ஏறத்தாழ 100 நாட்கள் ஒன்றாக ஒரே வீட்டில் முன் பின் தெரியாதவர்கள் சிலரை ஒன்றாக வாழ செய்து, அதில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறுவது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை போட்டி விதி. ஆனால் Bigg Boss தமிழ் 8ல் பெரும்பாலான போட்டியாளர்கள் ஏற்கனவே உடன் பணியாற்றியிருப்பதும், பழகியிருப்பதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதும் இந்த சீஸனின் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.
Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
இரண்டாவது வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யா, இரண்டு தரப்பினருக்கும் சரி சமமாக செயல்பட தொடங்கியுள்ளார். ஆண்கள் அணிக்கு புலம்பெயர்ந்த தர்ஷா குப்தா, திட்டமிட்ட படியே அவரின் விளையாட்டை விளையாடி ஆண்களின் திட்டங்களை முறியடிக்க தொடங்க, பெண்கள் பக்கம் சென்ற தீபக் சத்தமில்லாமல் இருக்கும் இடமும் தெரியாமல் வீட்டில் ஒரு நபராக நடமாடி வருகிறார்.
இரண்டாவது வாரத்தின் முதல் நாளில் சமையல் பொருட்கள் வாங்கும் டாஸ்கில் அணைகள் மற்றும் பெண்கள் எடுத்த பொருட்களின் விலை ஒரு டாஸ்க் கொண்டு மதிப்பிடபட்டது. இந்த டஸ்கில் வென்ற பெண்கள் அணியினர் சமையல் பொருட்களையும் அந்த பணமதிப்பிற்குள் எடுத்து வந்தனர். ஆண்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கு அதிகமாக எடுத்து வந்ததால் அவர்களின் இந்த வார சமையல் பொருட்களின் நிலை கேள்வி தான்.
Bigg Boss தமிழ் 8 நாள் 9 -ல் நடந்தவை
இந்த Bigg Boss தமிழ் 8 உடைய பிரதான விதிமுறையான ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் வீட்டை பிரித்து விளையாட வேண்டும் என்பதில் தான் வீட்டின் விதிமுறையும் அடக்கம். அப்படி அணைகள் தரப்பில் சமையல் அறையில் உள்ள தண்ணீர் எடுக்க ரவிந்தரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது விதிமுறையாக வைத்தனர் ஆண்கள். ஆனால் ரவீந்தர் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதால் இந்த வாரத்திற்கான பொறுப்பை யாரிடமும் ஆண்கள் தரவில்லை.
பெண்கள் தண்ணீர் எடுக்க வேண்டுமென்றால் யாரிடம் கேட்க வேண்டும் என்றும் தெளிவாக முடிவெடுக்கப்படவில்லை. அதனால் ஜாக்குலின், சௌந்தர்யா ஆகியோர் இதை பற்றி கேள்வி கேட்டாலும், ஆண்கள் தரப்பில் எதிர் வாதம் தான் வைக்கப்படுகிறது. மேலும் முத்துக்குமரன் பெண்களின் வார்தைகளை அவருக்கு ஏற்றவாறு மாற்றி பேசுவதும் பெண்களால் கண்டிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் உள்ளே சமையல் அறையில் ஆண்கள் தரப்பில் யாரும் அமரவில்லை என்ற நிலையில் வெளியே பொதுவெளியில் அமர்ந்திருந்த தீபக் இடம் கேட்டு ஜாக்குலின் தண்ணீர் எடுக்க செல்ல, ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘யாரிடம் அனுமதி கேட்டு வீட்டிற்குள் நுழைந்திர்கள்’ என கேட்டனர்.
ஆண்கள் சார்பாக சமையல் அறையின் பொறுப்பாக யாரும் இல்லாத காரணத்தால் சென்றேன் என ஜாக்குலின் கூற அங்கு ஒரு சண்டை ஆரம்பித்தது. அப்போது ஆண்கள் தரப்பில் முத்துக்குமரன், அர்னவ் மற்றும் ஜெபிரி ஆகியோர் எடக்குமொடக்காக பேச, பெண்கள் தரப்பில் சௌந்தர்யா அதை சுட்டி காட்டினார். யாரிடமும் அனுமதி வாங்காமல் ஆண்கள் வீட்டின் பக்கம் நுழைந்ததற்கு தண்டனையாக ஒரு ஓரத்தில் சுவரை பார்த்து யாரிடமும் பேசாமல் ஜாக்குலின் உட்கார வேண்டும் என கூறினார்கள்.
பாத்திரம் விலக்கியதற்கு தண்டனையா?
பெண்கள் பக்கத்தில் யாரும் சமையல் அறைக்குள் வந்தால் எந்த வேலைக்காக வந்தார்களோ அதை மட்டுமே செய்யவேண்டும் என்பதை தாண்டி சௌந்தர்யா பாத்திரம் விலக்கும் தொட்டியில் இருந்த இன்னொரு பாத்திரத்தை சுத்தம் செய்ய முயற்சித்தார் என சுட்டி காட்டி அவருக்கு தண்டனை தர நினைத்தார் முத்துக்குமரன்.
இந்த பிரச்சனை பெரிய சண்டையாக வெடிப்பதற்குள் இந்த வார தலைவராக உள்ள சத்யா, இரு தரப்பு வாதத்தையும் கேட்டு சௌந்தர்யாவை ஆண்கள் பக்கத்தில் ஒரு ஓரத்தில் அமைதியாக உட்கார சொல்லி தண்டனை கொடுக்க, தர்ஷிகா சொல்லி தான் சௌந்தர்யா பாத்திரம் விளக்கினார் என்பதால் அவருக்கும் இதே தண்டனை கொடுத்து வேறு இடத்தில அமர வைத்தனர்.
Bigg Boss 8 தமிழ் – புது போட்டியாளராக சேரும் Soundariya Nanjundan!
ஆண்கள் பக்கம் சில நேரத்திற்கு பிறகு ஜெபிரி சௌந்தர்யாவை விடுவிக்க, அதை மற்ற ஆண்கள் எதிர்த்தனர். சௌந்தர்யா உடன் தண்டனை பெற்ற தர்ஷிகாவை அர்னவ் வெளியிட, இதனால் ஆண்களுக்குள் இத்தனை நாட்களாக இருந்த ஒற்றுமை உடைய தொடங்கியது.
2ம் வாரம் சமைக்க 2 பெண்கள் மட்டுமே
Bigg Boss தமிழ் 8 -ல் ஒவ்வொரு வாரமும் ஆண்கள் பக்கம் சமையல் அறை இருப்பதால் அவர்கள் வீட்டிற்குள் வந்து சமைக்க ஆண்களால் தேர்ந்தெடுக்க படும் பெண் போட்டியாளர்கள் மடுட்மே உள்ளே சென்று சமைக்க முடியும். அப்படி இந்த இரண்டாவது வாரத்தில் யார் சமைப்பது என பிக் பாஸ் முடிவெடுக்க சொன்னதால், ஆண்கள் பெண்களில் சுனிதா மற்றும் ஜாக்குலினை தேர்ந்தெடுத்தனர்.
ஒரு வாரம் முழுவதும் இருவர் மட்டுமே சமைப்பது ஏற்க முடியாதது என பெண்கள் வாதாட, அதற்கு வீட்டின் தலைவர் சத்யா செவி சாய்த்து ஆண்களிடம் போராடி மூன்றாவதாக சாச்சனாவை அனுமதித்தனர். இந்த தேர்வு எப்படி நடந்தது, யார் தேர்வாகிறார்கள் என்பதை தீர்மானிக்கு ஆண்கள் குழுவில் இப்ப்போது தர்ஷா குப்தா இருப்பதும், அவரின் மேல் நம்பிக்கை இல்லாத ஆண்கள் அவரை ஒதுக்க நினைப்பதையும் புரிந்துகொண்ட தர்ஷா குப்தா, அதை தட்டி கேட்டார்.
மேலும் ஜெபிரி ஆண்கள் பக்கம் தீர்மானிக்கு போட்டி நுணுக்கங்களை தர்ஷா குப்தா பெண்களிடம் சொல்வதை பார்த்து கோபப்பட, அந்த சண்டையால் வீட்டில் மேலும் கலவரமானது. சமைக்க செல்லும் 3 பெண் போட்டியாளர்கள் தான் இந்த வாரம் முழுவதும் பாத்திரமும் விளக்க வேண்டும் என்பதை ஏற்காத பெண்கள், அதையும் எதிர்த்தனர்.
Innaikku MK konjam jaasthi ya pannitaaru. Return ticket confirm than. #Muthukumaran #VijayTelevision #BiggBossTamil8 #bb8tamil
— Yugendran Vasudevan (@singeryugendran) October 15, 2024
Source : X (singeryugendran)
Bigg Boss தமிழ் 8 -ல்ஆண்கள் உடைய வீட்டிற்குள் நுழைய தான் அனுமதி கேட்டு டாஸ்க் செய்யவேண்டும் தவிர, சமைக்க ஆண்களின் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறைகளில் இல்லை. இருப்பினும் ஜாக்குலின் வீட்டிற்குள் சமைக்க செல்வதை அனுமதியில்லாமல் அவர் செய்தார் என கூறி மீண்டும் அவரை தனியாக யாரிடமும் பேசாமல் இருக்கவேண்டும் என ஆண்கள் தண்டனை கொடுத்தனர்.
இதற்கு முத்துக்குமரன் முழுமையாக போட்டியை தன்னுடைய கட்டுப்பாட்டில் திருப்பி ஆண்களையும் அவரின் சொல்லுக்கு செயல்பட வைக்க, ரஞ்சித் அவர்களும் இந்த வீட்டில் இதுவரை இல்லாத முகத்தை வெளிக்காட்டினார். இதனால் மனமுடைந்த ஜாக்குலின் ஓரமாக உட்கார்ந்து அழுக தொடங்க, இதையும் ஒரு வாதமாக எடுத்துக்கொண்டு முத்துக்குமரன், ‘இப்படியெல்லாம் அழுதால் எப்படி விளையாடுவது’ என கேள்வி எழுப்பினார்.
பாத்திரம் கழுவ உபயோகிக்கப்படும் liquid ஐ ஆண்களிடம் கேட்காமல் ஜாக்குலின் எடுத்துச்சென்றது தவறு என பெண்கள் தரப்பிலும் அனந்தி மற்றும் சுனிதா தனியாக பேசிக்கொள்ள, ஜாக்குலின் செய்தது அணைத்து பெண்களுக்காகவும் தான் என அவருடன் ஆண்கள் வீட்டிற்குள் சாச்சனா மற்றும் பவித்ரா சென்றனர். இது தப்பான விளையாட்டு என குறி அவர்களை திரும்ப பெண்கள் பக்கம் அனுப்பிய ஜாக்குலின், முத்துகுமாரனின் வாதத்தையும், தலைவராக சத்யா அவரின் வாத்திய கேட்க மறுக்கிறார் என்றும் சொல்லி மனமுடைந்தார்.
விட்டு வேலைகள் டாஸ்க் : உள்ள வெளிய
Bigg Boss தமிழ் 8 ன் இரண்டாவது வாரத்திற்கான அணைத்து விட்டு வேலைகளும் செய்யப்போவது ஆண்களா? பெண்களா? என தீர்மானிக்கும் போட்டி தன இந்த உள்ள வெளிய டாஸ்க். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் தரப்பில் அனைவரும் போட்டியிட வேண்டும். எதிர் அணியில் உள்ள போட்டியாளர்களின் உருவ படத்தை 6 துண்டாக பிரித்து இருக்கும். இரண்டு தரப்பிலும் ஒருவர் அந்த துண்டுகளை ஒன்று சேர்த்து, யாருடைய யாருடைய படத்தை முடிகிறார்களோ அந்த போட்டியாளர் விளையாட்டிலிருந்து விளக்க வேண்டும்.
அப்படி எந்த அணி அணைத்து எதிர் அணி போட்டியாளர்களை வெளியேற்றுகிறார்களோ, அவர்கள் தான் இந்த போட்டியின் வெற்றியாளர்கள். தோற்றுப்போன அணியினர் இந்த வாரம் முழுவதும் வீட்டை சுத்தப்படுத்துவது, பாத்திரம் விளக்குவது, கழிவறையை சுத்தப்படுத்துவது ஆகிய வேலைகளை செய்ய வேண்டும்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஆண்கள் சேர்ந்து பெண்களிடம் பலதரப்பட்ட தண்டனைகளையும், கேள்விகளையும் முன்வைத்து சண்டையாக வெடித்ததாலும், கடந்த வாரமும் பெண்கள் இந்த விட்டு வேலைகள் டாஸ்கில் தோற்றத்தாலும் பிக் பாஸ் பெண்களிடம் இந்த முறை தவற விடாமல் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதே போல் buzzer ஒலித்ததும் பெண்கள் பக்கம் அதிரடியான வேகத்துடன் ஒவ்வொரு ஆன் போட்டியாளரின் முகத்தியும் சேர்த்து வரிசிக்காயாக அவர்களை வெளியேற்றினர். அணைகள் தரப்பில் ஒன்றிரண்டு பெண் போட்டியாளர்களை வெளியேற்றினாலும், பெரிய வித்தியாசத்தில் பெண்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.
இதனால் இந்த வாரத்திற்கான அணைத்து விட்டு பணிகளையும் ஆண்கள் தங்களுக்குள் பிரித்து கொண்டு வேலை செய்ய்ய வேண்டும் என கூறப்பட்டது. இரண்டாவது வரத்தின் தொடக்கத்திலேயே இரண்டு அணியின் விளையாட்டில் பேறில்லையா மாற்றம் ஏற்பட்டுள்ளதும், அணைகள் அணியினரை முழுமையாக முடக்கி, தங்களின் ஒருமையான விளையாட்டால் ஒற்றுமையை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர் பெண்கள்.