Home Bigg Boss Tamil Bigg Boss Tamil சீசன் 8 -ல் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார் Shaalin Zoya! 

Bigg Boss Tamil சீசன் 8 -ல் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார் Shaalin Zoya! 

சமீபத்தில் 'கண்ணகி' படத்தில் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் Shaalin Zoya.

by Vinodhini Kumar

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைய போகும் நிலையில், அடுத்ததாக Bigg Boss Tamil சீசன் 8 நிகழ்ச்சி தொடங்குகிறது. அக்டோபர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். 

உலகநாயான் கமல் ஹாசன் 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை வழங்கியதை அடுத்து, இந்த சீசன் நடிகர் விஜய் சேதுபதி அவரின் இடத்தை நிரப்பவருகிறார். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய பல தகவல்கள் வெளியானது. அதன் படி விஜய் டிவியில் ‘செல்லம்மா’ சீரியலில் நடித்த நடிகை அன்ஷிதா பங்கேற்கிறார் என பேசப்பட்டது. 

Shaalin Zoya

Bigg Boss Tamil சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் போட்டியாளர்கள் பற்றிய தகவலால் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், சமீபத்தில் நடிகை Shaalin Zoya இணையவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் கடந்த வாரம் நடந்த Wild Card சுற்றில் Shaalin Zoya பங்கேற்றார். அவரிடம் கோமாளியாக உள்ள நகைச்சுவையாளர் குரேஷி, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அவர் குக் வித் கோமாளியின் பல வாரங்கள் நல்ல content கொடுத்தவர். 

யார் இந்த Shaalin Zoya?

கேரளாவில் மலப்புரம் பகுதியில் பிறந்து சிறு வயது முதலே பல மலையாள சீரியல்களில் நடித்தவர் நடிகை Shaalin Zoya. 27 வயதாகும் நடிகை, நடன கலைஞர், இயக்குனரான Shaalin Zoya, தமிழில் 2016ம் ஆண்டு கலையரசன் உடன் ‘ராஜா மந்திரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2023ல் வெளியான ‘கண்ணகி’ படத்திலும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்தார்.  

பெயர்Shaalin Zoya
வயது27
நடித்துள்ள படங்கள்‘ராஜா மந்திரி’, ‘கண்ணகி’
புகழ் பெற்றதுகுக் வித் கோமாளி சீசன் 5
Shaalin Zoya to jjoin Bigg Boss Tamil Season 8

பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு Selling Point ஒன்றை வைத்து மக்களை ஈர்த்து, பார்வையாளர்களை அதிகரிப்பது வழக்கம். அப்படி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷாலின் ஜோயா பல வாரங்களாக இருந்துவந்தார். இவரை வைத்து நிகழ்ச்சியின் போக்கு மாறுவதையும், திறமையான போட்டியாளர்கள் வெளியேறுவதால் பல  எழுந்தது. 

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார். இதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் அவர் செய்யும் நகைச்சுவைக்கும், அவர் மெனக்கெட்டு பேசும் தோரணையால் இணையத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. 

Shaalin Zoya மீண்டும் குக் வித் கோமாளிக்கு வருகிறார்! வெளியானது இந்த வார Promo

மேலும் இவர் Youtuber TTF வாசன் என்பவரை காதலித்து வருகிறார். இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளது. Zoya எப்படியும் நல்ல Content கொடுப்பார் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியில் அவர் சேர்க்கப்படுவார். 

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வாழ்க்கை நடப்புகளை பதிவிட்டுவருகிறார். 1.6 மில்லியன் followers கொண்டு தற்போது தனக்கென நல்ல ரசிகர் பட்டாளத்தை வளர்ந்துள்ள Zoya, கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல ஆதரவுடன் நீண்ட நாள் தாக்குபிடிப்பர் என்பது உறுதி. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.