இரண்டாவது வாரத்தின் அணைத்து டாஸ்குகளும் ஓரளவுக்கு முடிந்த நிலையில் Bigg Boss தமிழ் 8 உடைய போட்டியாளர்களின் விளையாட்டு முழுவதும் மாறியுள்ளது தெரிகிறது. முதல் வாரத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக்கொண்ட போட்டியாளர்கள், இந்த வரம் அதை தங்களின் போட்டிக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் யுக்தி பர்வையாளர்களுக்கு பிடித்துள்ளது/
Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
கடந்த வாரம் விஜய் சேதுபதி, Bigg Boss தமிழ் 8 போட்டியாளர்களை சரமாரி கேள்விகளால் அவர்களின் விளையாட்டை திருப்பி, சின்ஹட் ஆவாரம் அது தெளிவாக பிரதிபலிக்கிறது. தலைவர் போட்டி, King டிவி, Queen டிவி வர போட்டி, யார் கெத்து ஆகிய போட்டிகளில் இந்த சீசன் போட்டியாளர்களின் திறமைகள், பலம், பலவீனம் என அனைத்தும் வெளிவந்துள்ளது.
பெண்கள் மத்தியில் ஜாக்குலின் இந்த வாரத்தில் அவரின் நம்பகத்தன்மையை கூட்டி, அவருக்கான போட்டியை தொடங்கியுள்ளார். தர்ஷா குப்தா தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட ஆண்கள் மற்றும் பெண்களுடன் போட்டி போடாமல் மனமுடைந்து விரக்தியில் இந்த வரத்தை சாட்டியுள்ளார்.
Bigg Boss 8 ல் போட்டியாளராக இணைகிறார் ‘செல்லம்மா’ சீரியல் நடிகர் Arnav!
Bigg Boss தமிழ் 8 நாள் 12 -ல் நடந்தவை
ஆண்கள் மற்றும் பெண்களில் யார் கெத்து என்று முடிவு செய்யும் போட்டியில் முதல் இரண்டு சுற்றில் ஆண்களும் பெண்களும் தலா ஒரு வெற்றியுடன் கடைசி போட்டியை விளையாடினர். மூன்றாவது போட்டி, நினைவாற்றலை சோதிக்கும் போட்டி ஆகும்.
இதில் ஓங்கோல் தரப்பில் தர்ஷிகா, அனந்தகி மற்றும் பவித்ரா ஆகியோர் confession அறையில் காட்டப்பட்டுள்ள 15 போட்டுக்காளையும் நினைவில் ஏற்றி, அதே வரிசையில் அடுக்க வேண்டும். ஒவ்வொருவராக போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று இதை செய்ய, கடைசியில் எந்த அணி அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது அவரே இந்த வீட்டில் கெத்து என முடிவாக்கப்படும்.
ஆண்கள் அணியிலிருட்னது ஒருவழியாக தர்ஷா குப்தாவிற்கு வாய்ப்பு கொடுக்க, அவருடன் அர்னவ் மற்றும் முத்துக்குமரன் இதில் விளையாடினர். முதல் சென்ற அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஒழுங்காக விளையாடவில்லை என்றாலும் முத்துக்குமரன் அணைத்து பொருட்களையும் சரோயாக அடுக்கினார். கடைசியில் ஆண்கள் 24 புள்ளிகளும், பெண்கள் 25 புள்ளிகளும் பெற்று பெண்கள் அணியினார் வெற்றி பெற்றனர்.
ஜாக்குலினை காப்பாற்றிய பெண்கள்
இதுவரை ஜாக்குலின் vs பெண்கள் அணியாக இருந்துவந்த நிலையில், யார் கெத்து போட்டியில் வென்ற பெண்களுக்கு இந்த வாரம் eviction பரிந்துரையில் இருக்கும் பெண்களில் ஒருவரை காப்பாற்றலாம் என்ற சக்தி கிடைக்க, இந்த வரம், சௌந்தர்யா, தர்ஷா குப்தா, ஜாக்குலின் மற்றும் சச்சனா ஆகியோர் eviction பரிந்துரையில் உள்ளனர்.
பெண்கள் அனைவரும் சேர்ந்து தீர்மானித்து ஆச்சரியமாக ஜாக்குலினுக்கு இந்த வரம் வெளியேறாமல் இருக்க வேண்டும் என தீர்மானித்தனர். இதை அறிவித்த சுனிதா, ஜாக்குலின் ஒரு நல்ல போட்டியாளர் என்றும், அவர் மனதளவிலும் உடலளவிலும் பலமானவர். மேலும் பெண்கள் அணிக்காக விளையாடி துணையாக உள்ளார் என்றும் காரணமாக கூறினார்.
Bigg Boss தமிழ் 8 ன் BB Awards
ஒவ்வொரு சீசனிலும் BB விருதுகள் என்ற ஒரு டாஸ்க்கும் நடக்கிறது, அதில் போட்டியாளர்கள் சில விருதுகளை சக போட்டியாளர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி இந்த Bigg Boss 8 ல் ஆண்கள் ஒன்று சேந்து பெண்களுக்கும், பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆண்களுக்கும் இந்த விருதுகளை கொடுக்க்க வேண்டும்.
Drama Queen / King, குரூப் ல டூப், சோம்பு தூக்கி, டம்மி பாவா, Audience watching Audience என்ற 5 விருதுகளை இரு அணியினரும் வழங்கினார்கள். இதில் கலவரமாக வெடித்தது அர்னவ் அன்ஷிதாவிற்கு வழங்கிய சோம்பு தூக்கி என்ற விருது தான்.
Bigg Boss தமிழ் 8 நாள் 10 : அர்னவின் முகமூடி விலக, சுதாரிக்கும் ஆண்கள்!
ஆண்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவாக தான் அணைத்து விருதுகளும் இருந்த நிலையில், சோம்பு தூக்கி என்ற விருதுக்கு அன்ஷிதாவை பரிந்துரை செய்ததே அர்னவ் தான். வெளியே இந்த இருவரை பற்றி பரவும் தகவலுக்கு முற்றிலும் எதிர்மாறாக அர்னவ் விளையாடுவது, அப்பட்டமான திட்டமாக தெரிகிறது.
King TV Awards full video 💥💥
— BB Mama (@SriniMama1) October 18, 2024
Group La Dupe – #Soundariya
Dummy Baava – #Jacquline 👎
Audience Watching Audience- #Pavithra
Drama Queen- #DharshaGupta 👍
Samba Thuki – #Anshitha👎#biggbosstamil8 #BiggBossTamilSeason8 #BigbossTamil8 #BBMama
pic.twitter.com/WHYdIKZzFG
Source: X (SriniMama1)
இதை பற்று மனமுடைந்து கேட்ட அன்ஷிதா, வெளியுலகத்தில் இப்படி தன என் நண்பருக்கு சோம்பு தூக்கி பல இன்னல்களை சந்தித்தேன் என கூறினார். இதை மறுத்த அர்னவ், ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தனர் என பொய் சொல்லி, அன்ஷிதாவை தன்னுடைய விளையாட்டிக்கு பகடையாக பயன்படுத்திவருகிறார்.
கடைசியில் இந்த BB விருதுகள் மற்றும் Eviction free பரிந்துரை அகையவற்றில் எதிலும் சௌந்தர்யா, பவித்ரா, சாச்சனா ஆகியோரை பயன்படுத்தவில்லை என அவர்கள் ஒவ்வொருவராக அழுக, அன்ஷிதா அர்னவ் செய்த காரியத்தால் சுனிதாவிடம் அழுதார்.