Home Bigg Boss Tamil Bigg Boss தமிழ் 8 நாள் 6: முதல் வாரத்தில் evict ஆக போவது யார்?

Bigg Boss தமிழ் 8 நாள் 6: முதல் வாரத்தில் evict ஆக போவது யார்?

இந்த Bigg Boss தமிழ் 8 சீசனுக்கான முதல் வார வெளியேற்றத்தில் கடைசி மூன்று இடங்களில் குறைவான வாக்குகள் பெற்று ரவீந்தர், ரஞ்சித் மற்றும் Jacqulineஆகியோர் உள்ளனர்.

by Vinodhini Kumar

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு வார நாட்களில் நடக்கும் எபிசோடுகளை விடவும் அதிகம் பார்ப்பது வர இறுதி எபிசோடுகள் தான். சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி, போட்டியாளர்களை திரை வழியாக சந்தித்து, இந்த ஒரு வாரத்தில் நடத்த விஷயங்களை பற்றி உரையாடி, வார இறுதியில் வெளியேற்றப்படும் நபர் யார் ஏற்றமுடிவுகள் எடுக்கப்படும்.

Bigg Boss தமிழ் 8ல் இதுவரை

Bigg Boss தமிழ் 8 நிகழ்ச்சியில் முதல் 5 நாட்களில் போட்டியாளர்கள் பல டாஸ்க் மற்றும் போட்டிகளில் போட்டியிட்டு தலைவியாக தர்ஷிகா தேர்வாகி, வீட்டிற்கான விதிமுறைகள் சிலவற்றை நடைமுறை படுத்தி, பல சண்டைகள், சச்சரவுகள் என நிறைய நடந்தது.

முதல் நாள் வெளியேறிய சாச்சனா, பெண்கள் vs ஆண்கள் என பிரிக்கப்பட்ட வீட்டில் இரண்டு சமையல், இரண்டு குழு, இரண்டு தனி விதிமுறைகள் என இந்த Bigg Boss தமிழ் 8 சீசனுக்கான தொடக்கமாக அமைந்தது. மீண்டும் வீட்டிற்குள் வந்த சாச்சனா, வெளியே மக்களின் கண்ணோட்டத்தை பகிர, போட்டியாளர்கள் மத்தியில் ஒரு Prank ஆல் வளர்ந்த பிரச்சனை என தீராமல் இருக்கும் பிரச்சனைகள் உடன் இந்த வரம் முடிந்தது.

Bigg Boss தமிழ் 8 நாள் 6 -ல் முதல் வாரம் எப்படி இருந்தது?

முதல் வார இறுதி எபிசோடான சனிக்கிழமை அன்று, முதல் நுரையாக மக்கள் மத்தியில் இந்த சீசனில் போட்டியாளர்களுடன் உரையாடினார் விஜய் சேதுபதி. இந்த எபிசோடில் கடந்த 5 நாட்களாக போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்களால் என்ன கவனித்தார்கள் என்று முதலில் கேள்வி எழுப்பினார்.

Bigg Boss தமிழ் 8 அணைத்து போட்டியாளர்களும் கிட்டத்தட்ட பேசி வைத்தது போல ‘நல்ல அனுபவமாக இருந்தது’, ‘வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது’ என பதில் கூற அதை அரை மனதாக ஏற்றுக்கொண்டார் விஜய் சேதுபதி. ஆனாலும் இந்த வாரத்தில் பல மனக்கசப்பான நிகழ்வுகள் நடந்ததை ஒவ்வொன்றாக விசாரிக்க தொடங்கினார்.

சாச்சனாவின் வெளியேற்றம் பற்றியும் அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் சாச்சனாவிடம் கேட்டார் விஜய் சேதுபதி. போட்டியாளராக சாச்சனா கூறிய வார்த்தைகளை வைத்து அவரின் வெளியேற்றம் நடந்ததை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வெளியேற்றத்துக்கு வித்திட்ட ரவீந்தர், ‘இந்த வாரம் நான் வெளியேறுவேன் என தோன்றுகிறது’ என கூறியதையும் சுட்டிக்காட்டி, சாச்சனா உடைய வார்த்தை மாதிரியே இவர் கூறியது மட்டும் உசிதமா என கேள்வி கேட்டு மடக்கினார் விஜய் சேதுபதி.

Jacquline vs விஜய் சேதுபதி

Bigg Boss தமிழ் 8 தொடங்கி முதல் 5 நாட்களில் முதல் நாள் முதல் சண்டை போடும் ஒரு போட்டியாளர் என்றால் அது Jacquline தான். முதல் நாள் வீட்டை பெண்கள் ஒருபக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் பிரித்தது தனக்கு உடன்பாடு இல்லை என ஆரம்பித்த சண்டை, பின்னர் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவருடன் பல போட்டியாளர்கள் விவாதிக்க தொடங்கினர்.

இதை பற்றி Jacquline ஐ கேள்வி கேட்ட விஜய் சேதுபதிக்கு, அவரின் கண்ணோட்டத்தில் Jacquline சொன்ன பதில் ‘நான் சண்டை போடவில்லை’ என்றும் சாச்சனா உடைய வெளியேற்றத்தில் Jacquline தன்னை காப்பாற்றி கொள்ள எடுத்த முடிவை பற்றி கேட்டதற்கு வெளிப்படையாக பதில் சொல்லாமல் ‘என்னை எப்படியும் இந்த வாரம் வெளியேற்ற நினைப்பார்கள் என தெரியும், அதனால் தன சாச்சனா உடைய பெயரை சொன்னேன்’ என கூறினார்.

இந்த பதில் விஜய் சேதுபதிக்கு புரியாமல் திரும்ப திரும்ப கேட்க, அதனால் கடுப்பான Jacquline, அவரின் பதிலை மாற்றாமல் இருந்தார். மேலும் கடத்த 5 நாட்களில் Jacquline எப்படி இந்த போட்டியை புரிந்து கொண்டார் என்பது பற்றியும் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார் விஜய் சேதுபதி.

ரவீந்தர் செய்த Prank உடைய பின்னணி

இந்த வீரம் வெளியேறாமல் தடுக்க மக்கள் மனதில் அவரின் ஈடுபாட்டை பாதிக்க ரவீந்தர் செய்த திட்டம் டான் இந்த வாரம் அதிகம் பேசப்பட்ட Prank. ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சண்டை போடும் பொது வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை தடுப்பதாகவும், கடைசியில் அதை ஒரு Prank என அறிவித்து விடலாம் எண்ணற்ற திட்டத்துக்கு பிறவித்ர, அருண், விதல் ஆகியோர் உடன் சென்றனர்.

இரண்டு மூன்று போட்டியாளர்களை காப்பாற்ற மொத்த வீட்டாரையும் பயன்படுத்துவது தவறு என்றும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சில போட்டியாளர்கள் இந்த Prank செய்தது ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறினார்கள்.

இந்த Prank பற்றி போட்டியாளர்களிடம் கேட்டபோது அனந்தி மற்றும் பலர் இவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டினார். முக்கியமாக அனந்தி அவர்கள் மிக தெளிவாக ஆண்கள் பக்கத்தில் போடும் திட்டத்தையும், ரவீந்தர் அவர்கள் வீட்டு வேலைகள் செய்வதற்கு உடல் பருமனை காரணம் காட்டினாலும், Prank செய்ய மட்டும் இப்படி தெளிவாக திட்டம் போட்டு உடல் எடையை காரணம் காட்டாமல் விளையாண்டதை பற்றி பேசினார்.

Bigg Boss தமிழ் 8 Boys Prank

அனந்தி பேசியதை மக்கள் ஏற்றாலும், இவரின் பேச்சால் மனமுடைந்த ரவீந்தர், எபிசோட் முடியும்போது அவரின் உடல் எடையால் இதுவரை வீட்டில் யாரையும் வேலை வணங்கவில்லை என கூறினார். அனந்தியும் ரவீந்தர் பற்றி கூறியது அவரை பாதித்துள்ளது நினைத்து வருந்தினார்.

ஞாயிறு ஒளிபரப்பாகவும் எபிசோடில் தான் யார் இந்த வாரத்தில் வெளியேறுவார் என்று தெரியவரும். இப்போதைக்கு கடைசி மூன்று இடங்களில் குறைவான வாக்குகள் பெற்று ரவீந்தர், ரஞ்சித் மற்றும் Jacqulineஆகியோர் உள்ளனர். இவர்களில் முதல் வாரம் வெளியேறப்போவது யாராக இருந்தாலும், அது இந்த போட்டியின் போக்கை திருப்பும் என நம்பலாம்.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.