Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
Bigg Boss தமிழ் 8 நிகழ்ச்சியில் தொடர்ந்து சண்டைகளாக இருப்பதை மக்களின் பார்வையில் உணர்ந்து அதற்கு மாறாக இரண்டு சில physical task மற்றும் entertainment போட்டிகள் நடந்து வருகிறது. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், அவர்களின் தனித்துவத்தை வெளிக்காட்ட இந்த போட்டிகள் உதவியாக இருக்கிறது மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கும் இந்த டாஸ்குகள் இந்த சீசனில் யாரை ஆதரிப்பது என முடிவெடுக்க வழி செய்கிறது.
Bigg Boss தமிழ் 8 நாள் 11 -ல் நடந்தவை
ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சேமிப்பது, வீட்டை பராமரிப்பது, கொடுக்கும் டாஸ்குகளை நேர்த்தியாக விளையாடுவது என்று இருந்தாலும், பகலில் இவர்கள் யாரும் தூங்க கூடாது என்பது பிக் பாஸின் விதிமுறை. அப்படி தூங்கினால் நாய் குரைப்பது போன்ற ஒளி எழுப்பப்பட்டு, போட்டியாளர்கள் எழுந்திரிக்க வேண்டும்.
இந்த Bigg Boss தமிழ் 8 சீசனில் பெரிதாக அப்படி எந்த விதி மிரளும் நடக்காமல் இருந்தாலும், வீட்டில் சோர்வாக போட்டியாளர்கள் இருப்பதை பார்த்த இந்த வார தலைவர் சத்யா, அவரவரின் திறமைகளை அனைவருக்கும் செய்து காட்டினால் நன்றாக இருக்கும், அனைவரும் தூங்காமல் இருக்கலாம் என்று கூறினார்.
நீதானடி வானில் மதி . . .
— Sai (@sai_whispers) October 17, 2024
நீயல்ல நான்தானே தேய்ந்தேன் 🫠🫠🫠
Adipoli mone #Jeffry 💥👏👏#BiggBossTamil8 #BiggbossTamil #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8
pic.twitter.com/K3ddw7GOeZ
Source: X (sai_whispers)
இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். கானா பாடல்கள் மட்டுமில்லாமல், மெலடி பாடல்களையும் பாடி அசத்தினார் ஜெபிரி. விஷால் மற்றும் சாச்சனா இனைந்து ஒரு கட்சியை நடித்து காட்டினார்கள், அதே போல் ரஞ்சித் மற்றும் ஜாக்குலின் இருவரும் உணர்வுபூர்வமான ஒரு கட்சியை நடித்தனர். தர்ஷிகா அவரின் நடிப்பை பரதநாட்டிய முத்திரைகள் வழியாக வெளிப்படுத்த, அன்ஷிதா அவரின் நடிப்பை விஷாலுடன் சேர்ந்து நடித்துக்காட்டினார்.
திறமையானவர்கள் ஆண்களா? பெண்களா?
இந்த Bigg Boss தமிழ் சீசன் 8 -ல் பலதரப்பட்ட திறமையாளர்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்து எதிர்காலத்தில் வாய்ப்புகள் தேடவும், பிரபலமாகவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, அதில் யார் திறமைவாய்ந்தவர்கள் என்று கணக்கிடும் டாஸ்க் தான் இது.
ஆண்கள் மற்றும் பெண்கள் முண்டு சுற்றுகளாக போட்டியிட்டு அதில் அறிவு, கூட்டணி, நினைவாற்றல் என்ற அடிப்படையில் யார் அதிகமான மதிப்பெண்களை பெறுகிறார்களோ, அவர்கள் இந்த வீட்டில் அதிக திறமை படைத்தவர்கள் என அறிவிக்கப்பட்டு, முக்கியமாக இன்னொரு nomination free pass வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த Bigg Boss தமிழ் 8 போட்டியாளர்களின் அறிவை சோதிக்க நடுவே ஒரு buzzer வைக்கப்பட்டு இரு புறமும் அணைகள் மற்றும் பெண்கள் அணியினர் அமர்ந்து, கேட்கப்படும் 20 கேள்விகளுக்கு முதலில் யார் அந்த buzzer ஐ அழுத்தி சரியான பதில் சொல்கிறார்கள் என்பது தான் போட்டி.
இரண்டு அணியினரும் மும்முரமாக, வேகத்துடன் விவேகமாகவும் இந்த போட்டியை விளையாடினர். குறிப்பாக பெண்கள் அணிக்காக விளையாடும் தீபக் அதிவேகத்தில் சரியான பதில்களை பல முறை குறி பெண்களுக்கு வெற்றியை பெற்றுத்தந்தார்.
Bigg Boss தமிழ் 8 நாள் 10 : அர்னவின் முகமூடி விலக, சுதாரிக்கும் ஆண்கள்!
இரண்டாவது போட்டியில் இரு வீட்டாரின் கூட்டணியும் ஒற்றுமை எப்படி உள்ளது என்பதை சோதிக்க, ஒருவர் மேசையில் எண்கள் ஒட்டப்பட்டுள்ள கப்களை அடுக்க வேண்டும். இதை எதிர் அணியினர் பந்துகள் கொண்டு கலைக்க முயற்சிக்கலாம். இந்த பந்துவீச்சை தடுக்க மூன்று நபர்கள் வட்டத்திற்குள் நின்று ஒற்றுமையாக அணிக்காக விளையாட வேண்டும்.
#Jeffry fiery shots today 🔥🔥#biggbosstamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8
— BB Mama (@SriniMama1) October 17, 2024
pic.twitter.com/08Ne6Xoekm
Source: X (SriniMama1)
இந்த போட்டியில் ஆண்கள் சார்பில் முதலில் முத்துகுமாரகின் கப்களை அடுக்க, பெண்கள் அணியினர் பந்து எரிந்து கலைக்க முயற்சித்தனர். இதில் ஆண்கள் தங்களால் முடிந்த அளவு விளையாட, அடுத்ததாக பெண்கள் தரப்பில் தர்ஷிகா அடுக்க வந்தார். இதை கடைசி நிமிடம் வரை தொடர்ந்து தாக்கி வந்த ஆண்கள், buzzer ஒலிக்கும்போது ஒரு கப்பை தட்டிவிட்டனர். அதனால் இந்த சுற்றில் ஆண்கள் வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்டது.
சமையலில் குறை சொன்னதால் மனமுடையும் தர்ஷா குப்தா
ஆண்கள் அணியில் சென்ற்து இந்த வாரம் விளையாட சென்ற தர்ஷா குப்தாவை பெரிதாக எந்தவித போட்டிகளிலும் சேர்க்காமல், அவரிடம் வாக்குவாதம் செய்துவந்த ஆண்கள், அவருடைய சமையலை வைத்து அவரை கலாய்த்த ஆண்கள்.
முதலில் இதை விளையாட்டாய் எடுத்துக்கொண்ட தர்ஷா, சிறிது நேரம் கழித்து தனியாக அழுகை தொடங்கினார். இவரை பெண்கள் அணியிலும் சமாதானம் செய்தனர், ஆண்கள் இதற்கு மன்னிப்பு கேட்டும் ஆவர் அழுவதை நிறுத்தவில்லை.
நகைச்சுவைக்காக பேசியதை இப்படி எடுத்துக்கொள்வது தவறு என கூறிய விஷால், நேரடியாக தர்ஷா குப்தாவிடம் அவரின் கருத்தை தெரிவித்தார். அதில் ஆண்கள் எப்படி ஒருவரை கலாய்ப்பது உரிமையான ஒரு செயல் என்றும், இருந்தும் இந்த வீட்டில் உங்களை பார்த்து சிரிப்பது பெண்கள் தான் என்றும் அவர் கூறினார். இதற்கு தர்ஷா குப்தாவும் ஒத்துழைக்கும் வகையில் பேசி, அவர் இந்த வீட்டில் இரண்டு தரப்பிலும் சேர்க்கப்படாமல் இருப்பதை உணர்ந்துள்ளார்.
கடைசியாக மூன்றாவது போட்டி இன்னும் நடக்காததால், இந்த Nomination Free Pass யார் கையில் கிடைக்கும் என்பது முடிவாகவில்லை.