Home Bigg Boss Tamil Bigg Boss தமிழ் 8 நாள் 5: அதிரடியான Comeback கொடுத்த Sachana! 

Bigg Boss தமிழ் 8 நாள் 5: அதிரடியான Comeback கொடுத்த Sachana! 

Bigg Boss தமிழ் 8 ல் இதுவரை இல்லாத 24 மணி நேர வெளியேற்றத்தில் வீட்டை விட்டு சென்ற Sachana, மீண்டும் 5வது நாளில் வருகை தந்து போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

by Vinodhini Kumar

Bigg Boss தமிழ் 8ல் இதுவரை

இந்த சீசனில் போட்டியாளர்களாக விளையாட தொடங்கிய சிலரில் அவர்களின் விளையாட்டால் பாதிக்கப்பட்டு, சிலரின் பயனுக்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள பலரை பயன்படுத்திக்கொள்வது என முதல் வாரம் முழுவதும் நன்றாக விளையாட தொடங்கியுள்ளனர். 

 இரண்டு அணிகள், இரண்டு சமையல், இரு வேறு வாக்குவாதம், நம்பிக்கையான ஆண்கள் அணி, ஒற்றுமை இல்லாத பெண்கள் அணி என சொல்லி வைத்தது போல முதல் வாரத்தில் பெரிதாக எந்த வித அதிரடியான சம்பவங்களும் இல்லாமல் நடந்துவருகிறது Bigg Boss தமிழ் 8. 

Bigg Boss தமிழ் 8 நாள் 2 -ல் Nomination Free Pass 

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் போட்டியின் ஏதாவது ஒரு கட்டத்தில் அணைத்து போட்டியாளர்களுக்கும் அவர்களை காப்பாற்றி கொள்ள ஒரு பெரிய வாய்ப்பு வழங்கப்படும். அபப்டி Bigg Boss தமிழ் 8ல் முதல் வாரத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் இரு அணிக்கும் Nomination Free Pass அதாவது ஏதாவது ஒரு வாரத்தில் தன்னை போட்டியாளர்கள் nominate செய்யாமல் தடுக்கும் வலிமை கிடைக்கும். அந்த வகையில் இரண்டு அணிகளும் அவர்கள் தரப்பில் ஒரு போட்டியாளரை நிர்ணயிக்க வேண்டும். 

ஆண்கள் தரப்பில் அனைவரிடமும் கரணம் கேட்டு அதில் தீபக் மற்றும் அருண் உடைய வாதம் ஆற்றும் நடவடிக்கை தெளிவாக தெரிந்ததால் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவானது. 

அதுவே பெண்கள் தரப்பில் அனைவரும் தங்களுக்கு அந்த Nomination Free Pass கிடைக்க காரணங்களை குறி தேர்ந்தெடுக்க முடியாமல் திணறினர். குறிப்பாக தர்ஷா குப்தா அவருக்கு எந்த விதமான வாய்ப்பும் பெண்கள் அணியில் கொடுக்கப்படவில்லை என்றும், இந்த pass அவருக்கு முக்கியம் என வாதாடினார். 

Bigg Boss தமிழ் 8  Jacquline

உடன் சௌந்தர்யா அவருக்கான விளையாட்டை, அவருக்கு தெரிந்த வகையில் விளையாடி வருவதாக கூறினார். பெரும்பாலான வாதம் Jacquline மற்றும் Dharsha Gupta இடையே நடந்து அதில் மனமுடைந்த தர்ஷா விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். 

கடைசியாக பிக் பாஸ் இரண்டு அணியினரையும் அழைத்து அவர்களின் முடிவுகளை கேட்டாலும், இரு தரப்பிலும் தெளிவான முடிவுக்கு யாரும் வரவில்லை. இரண்டாவது முறையாக பிக் பாஸ் அவர்களிடம் முடிவை கேட்க, முதலில் ஆண்கள் அணியில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு, அருண் அவர்களுக்கு இந்த pass கிடைக்க ஒப்புக்கொண்டனர். 

காதல் சர்ச்சைகளுக்கு பிறகு Big Boss வீட்டிற்க்கு மீண்டும் காதலனுடன் வந்தாரா அன்ஷிதா.

பெண்கள் தரப்பில் அன்ஷிதா ஏற்கனவே அவர் ஒரு நல்ல போட்டியாளர் என்றும், எப்போதும் அவர் பெண்களுக்காக ஆதரவாக பேசி இந்த விளையாட்டில் தனக்கென ஒரு திட்டம் இல்லாமல் இருப்பதாகவும், வெளியே அவருக்கு கிடைத்த எதிர்ப்புகளை இந்த Bigg Boss தமிழ் 8 ல் சரிசெய்ய வேண்டும் என கூறினார். கடைசியில் Anshida மற்றும் Soundariya இடையே யாருக்கு அந்த Pass கிடைக்க வேண்டும் என பெண்களால் முடிவெடுக்க முடியாத காரணத்தால் யாருக்குமே Nomination Free Pass வழங்கப்படாது என பிக் பாஸ் அறிவித்தார். 

Sachana வின் வருகையால் தடம் புரண்ட ஆண்கள் அணி 

Bigg Boss தமிழ் 8 ல் இதுவரை இல்லாத 24 மணி நேர வெளியேற்றத்தில் வீட்டை விட்டு சென்ற Sachana, மீண்டும் 5வது நாளில் வருகை தந்து போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தினார். வீட்டிற்குள் உள்ள ஒரு ரகசிய கதவு வெளியாக வீட்டிற்குள் வடன்ஹா Sachana, அனைவரையும் Living Area க்கு வரவழைத்து வெளிடயே அவர் பார்த்த விஷயங்களை விளக்கினார். 

குறிப்பாக ஆண்கள் அணியில் போடப்படும் திட்டங்கள், தீர்மானங்கள் மற்றும் பலவற்றை கூர்ந்து கவனித்த Sachana, Sathya, Ranjith மற்றும் Vishal ஆகியோரை பலவீனமான போட்டியாளர்களாக சுட்டி காட்டினார். அவர்களின் பலத்தை மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் என்றும் அதற்கு சரியான காரணங்களையும் அதில் குறிப்பிட்டார். 

பெண்கள் தரப்பில் யார் பலவீனமான போட்டியாளர் என கேட்ட பொது அதை நான் பெண்களிடம் தனியாக சொல்லிவிடுகிறேன் என கூறி, பெண்கள் அணிக்கு  ஒரு பலமான போட்டியாளராக மீண்டும் வந்துள்ளார் Sachana. பெண்கள் தரப்பில் உள்ள குறைகள், ஆண்கள் செய்யும் திட்டங்கள், முத்துக்குமரன் உடைய விளையாட்டு நுணுக்கம், Jeffry செய்யும் தந்திரமான விளையாட்டு, ஆண்கள் திட்டமிட்ட prank -ல் Pavithra வின் பங்கு என பல முக்கியமான தகவல்களை பெண்களிடம் பகிர்ந்தார். 

யார் Real? யார் Fake? 

Sachana வின் வருகையால் மக்களின் முதல் வார கண்ணோட்டம் என்ன என ஓரளவுக்கு தெரிந்தாலும், அணைத்து போட்டியாளர்கள் பற்றியும் மேலும் பல மக்களின் கருத்தை பெயர்களை குறிப்பிடாமல் பிக் பாஸ் அறிவித்து, அதிலிருந்து ஒரு task ஐ அறிமுகப்படுத்தினார். 

அதில் இந்த Bigg Boss தமிழ் 8 ல் இதுவரை இந்த 5 நாட்களில் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டியிருப்பது யார்? முகமூடி போட்டு விளையாட்டுக்காக போலியாக நடிப்பவர் யார்? என இரண்டு ஸ்டிக்கர்கள் போட்டியாளர்களுக்கு தரப்பட்டு, அதில் சரியான காரணத்துடன் அந்த ஸ்ரிக்கர்களை அவர்களின் முகத்தில் ஒட்டவேண்டும். 

முதல் வாரத்தில் பெரிதும் வெளியே தெரியாமல், அமைதியாக உள்ளார் என nominate செய்யப்பட்ட சௌந்தர்யா நிஜமாகவே அவருடைய இயல்பான விளையாட்டை தான் விளையாடுகிறார் என அவருக்கும், முதல் நாள் தொடங்கி தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிபடையாக பேசி வரும் சுனிதாவிற்கும் நிறைய ரியல் ஸ்டிக்கர் தரப்பட்டது. 

Bigg Boss 8 Sathya

மேலும் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு fake என்ற பட்டம் தரப்பட்டது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதில் மேலும் Sathya அவரின் விளையாட்டை தொடங்காமல் காமெடி செய்து சுற்றிவருவதாக கூரப்பட்டாலும், அவரின் இயல்பு அதுதான் என குறி அவருக்கும் ரியல் என பட்டம் க்கொடுக்கப்பட்டது. 

இந்த Real மற்றும் Fake டஸ்கால் ஆண்கள் அணியில் முதல் முறியாக ஒரு விரிசல் வர தொடங்கியுள்ளது. ரவீந்தர் திட்டத்தின் படி அணைகள் செய்த Prank, ரஞ்சித்தை காப்பாற்ற செய்த திட்டம் என பெண்களிடம் அவர் கூறியதை அறிந்த சக ஆண் போட்டியாளர்கள், ரவீந்தரை கேள்வி கேட்க, அவரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர தொடங்கியுள்ளது. 

Vishal in Bigg boss 8

விஷால் கேட்ட கேள்விக்கும் சுற்றி வளைத்து பதில் சொன்ன ரவீந்தர், ஆண்கள் அவரை நம்பாமல் இருப்பது வருத்தமாக உள்ளது றன குறி வேதனைப்பட்டு அழ, அவரை போலவே Jeffry உடைய திட்டத்தை புரிந்துகொண்ட Jacquline, அவரிடம் கேள்விகளை கேட்டார். அனைத்தையும் தந்திரமாக சமாளித்த Jeffry, அவரின் தனிப்பட்ட விளையாட்டையும் ஆட தொடங்கினார். 

5 நாட்களின் முடிவில் வெளியேற்றப்பட்ட Sachana வின் வருகையால் மீண்டும் 18 போட்டியாளர்களுடன் முதல் வார eviction நோக்கி நகரும் போட்டியாளர்களின் யார் வெளியேறுவார். மக்களின் வாக்குகள் படி ரவீந்தர் மற்றும் Jacquline குருவான வாக்குகள் பெற்று கடைசி இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.