Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு, இருவருக்கும் பிக் பாஸ் வீட்டில் ஒரு பகுதியை பிரித்து கொடுத்து, 106 நாட்கள் எப்படி அவர்கள் தாக்குபிடிக்கிறார்கள் என்பது Bigg Boss தமிழ் 8 சீஸனின் தீம்.
ஆண்கள் மற்றும் பெண்கள் தரப்பில் ஒரு நபர் எதிர் அணிக்கு swap செய்யப்பட்டு, அவரவரின் அணிக்காக Spy ஆக செயல்பட வேண்டும் என்ற Task ஆரம்பித்து அதில் Bigg Boss தமிழ் 8 ல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இரு அணிக்கும் தரப்பட்டது.
முதல் இரண்டு நாட்களில் ஆண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எதற்கு என தெளிவாக தெரிந்துகொண்டு ஒருமையாக விளையாடும் போது, பெண்கள் தரப்பில் அந்த ஒருமைத்துவம் இன்னும் நடக்காமல் இருப்பது வீட்டில் நடக்கும் பெருமாரியான சண்டைக்கு ஆதாரமாக அமைகிறது.
Bigg Boss தமிழ் 8 நாள் 2 -ல் நடந்தவை
இந்த சீசனில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளும் அவர்களுக்கு தேவையான சமையலை தனியாக செய்துகொள்ள வேண்டும் என்றும், வீட்டின் ஒரு பக்கத்தை புழங்க விதிமுறைகள் இருப்பதால், இரண்டடைவது நாள் காலை காபி போடுவதற்கு ஆண்கள் தரப்பில் பெண்கள் அணியின் சேர்ந்துள்ள Muthu Kumaran ஐ தேர்ந்தெடுத்தனர்.
அவருக்கு அணைகள் பக்கம் புழங்க அனுமதி இருப்பதால், அதை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க அடிக்கடி அவர் சென்று அதை அனைவரும் பார்க்கும்படி இரு வீட்டிலும் அவர் நடந்தது அவருக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்துவதாக அமைந்தது.
அதனால் பெண்கள் அணிக்கும் எந்த நேரத்திலும் தண்ணீர் எடுக்கலாம் என்ற அனுமதி விளக்கப்படலாம் என்று பேசப்பட்ட கட்டத்தில் வீட்டின் தலைவி Tharshika, சக போட்டியாளர் Muthu Kumaran செய்வது சரியில்லை என தெரிவித்தார்.
Bigg Boss தமிழ் 8 நாள் 2: வீடு இரண்டு, விதிமுறைகளும் இரண்டு!
ஆண்கள் அணியில் போட்டியாளர் Jeffry கடுமையாக விமர்சிக்க ஒரு கானா பாடலை அந்த இடத்திலேயே பாடி Muthu Kumaran ஐ கிண்டல் செய்ததும் ஒரு சண்டைக்கு வித்திட்டது. இதற்கு பின் ஒரு பெரிய வாக்குவாதம் நடந்து முடிய, பெண்கள் அணியினர் Muthu Kumaran உடைய விளையாட்டில் நம்பிக்கை இல்லாமல் சந்தேகிக்க தொடங்கினர்.
வீட்டு வேலைகள் செய்யப்போவது யார்?
Bigg Boss தமிழ் 8 போட்டியில் வீட்டு வேலைகள் செய்வது என்பது ஒரு அங்கமாக இருந்தாலும், அதை யார் செய்கிறார்கள், அவர்களுக்கு அதில் விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களின் பங்கு அதில் இருப்பது அவசியம் என்பதால், வீட்டு வேலைகளை வைத்து கடந்த சீசன்களில் பெரிய சண்டைகள் நடந்துள்ளது.
இந்த சீசனில் இந்த வாரம் முழுவதும் யார் விட்டு வேலைகள் செய்வது ஆண்கள் அணியா? பெண்கள் அணியா? என முடிவெடுக்க ஒரு போட்டி நடத்தப்பட்டது. இரு தரப்பிலும் 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டு, இந்த போட்டியில் விளையாட வேண்டும்.
1 முதல் 5 வரை வரிசையாக நிற்கும் ஆண்கள் அணியினர் அவர்களின் அதே எண்ணில் நிற்கும் பெண் அணியினருடன் போட்டியிட வேண்டும். அப்படி கொடுக்கபட்டுள்ள 5 போட்டியில் அதிகம் வெற்றி பெரும் அணியினர் எந்தவித வேலைகளும் செய்யாமல் இருக்கலாம்.
முதல் போட்டியாக 3 புள்ளி கோலம் போடும் போட்டியில் பெண்கள் அணியிலிருந்து Dharsha Gupta வெற்றிபெற்றார். இரண்டடைவது போட்டி மூடி வைக்கப்பட்டுள்ள குளிர்பானத்தை ஒரே மடக்காக குடித்து முடிப்பவர் வெற்றிபெறுவர்கள். இதில் ஆண்கள் அணியை சேர்ந்த Arnav வெற்றி பெற்றார்.
மூன்றாவது சுற்றில் கொடுக்கப்பட்டுள்ள பொம்மைக்கு முதல் யார் diaper போட்டுவிடுகிறர்கள் என்பது தான் போட்டி. அதில் ஆண்கள் அணியினர் தரப்பில் விளையாடிய Sathya வெற்றி பெற்றார். அடுத்ததாக சப்பாத்தி மாவை வட்ட வடிவத்தில் தெறிப்பவர் வெற்றி என்ற போட்டியில் Jacquline எவற்றை பெற, இரு அணியினரும் சரிசமமான வெற்றிகளுடன் இருந்தனர்.
5வது போட்டியில் சிக்கலாக இருக்கும் சீரியல் விளக்கை பிரித்து முதலில் யார் எரிய வைக்கிறார்களோ அவர் தான் வெற்றியாளர். இந்த போட்டியில் Arun மற்றும் Muthu Kumaran போட்டியிட, அதில் முதலில் சிக்கலை பிரித்து Arun வென்று ஆண்கள் அணிக்கு முதல் வெற்றியை தேடித்தந்தார்.
Bigg Boss தமிழ் 8 ல் போட்டா போட்டி task
ஆண்கள் vs பெண்கள் என்ற பிரிவினைக்கு ஏற்ற மாதிரி விவாத போட்டி ஒன்றை அறிவித்த பிக் பாஸ், இந்த விவாதத்தில் ‘நம்பிக்கையானவர்கள் ஆண்களா? பெண்களா?’ என்ற தலைப்பில் இரு அணியினரும் விவாதம் செய்ய வேண்டும். இந்த போட்டிக்கு ஆண்கள் தரப்பில் Arnav மற்றும் பெண்கள் தரப்பில் Jacquline இந்த போட்டிக்கு நடுவர்களாக அனுப்பப்பட்டார்கள்.
ஆண்கள் தரப்பில் Vishal வந்து அவரின் காதல் அனுபவத்தை குறி பெண்கள் நம்பிக்கையானவர்கள் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார். பெண்கள் தரப்பில் Muthu Kumaran அவரின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
அதோடு பெண்கள் நம்பிக்கையானவர்கள் என்று பேச ஒரு ஆண் வந்திருப்பதை எதிர் அணியில் பேச வந்த Ravinder வாக்குவாதம் செய்தார். இரண்டாவது பேச்சாளராக பெண்கள் அணியிலிருந்து RJ Aananthi பேசினார். பெண்களின் அன்றாட இன்னல்கள், அதில் ஆண்களின் பங்கு என அருமையாக பேசி கைதட்டல்களை பெற்றார்.
இந்த போட்டா போட்டி task நிறைவடைந்து, அதில் Jacquline மற்றும் Arnav குடி பேசி முடிவெடுத்து பெண்கள் அணி வெற்றியாளர்கள் என்று அறிவித்தனர்.
ஆண்கள் செய்த Prank ஆல் வெடித்த சண்டை
Ranjith மற்றும் Ravinder இருவரும் இந்த வாரம் eviction பரிந்துரையில் இருப்பதால், அவர்கள் திட்டமிட்டு ஒரு பெரிய சண்டையை போட்டு, வீட்டில் உள்ள அனைவரையும் Prank செய்யலாம் என்று முடிவெடுத்தனர். இதில் அணைகள் அணியில் சிலரும் அந்த குழுவில் சேர்ந்துள்ள Pavithraவும் பங்காக இருப்பார்கள் என முடிவாகியது.
வீட்டின் வெளியே அனைவரும் அமர்ந்திருக்கும்போது Ranjith மற்றும் Ravinder இருவரும் சின்னதாக வாக்குவாதம் செய்து அதை ஒரு பெரிய சண்டையாக மாற்றினர். இதை தடுக்க ஆண்கள் அணியினரும் பெண்களும் முன்வந்து சிலபல நிமிடங்கள் சமாதானம் செய்தனர்.
முடிவில் இருவரையும் ஒருவழியாக சமாதானம் செய்ய, அது ஒரு Prank என அறிவித்தனர். அப்போது அதில் உடன்பாடு இல்லாமல் நிஜமாகவே சண்டையை தவிர்க்க நினைத்த பெண் பொடியளர்களும் ஆன் போட்டியாளர்களும் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை.
Plan vs execution of Ranjith & Fatman fight 😂😂😂
— BB Mama (@SriniMama1) October 9, 2024
Evlo perfection nu nenachu paarattanumunu nenaikiraen 😂🔥#biggboss8tamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8
pic.twitter.com/wWMaYGWz0G
Source: X (BB Mama)
குறிப்பாக Jacquline மற்றும் Dharsha Gupta இருவரும் கோவமடைந்தனர். எதிர் அணிக்கு சென்றாலும் பெண்களுக்காக விளையாட வேண்டிய Pavithra, இப்படி யானைகளுடன் சேர்ந்து Prank செய்ததை கேள்வி எழுப்பினார் Dharsha Gupta. சண்டையை தவிர்க்க அதிகமாக பேசி Ravinder இடம் கெஞ்சிக்கொண்டிருந்த Jacquline இந்த prank பிடிக்காமல் அழவே தொடங்கினார்.
தொடர்ச்சியாக Pavithra மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் அவரும் ஒரு கட்டத்தில் அழுக ஆரம்பித்து confession அறைக்கு செல்லவேண்டும் என கடத்திவிட்டார். ஆண்கள் தங்களுக்கு சாதகமாய் செய்த Prank பெண்களுக்கு பாதகமாக முடிந்தது.