Bigg Boss தமிழ் 8 ல் முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரத்தின் ஆரம்பத்தில் ஒரு போட்டியாலகிற் குறைவாக இருக்கும் நிலையில், ஒரு Captaincy டாஸ்க், பல Physical டாஸ்க் என இரண்டு தரப்பிலும் அவரவர்களின் விளையாட்டை விளையாட தொடங்கியுள்ளனர்.
ரவீந்தர் eliminate ஆனதுக்கு பிறகு, ஆண்கள் அணியினரின் பக்கம் பலவீனமாக அமைந்தது. இப்போது ஆண்கள் அணியினர் தங்களுடைய விளையாட்டை முரட்டுத்தனமாக விளையாட தொடங்கியுள்ளதாக மக்கள் கருத்து வைக்க, பெண்கள் பக்கம் நட்புறவு சற்றே வளர்ந்துள்ளது.
Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
Bigg Boss தமிழ் 8 ல் முதல் eviction நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது வாரத்துக்கான ஒரு பெரிய காரணியாக அமைந்தது ரவீந்தர் கூறிய அறிவுரை தான். அதில் அணைத்து போட்டியாளர்களை பற்றியும் அவர் வெளிப்படையாக பேசியதும், அதற்கு இந்த வாரம் இவர்கள் அதை புரிந்துகொண்டு செயல் போடுவார்களா? இல்லை தங்களின் தனிப்பட்ட விளையாட்டை வைத்து போட்டியில் நகருவர்களா?
Bigg Boss தமிழ் 8 நாள் 8 -ல் நடந்தவை
ஆண்கள் அணியில் மீண்டும் இணைந்துள்ள முத்துக்குமரன், ரவீந்தர் உடைய இடத்தை நிரப்பி வருகிறார். பெண்கள் அணிக்கு எதிராக பல திட்டங்களை வகுத்து வரும் முத்துக்குமரன், இந்த வார swap டாஸ்க்குக்கு யார் அனுப்புவது, nominate செய்வது யாரை? என்ற முடிவுகளை எல்லாம் எடுத்து வந்தார்.
பெண்கள் பக்கம் இப்போதைக்கு வலிமியாயாக விளையாடி வருபவர் சௌந்தர்யா என்றும், அவரை இந்த வாரம் அனைவரும் nominate செய்வது என முடிவெடுத்தார் முத்துக்குமரன். அவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அணைத்து அணைகளும் தலை ஆட்ட, தர்ஷ குப்தா இந்த போட்டியில் இருக்க வேண்டும் என்றும், அவர் தான் இந்த வீட்டின் Joker என்றும் குறிப்பிட்டார் முத்துக்குமரன்.
இவரின் எடுத்துக்காட்டுதலுக்கு மாற்றாக ஆண்கள் பக்கம் எதுவும் பேசாமல் இருந்ததும், அனைவரும் ஒன்று சேர்ந்து சௌந்தர்யாவை nomination பரிந்துரையில் சேர்க்க திட்டம் திட்டுவதும் பிக் பாஸ் உடைய விதிகளை மீறும் செயலாக கருதப்படுமா என்பது தெரியப்படும்.
தமிழ் பேச்சாளர் Muthu Kumaran Bigg Boss 8 நிகழ்ச்சியில் இணைந்தார்!
அடுத்ததாக பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடன் மக்களின் கருத்து ஒன்றை தெரிவித்தார். அகில் இந்த Bigg Boss 8 உடைய title winner பட்டத்தை பெறப்போவது ஒரு ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு, மக்கள் ஆண் தான் என பெருவாரியாக வாக்களித்திருப்பது தெரிவிக்கப்பட்டது.
தலைவரா? தலைவியா? டாஸ்க்
Bigg Boss தமிழ் 8 ல் இந்த இரண்டாவது வாரத்தின் கேப்டன் யார் என முடிவெடுக்கும் போட்டி ஒரு physical task ஆக அமைந்தது. இந்த வாரத்திற்கான போட்டியில் பெண்கள் அணியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் ஜாக்குலின், சௌந்தர்யா மற்றும் பவித்ரா ஜனனி. ஆண்கள் அணியிலிருந்து தீபக், சத்யா மற்றும் விஷால் ஆகியோர் போட்டியில் களமிறங்கினர்.
ஒரு மரக்கட்டை மேல் கயிற்றை பிடித்து தொங்கும் போட்டியாளர்கள். வெளியே ஒரு இராதான்னு நிற தாயம் வைக்கப்பட்டு, சாச்சனா மற்றும் ஜெப்ப்பிரி அதை உருட்ட, அதில் நீல நிறம் வந்தால் ஆண்கள் நிற்கும் ஒரு கட்டையை இழுக்க வேண்டும். சிவப்பு நிறம் வந்தால் பெண்கள் நிற்கும் ஒரு கட்டையை இழுக்க வேண்டும். கடைசியில் நிற்பவர் தான் இந்த வார கேப்டன்.
அதில் கடைசி வரை பவித்ரா மற்றும் சத்யா ஒரே கட்டையில் நிற்க, தன்னுடைய அசாதாரண உடற்கட்டல் பவித்ராவின் தீவிரமான போட்டியையும் தாண்டி , ஆண்கள் அணியின் சத்யா இந்த வாரத்தின் தலைவராக தீர்மானிக்கப்பட்டார்.
இந்த டாஸ்க் ஒருபக்கம் நடக்க பெண்கள் மத்தியில் இரண்டு சண்டைகள் ஆரம்பமானது. முதலில் ஜாக்குலின் மட்டும் விளையாட்டில் முற்சி செய்து தீபக்கை தடுத்ததாகவும், சௌந்தர்யா எதுவும் பெரிதாக செய்யவில்லை என்றும் ஒரு சண்டை உருவானது.
இரண்டாவதாக தர்ஷிகா மற்றும் சுனிதா இடையே திடீர்ரென இந்த போட்டியில் எடுத்த ஒரு முடிவை வைத்து ஒரு சண்டை போடப்பட்டது. இதற்கு இடையில் அங்கு இந்த வார தலைவர் பதவிக்காக பவித்ரா மற்றும் சத்யா போட்டியிட்டு கொண்டிருந்தனர்.
அன்ஷிதா vs முத்துக்குமரன்
பெண்கள் அணியில் இன்று நடந்த swap டஸ்கில் தீபக் சேர்ந்துள்ளார். அதே போல் ஆண்கள் பக்கம் தர்ஷா குப்தா அனுப்பப்பட்டார். இருவரும் அவர்களின் பிரதான அணிக்காக விளையாடி கொடுள்ள நிலையில், தீபக், அன்ஷிதா மற்றும் அனந்தி ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ஆண்கள் தரப்பில் முத்துக்குமரன் மற்றும் ஜெபரி இருவரும் அந்த இடத்துக்கு வந்தனர்.
அப்போது முத்துக்குமரன் உடைய நடவடிக்கை பற்றியும், அவர் போன வாரத்தில் இருந்தது நடிப்பாக தெரிவதும், இரண்டாவது அவரத்தில் மோசமாக விளையாடுவதாகவும் அன்ஷிதா சுட்டி காட்டினார். இதற்கு முத்துக்குமரன் ‘நான் அப்படி தான், முதலில் இருந்தே நான் மோசமானவன் தான் ‘ என பதில் கூற அன்ஷிதா இதற்கு கோபமாக கத்த தொடங்கினார்.
இந்த சண்டை பற்றி இருவர் மீதும் தவறு உண்டு என்றும், இருவரும் அவர்களின் உணர்ச்சிகளை இந்த போட்டியில் முன்னேற பயன்படுத்தியிருப்பதும் மக்கள் கணித்துள்ளனர்.
இந்த வார nomination பட்டியலில் இருப்பவர்கள்
Bigg Boss தமிழ் 8 ல் முதல் வாரத்தை விட இந்த வாரம் ஒட்டுமொத்தமாக 10 போட்டியாளர்கள் eviction பரிந்துரையில் உள்ளனர். அதில் 6 ஆண்களும் 4 பெண்களும் உள்ளனர். இந்த வீட்டில் இப்போது உள்ள போட்டியாளர்களில் ஆண்கள் இந்த வாரம் பெண்களை மட்டுமே nominate செய்ய வேண்டும் எட்ன்றும் பெண்கள் ஆண்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அப்படி இந்த வாரம் நோமின்டே ஆகியுள்ளவர்கள் ரஞ்சித், ஜெபிரி, முத்துக்குமரன், விஷால், அர்னவ், சாசன, சௌந்தர்யா, தீபக், தர்ஷா, ஜாக்குலின் ஆகியோர் eviction பரிந்துரையில் உள்ளனர்.