விஜய் டிவியில் தினசரி இரவு 9.30 க்கு ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் Bigg Boss தமிழ் 8. இந்த சீசனில் பெரும்பாலும் விஜய் டிவி ரசிகர்களுக்கு பரிட்சயமான முகமாக இருந்தும், இரண்டாவது நாள் முடிவில் இவர் தான் இந்த சீஸனின் தனித்துவமான போட்டியாளர் என முடிவெடுக்க முடியாத மாதிரி ஆண்கள் vs பெண்கள் என இரண்டு குழுவாக பிரிந்து விளையாட வைத்துள்ளனர். இந்த குழுக்கள் கடைசி வரை ஒன்றுபட்டு இருப்பார்களா? அல்லது தனித்துவத்தை காட்ட முயற்சிப்பார்களா?
Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
18 போட்டியாளர்களாக Bigg Boss தமிழ் 8 -ல் நுழைந்த ஆண்கள் மற்றும் பெண்கள், இப்போது அணைகள் பக்கம் 9 போட்டியாளர்களும், பெண்கள் பக்கம் 8 போட்டியாளர்கள் மட்டும் இருப்பதை புரிந்துகொண்டு ஒன்றுபட்டு விளையாட நினைக்கும் ஆண்கள் ஒரு பக்கம் இருக்க, பெண்கள் முதல் நாள் நடந்த கருது வேறுபாட்டை இரண்டாவது நாளும் பிடித்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளனர்.
தலைவர் போட்டிக்கு தேர்வான பின், வீட்டில் உள்ள இரண்டு அணிகளும் அவர்களின் வலிமையை வெளிப்படுத்த ஆர்வமாக காத்திருக்க, Bigg Boss தமிழ் 8 வது சீசனுக்கான விதிமுறைகள் ஏதும் இல்லாமல், அவரவரின் விதிமுறைகளை நடைமுறை படுத்தி முதல் நாள் கடத்தப்பட்டது.
Bigg Boss தமிழ் 8 நாள் 2 -ல் நடந்தவை
முதல் நாள் நடத்தப்பட்ட தலைவர் போட்டியில் உடல்நிலை மோசமான போட்டியாளர் ரவீந்தர், மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இவருக்கு சகா போட்டியாளர்கள் இரவு நேரத்தில் அவருக்கான உதவியை செய்தனர். இது இனையத்தில் பலராலும் பாராட்டப்பட்டது. தன்னுடைய Bigg Boss விமர்சன அனுபவத்தை வைத்து இந்த போட்டியை விளையாட வந்துள்ள ரவிந்தருக்கு அவரின் உடல்நிலை ஆதரவாக இருக்குமா என்பது பலரின் கேள்வியாக அமைகிறது.
Bigg Boss தமிழ் 8 ன் முதல் வாரத்திற்கான eviction பரிந்துரைகள் முடிவாகி, 6 போட்டியாளர்கள் nominate செய்யப்பட்டுள்ள நிலையில், நாள் 2ல் அந்த போட்டியாளர்கள் அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள விளையாட்டில் ஆர்வம் கட்ட தொடங்கியுள்ளனர். குறிப்பாக போட்டியாளர் அருண் முதல் நாளை விட இரண்டாவது நாளில் அவரின் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களை கவர ஆரம்பித்துள்ளார்.
Please save him from these TRP hungry goons.
— Rasigan 🧊🔥 (@Rasigan_022) October 7, 2024
He's in so much pain and he can't even walk on his own now.
Relieve him of his sufferings and bring him home this week. #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BiggBossTamil8 #BringBackSachana pic.twitter.com/45FDnb2QGl
ஆண்கள் மற்றும் பெண்கள் என பிரிக்கப்பட்டுள்ள இந்த பிக் பாஸ் வீடு, இந்த வாரத்தில் ஆண்கள் அணியிலிருந்து இருவரும் பெண்கள் அணியில் இருந்து ஒருவரும் எதிர் அணிக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் விளையாட்டை தொடர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரு அணியினரும் தனியாக சென்று யார் அந்த நபர் என முடிவெடுத்தனர்.
பெண்கள் அணியில் இன்றும் நிலவி வரும் மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாட்டால், தங்கள் அணைக்க ஆண்கள் உடன் சென்று விளையாட போவது யார் என முடிவெடுக்க ஒரு சண்டை வெடித்தது. முதலில் பேசிய போட்டியாளர் Jacquline, ‘எப்படியும் என்னை ஆண்களுடன் விளையாட அனுப்ப மாட்டீர்கள், நான் பெண்களின் சில முடிவுகளுக்கு உடன்போகவில்லை’ என கூறினார். மேலும் அபப்டி நினைப்பது தவறு என்றும், பெண்கள் அணிக்கு தன அவரின் ஆதரவு என அவர் கூறினாலும், அவரின் வாதம் எடுபடாமல் எதிர் வாதங்கள் கிளம்பியது.
அப்படி முதல் எதிர்வாதத்தை வைத்தவர் போட்டியாளர் Sunitha. முதல் நாள் நடந்த அதே வீடு பிரிவு சண்டையை இன்றும் மணடபிள் வைத்து Jacquline, அவரின் விளையாட்டு சுவாரசியமாக இருப்பதாக கூறினாலும், அதற்கு சுனிதா ‘உங்களின் game irritating ஆக தான் உள்ளது’ என குறி மேலும் ஒரு சண்டைக்கு அடிக்கல் போட்டார்.
ஆண்கள் – பெண்கள் Swap Task
பெண்கள் அணியில் Jacquline குரலுக்கு எதிர்க்குறளாக Pavithra Janani தன்னை ‘பாவம்’ என சொல்லாதீங்க என்றும், ‘என்னை பாவம்-னு சொல்ல நீங்க யார்’ என்று ஒரு கலவரம் தொடங்க, swap task காக யாரை அனுப்புவது என்று முடிவெடுக்க தடுமாறினார் பெண்கள் அணியினர்.
மறுபக்கம் ஆண்கள் அணியில் யாரை அனுப்பலாம் என்று முடிவெடுக்க முதலில் போட்டியாளர் Arun பேசினார். ‘பெண்கள் அணிக்கு சென்றாலும், நம் அணியை விட்டு கொடுக்காமல் ஆதரவாக நம்பிக்கையாக விளையாடும் நபர் Muthu Kumaran தான்’ என குறை, அதற்கு பெரிய விவாதம் இல்லாமல் ஆண்கள் அனைவரும் ஒருமையாக முடிவெடுத்தனர்.
பெண்கள் பக்கத்தில் Pavithra Janani, Dharsha Gupta மற்றும் Anshitha ஆகியோருக்கிடையே ஒருவரை அனுப்ப விவாதம் நடந்தது. கடைசியில் அனைவரும் சேர்ந்து Pavithra Janani தான் ஆண்கள் அணிக்கு ஒரு Spy ஆக செல்ல வேண்டும் என ஒருவழியாக முடிவெடுத்து விட்டனர்.
இதற்கிடையே Jacquline பெண்கள் அணியில் தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றும் தனியாக அவர் எடுக்கும் முடிவால் அவர் பேசுவது அனைத்துக்கும் எதிர்ப்பு கிளம்புவது சரியில்லை என குறி அழத்தொடங்கினார். இவரை ஆண்கள் அணியின் போட்டியாளர் Jeffrey மற்றும் பெண்கள் அணியில் Dharsha Gupta சமாதானம் செய்தனர்.
இந்த Swap task வழியாக ஆண்கள் அணியிலிருந்து Muthu Kumaran மற்றும் பெண்கள் தரப்பில் Pavithra Janani இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இருவரும் அவரவரின் அணிக்காக விட்டுக்கொடுக்காமல் தனித்துவமாகவும் தெரிவார்களா என்பது சந்தேகம் தான்.
Bigg Boss தமிழ் 8 சீசனுக்கான விதிமுறைகள்
முதல் நாள் ஆண்கள் மற்றும் பெண்கள் பக்கத்தில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதை பிக் பாஸிடம் கூறினார். இதில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டு, இந்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ விதிமுறைகள் வழங்கப்பட்டது.
பெண்கள் அணியினர் குறிப்பிட்ட விதிமுறைகள் படி, தங்களின் வீடுக்கு தெரியாமல் ஆண்கள் அணியினர் நுழைந்தால், பெண்கள் சொல்லும் வரை வெளியே செல்ல கூடாது என்றும், confession அறைக்கு பிக் பாஸ் அழைக்காமல் சென்றால் பெண்கள் யாரும் ஆண்களை ஒரு வாரம் nominate செய்யக்கூடாது என்று சொன்ன விதிமுறை முறியடிக்கப்படும்.
ஆண்கள் அணியினர் குறிப்பிட்ட விதிமுறைகள் படி அவர்களின் வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைய கூடாது, அப்படி நுழைந்தால் அவர்கள் சொல்லும் ஒரு டேஸ்க்கை செய்யவேண்டும். சமையல் அறைக்குள் ஆண்கள் அனுமதி பெற்று தான் நுழைய முடியும், அப்படி நுழைந்தாலும் அணைகள் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தண்ணீருக்கு போட்டியாளர் Ravindar தான் பொறுப்பு, அவரின் அனுமதி பெற்று தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் ஆகிய விதிமுறைகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த வீட்டில் இரண்டு சமையல் நடைபெறும் என்றும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித்தனியாக பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒரு மாதத்துக்கு 13,500 ரூபாய்க்கு சமையல் பொருட்கள் வாங்கலாம் என்று கூறப்பட்டது.
இரு அணிகளிலும் மூன்று நபர்கள் சென்று சமையல் பொருட்களை எடுக்க சென்றார்கள். அதில் ஆண்கள் அணியினர் சமையலுக்கு உப்பு எடுக்க மறந்துவிட்டனர். இதனால் பெண்கள் அணியினரிடன் உப்பு கொடுத்தால் storage அறைக்கு சென்று அவர்களின் சமையல் பொருட்களை எடுக்கலாம் என Pavithra Janani சொல்ல, அதை தெரிவித்தனர்.
ஆனால் உணவு இல்லாமல் இருக்கலாம் என பெண்கள் அணியில் முடிவெடுத்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் யாருமே சாப்பிடாமல் இருந்ததால் எந்த நேரத்திலும் தண்ணீர் எடுக்க அனுமதித்தால் உப்பு வழங்க படும் என்ற முடிவுக்கு இரு அணியினரும் வந்தனர்.