரு பெரிய போட்டி நுணுக்கத்தை தெளிவாக பெண்கள் பயன்படுத்தி அமோகமாக விளையாடி வருகிறார்கள்.
Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
இந்த வாரத்திற்கான அணியினர் swap ல் ஆண்கள் பக்கம் தர்ஷா குப்தா செல்ல பெண்கள் பக்கம் தீபக் இணைந்துள்ளனர். பெண்கள் செய்யும் திட்டங்கள், அங்கே நடக்கும் சண்டைகள் ஆகியவற்றை ஆண்கள் அணிக்கு சேகரித்து தருவேன் என சென்ற தீபக், பெரும்பாலும் எந்தவித தகவலும் இல்லாமல், பெண் போட்டியாளர்களின் விளையாட்டை கணித்து வருகிறார்.
பெண்கள் தரப்பில் ஆண்களுடைய ஒற்றுமையை உடைத்து ஆவர்களுக்குள் சண்டைகளை கிளப்ப தர்ஷா குப்தாவை அனுப்ப, அவரின் பாத்திரத்தை கச்சிதமாக செய்து வருகிறார் தர்ஷா குப்தா. விட்டு வேலைகள் வழியாக பெண்களை கை பொம்மையாக மாற்ற முயன்ற ஆண்களை ஒரே டாஸ்கில் அவர்கள் பக்கம் அணைத்து வேலைகளையும் திருப்பினார்கள் பெண்கள்.
Bigg Boss தமிழ் 8 நாள் 10 -ல் நடந்தவை
இந்த சீசனில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட வீட்டில் ஒரு பாதியில் ஆண்கள் அவர்களின் விதிமுறைகளை முன் வைத்தும், மற்றொரு பக்கம் பெண்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், இருவீட்டாரும் அந்த விதிகளை முழுமையாக புரிந்துகொள்ளாமல், எதிர் அணியினரை டாஸ்க் செய்ய வைப்பதற்கும் தண்டனை தருவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
முக்கியமாக ஆண்கள் அணியில் இந்த வாரம் பெரிய தடுமாற்றம் தெரிவதால் அதை எப்படி கடக்கலாம் என பேசி வந்தனர். அதே போல் பெண்கள் தரப்பில் தர்ஷ குப்தாவிற்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து வருவதால் சுலபமாக இந்த நாள் தொடங்கியது.
அர்னவ் அன்ஷிதாவிற்கு மட்டும் செய்த உதவி
Bigg Boss தமிழ் 8 -ல் சமையல் அறை பொதுவானது என்றாலும், அது ஆண்கள் வீட்டிற்குள் இருப்பதால் நேற்று அந்த சமையலறை உள்ளே செல்வதை வைத்தே பல சண்டைகள் நடந்தது. இதனால் ஆண்கள் யாரும் பெண்களுக்கு பெரிதாக உதவவோ, சார்பாகவோ நடக்க கூடாது என தீர்மானித்து இருந்த நிலையில், இன்று அர்னவ் செய்த காரியம் முரணாக அமைந்தது.

அன்ஷிதா தனக்கு சூடு தண்ணி வேண்டும் என்றும், ‘ஒரு கப் சூடு தண்ணி வைத்து தர முடியுமா’ என அர்னவிடம் கேட்க, அதற்கு அர்னவ் உடனே இணங்கி அவருக்கு சூடு தண்ணி வைத்து தந்தது மட்டும்மல்லாமல், அந்த குவளையும் அன்ஷிதா அணிந்திருந்த உடையும் ஒரே மாதிரி இருப்பதாக கூறினார். அதற்கு அன்ஷிதா, ‘நீ தானே இந்த உடையை வாங்கி கொடுத்த’ என கூறினார்.
இதை சுற்றி இருந்த பெண் போட்டியாளர்கள் சிலருடன் தீபக்கும் கேட்டார். அர்னவ் மற்றும அன்ஷிதா காதலித்து வருவதாகவும், இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை அம்பலமானதையடுத்து, இருவரும் Bigg Boss தமிழ் 8 ல் அதை பற்றி பேசாமல் இருந்து வந்தனர். இப்போது இவர்களின் முகமூடி அவிழ்ந்துள்ளதாக தெரிகிறது.
காதல் சர்ச்சைகளுக்கு பிறகு Big Boss வீட்டிற்க்கு மீண்டும் காதலனுடன் வந்தாரா அன்ஷிதா.
அர்னவ் vs ஆண்கள்
இந்த Bigg Boss தமிழ் 8 ல் ஆண் குழுவினர் அனைவரும் ஒன்றாக தான் அணைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறார்கள். அப்படி இருக்க சமையலறைக்கு செல்வதை தங்களின் பிரதான ஆயுதமாக கொண்டு பெண்களிடம் விதிமுறைகளை நடைமுறை படுத்தி வரும் நிலையில், அர்னவ் மட்டும் யாரிடமும் கேட்காமல், மற்ற பெண் போட்டியாளர்களுக்கு செய்யாத உதவியை அன்ஷிதாவிற்கு செய்தது தவறாக தெரிந்தது.

இதை பற்றி பேச அர்னாவை ஆண்கள் அழைக்க, அவர் இதை பற்றி பேசாமல் எப்படி தப்பிப்பது என கணக்கிட்டு, ‘நான் workout பண்ணும்போது தான் பேசணுமா’ என கேட்டு நழுவினார். இதை மீறியும் ஆண்கள் ஆவ்ரிடம் கேட்க, அவர் ஏதேதோ காரணங்களை சொல்லி தப்பித்தார்.
உள்ளே பெண்கள் வீட்டிற்குள் நுழைந்த தர்ஷா குப்தாவை அப்படி செய்ய கூடாது என்றும், நீங்கள் பெண்கள் அணிக்கு சாதகமாக விளையாடுவேன் என்றால் ஆண்கள் பக்கம் சேராமல் இருப்பது நல்லது என்றும் அறிவுரை கூறிய அர்னவ், மேலும் ‘ஆண்கள் யாரும் உங்களிடம் பேச கூடாது என முடிவெடுத்து நான் உங்களிடம் பேசுகிறேன்’ என அவரின் அணியினர் வகுத்த திட்டத்தை போட்டு உடைத்தார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய தர்ஷா, ஆண்களிடம் அர்னவ் கூறியதை கூற, சண்டை முற்றி, அவர்களுக்கு நம்பிக்கையின்மை வளர தொடங்கியது.
Bigg Boss தமிழ் 8 ல் Phone அ போடு பாட்ட கேளு டாஸ்க்
இந்த வாரத்திற்கான டாஸ்க், பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் தனியாக டிவி சேனல் ஒன்று தரப்படும். அதில் கிங் டிவி ஆண்களுக்கும் குயின் டிவி பெண்களுக்கும் என அவர்கள் நேயர்களை, வீட்டில் இவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நடுவர்களையும் ஈர்க்க வேண்டும்.
குயின் டிவி உடைய தலைமை செயலாளராக அனந்தி பிரமாதமாக அந்த சேனலின் வரலாறு, இன்று நடக்கப்போகும் ஷோ பற்றியும் கூறினார். இந்த CEO பதவிக்காக தனியாக ஒரு பாத்திரமாகவே ஆறி அருமையாகவும், தெளிவாகவும் நடித்தார்.
கிங் டிவியின் தலைமை செயலாளராக ரஞ்சித் அவர்கள் நகைச்சுவையான ஒரு நடிப்பை முன்வைத்தார். இந்த பிக் பாஸ் சீசனில் நடிகராக ரஞ்சித் அவர்கள் ஒவ்வொரு முறையும் அட்டகாசம் செய்து வந்தாலும், இந்த டாஸ்க்கிற்கு தேவையான நேர்த்தியான உரையாடலும், தெளிவான பேச்சும் அமையவில்லை.
அடுத்ததாக இந்த டாஸ்கின் முதல் சுற்றாக பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியினர் முதலில் அவர்களின் நிகழ்ச்சிக்கு விஷால் மற்றும் முது தொகுத்து வழங்க, அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா இணைந்து நடமாடினர். நகைச்சுவையாகவும், தெளிவாகவும் இவர்களின் நிகழ்ச்சி அமைந்தது.
பெண்கள் அணியினர் அவர்களின் சேனலில் ஜாக்குலின் மற்றும் தீபக் தொகுத்து வழங்க, சம்மந்தமில்லாத பாடல்களும், அதற்கு இணையில்லாத நடனம் என அது ஓரு விதமான நகைச்சுவையாக அமைந்தது. இரு அணியினரின் நடிப்பையும் ஒப்பிட்டு நடுவர்களாக நியமிக்க பட்ட அருண் மற்றும் அனந்தி ஆண்கள் தான் வெற்றியாளர்கள் என அறிவித்தனர்.
Bigg Boss 8 ranking டாஸ்க்
ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களை அவர்களின் திறனை வைத்தும், இந்த வீட்டில் அவர்களின் நடவடிக்கைகள் வைத்தும், நேயர்களை எப்படி அவர்கள் குஷிப்படுத்தினார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களே 1 முதல் வரிசை படுத்த வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படும்.
I have a special respect for people who speak up for their self-respect ♥️#Jeffrey 💥#BiggBossTamil8 pic.twitter.com/ZnzXaVvvt9
— Cascu 🌧️ (@cascade94) October 17, 2024
இந்த முறை இந்த கிங் டிவி, குயின் டிவி டாஸ்கில் போட்டியாளர்களின் திறனை வைத்து மட்டும் 1 முதல் 17 வரை வரிசை படுத்த வேண்டும். போட்டியாளர்கள் வேண்டுமானால் ஒரே இடத்திற்காக போட்டியிடலாம். இப்படி முதல் மூன்று இடங்களில் முத்துக்குமரன், விஷால் மற்றும் அனந்தி வரிசைப்படுத்த, தொடர்ந்து ஒவ்வொருவராக அவர்களின் பங்களிப்பை கூறினர்.
இதில் ஜெபிரி மற்றும் சுனிதா உடைய வாதத்திற்கு பெரியளவில் ஆதரவு இல்லாததாலும், ஜெபிரி உடைய வாதத்தை கேட்டு அனைவரும் சிரித்ததாலும் அவர் மனமுடைந்தார். சுனிதாவிற்கு இந்த டாஸ்கில் மொழி ஒரு இடையூறாக அமைந்ததால் அவரின் முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை என அவரும் மனமுடைந்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]