Home Bigg Boss Tamil Bigg Boss தமிழ் 8 நாள் 4: Pavithra vs Muthu Kumaran சிறந்த Spy யார்?

Bigg Boss தமிழ் 8 நாள் 4: Pavithra vs Muthu Kumaran சிறந்த Spy யார்?

Bigg Boss தமிழ் 8, முதற்கட்ட Eviction ல் இருந்து தப்பிக்க, சக போட்டியாளர்களை பகடையாக்க நினைக்கும் ரவீந்தர். உடையும் நிலையில் தள்ளாடும் பெண்கள் அணியை தன்னுடைய தெளிவான கண்ணோட்டத்தால் பிணைத்து வைத்துள்ள Anandhi.

by Vinodhini Kumar

Bigg Boss தமிழ் 8ல் இதுவரை

முதல் வாரம் Eviction பரிந்துரையில் உள்ள 6 போட்டியாளர்களும் இந்த Bigg Boss தமிழ் 8ல் அவர்களை காப்பாற்றிக்கொள்ள முதல் வாரத்தில் மக்களை கவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆண்கள் தரப்பில் ஆணித்தரமாக இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உடைய, விரிசல்களை ஓட்ட வைக்க Ravinder போட்ட திட்டத்தில் Ranjith, Pavithra, Arun, Sathya மற்றும் பலர் இணைந்து நடத்திய Prank. 

Bigg Boss தமிழ் 8 Ranjith

முதற்கட்ட Eviction ல் இருந்து தப்பிக்க, சக போட்டியாளர்களை பகடையாக்க நினைக்கும் ரவீந்தர். உடையும் நிலையில் தள்ளாடும் பெண்கள் அணியை தன்னுடைய தெளிவான கண்ணோட்டத்தால் பிணைத்து வைத்துள்ள Anandhi. தன்னுடைய பேச்சுக்கு மறு பேச்சு நியாயமானதாக எழுந்தாலும் அதை காத்து கொடுத்து கேட்க மறுக்கும் Muthu Kumaran. 

ஆண்கள் அணியில் சேர்ந்தாலும் பெண்களுக்காக ஒரு Spy ஆக வேலைசெய்வேன் என கூறிய Pavithra, ஆண்கள் அணியில் பெண்களுக்கு எதிராக ஸ்கோர் செய்ய போடும் திட்டங்களில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பங்காக அமைந்து, பெண்கள் அணியின் நம்பிக்கையை இழந்துள்ளார். 

BB தமிழ் சீசன் 8 வீட்டில் நுழைந்த ‘கோமாளி’ பட நடிகை மற்றும் social media influencer பற்றி தெரியுமா?

Bigg Boss தமிழ் 8 நாள் 2 -ல் நடந்தவை

ஆண்கள் அணியில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் தங்களை மக்கள் eliminate செய்யாமல் இருக்க திட்டம்போட்டு செய்த Prank ஆல், அவர்களுக்கு உடன் சென்ற பவித்ரா, பெண்களின் நம்பிக்கையை இழந்து, பல கேள்விகளுக்கு ஆளாகி, ஒரு கடத்தில் confession அறைக்கு செல்லவேண்டும் என கேட்க, அதோடு பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரின் தனிப்பட்ட முகமூடிகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. 

Bigg Boss Tamil 8 Ravinder

ஆண்கள் அணியில் பெரிதும் வெளியே தெரியாமல் இருக்கும் போட்டியாளர் Arun, முதல் முறையாக ரவீந்தர் மற்றும் ரஞ்சித்தின் திட்டத்தை பற்றியும் இந்த Prank ரஞ்சித்தை காப்பாற்ற செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு வெளிப்படையான பதில் கொடுக்காமலும் இருந்தது மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

இரண்டு வீட்டுக்கும் இருவேறு சாமியால் மற்றும் சமையல் பொருட்கள் என பிரிக்கப்பட்டு, மாதத்துக்கான பட்ஜெட் ஒன்றை வைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் சமையல் பொருட்களால் முதல் முறையாக  சண்டை போட தொடங்கினர். 

சமையல் அறையில் ஆண்கள் உடைய பக்கத்தில் பெண்கள் எடுத்த சமையல் பொருட்கள் இருப்பதாக தர்ஷா குப்தா கண்டுபிடிக்க, அவர் ஆண்கள் அணியினரை கேள்வி கேட்டார். அப்படி ஆண்கள் பக்கம் வைக்கப்பட்ட குற்றவஹட்டனுக்கு பதிலளிக்கும் விதமாக Bigg Boss, இரு தரப்பினரும் எடுத்த சமையல் பொருட்களின் பட்டியலை அனுப்பினார். 

Bigg Boss தமிழ் 8 போட்டியாளர்கள் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மலை போல் பெரிதாக்கி, அதை content ஆக மாற்றிவருகிறார்கள். அப்படி இந்த சமையல் பொருட்கள் மாற்றம் என்ற சண்டையை தொடங்குவதற்கு முன்னரே முற்று புள்ளி வைத்தார் பிக் பாஸ். 

முதல் வாரம் Eliminate ஆகப்போவது யார்? 

Bigg Boss தமிழ் 8 போட்டியாளர்களிடம் முதல் வாரம் nominate செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களில் யார் வெளியேற போகிறார் என அவர்களின் கருத்தை தக்க காரணத்துடன் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்படி பெருவாரியான புக் பாஸ் போட்டியாளர்கள் பெண்கள் அணியில் nominate செய்யப்பட்ட Soundariya தான் என கூறினார்கள். 

ஆண்கள் பக்கம் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் தான் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று eliminate செய்யப்படுவார்கள் என கூறினார்கள். இதில் Soundariya மீது அனைவரும் கூறிய காரணம், அவர் இன்னும் இந்த Bigg Boss தமிழ் 8 சீஸனின் விளையாட்டுக்குள் நுழையவில்லை என்றும், அவரின் கருத்துக்கள் வெளியே வரவில்லை என்றும் கூறினார்கள். 

தன் மேல் வைக்கப்பட்ட இந்த கண்ணோட்டத்தை மாற்ற, சௌந்தர்யா அணைத்து போட்டியாளர்களை garden areaவில் வரவழைத்து பேச, அங்கு Arnav, Deepak மற்றும் Sunitha இவரின் கருத்தை ஏற்க மறுத்தனர். இதனால் மேலும் சௌந்தர்யாவிற்கு கிடைத்த ரசிகர்கள் பன்மடங்காக உயர்ந்தார்கள். 

போட்டா போட்டி task – நாள் 2 

முதல் நாள் கொடுக்கப்பட்ட தலைப்பில் வெற்றி பெட்ரா பெண்கள் அணியினரை வீழ்த்தி, இரண்டாவது நாளின் ‘போட்டா போட்டி’ taskல் நுழைந்தனர் ஆண்கள். நான்காவது நாளில் கொடுக்கபட்ட விவாத தலைப்பு, ‘சிறந்த பெற்றோர் தந்தையா? தாயா?’ என்பது தான். இதில் பெண்கள் பக்கம் முதலில் Jacquline அவரின் அம்மாவை எடுத்துக்காட்டாய் கூறி மிக அருமையாக தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார். அவரின் இந்த கருத்து ஆண்கள் அணியினரை கூட நெகிழ வைத்தது. 

Bigg Boss 8 Jacquline

பின்னர் ஆண்கள் பக்கம் Arnav பேசினார். அவரின் பேச்சு முடிவதற்குள் buzzer அடித்துவிட, ஆண்களின் பக்கத்தில் இருந்து அருண் விவாதம் செய்தாலும், நடுவார்களாகிய ரஞ்சித் மற்றும் முத்துக் குமரன் பெண்கள் வாய்த்த வாதத்தை பாராட்டி, சிறந்த பெற்றோர் தாய்மார்கள் தான் என தீர்ப்பு கொடுத்தனர். 

ஆண்கள் பக்கம் என்ன நடந்தாலும், யார் யாரோடு சண்டை போட்டுக்கொண்டாலும் போட்டியாளர்கள் விஷால், சத்யா, தீபக் ஆகியோர் அங்கங்கே ஒரு நகைச்சுவையாக பொழுதுபோக்கு செய்துவருகிறார்கள். அப்படி விஷால் தன்னுடைய நடிப்பால் சக போட்டியாளரான ரஜித்தின் உடல் பாவனைகளை அற்புதமாக அடித்து காட்டி ரஞ்சித்துடன் காமெடி செய்தது இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள மிகச்சில நகைச்சுவை தருணங்களில் ஒன்று. 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.