Home Bigg Boss Tamil Bigg Boss சீசன் 8 -ல் wild card எண்ட்ரி தந்த 6 பேர், புது ஆட்டம் ஆரம்பம்

Bigg Boss சீசன் 8 -ல் wild card எண்ட்ரி தந்த 6 பேர், புது ஆட்டம் ஆரம்பம்

சீசன் 8 -ல் 4 வாரங்களுக்கு பிறகு ஆட்டத்தை சுவாரஸ்யமாக்க 6 போட்டியாளர்கள் wild card -ல் எண்ட்ரி தந்துள்ளனர். 

by Sudhakaran Eswaran

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் Bigg Boss சீசன் 8 நிகழ்ச்சி, 18 போட்டியாளர்களை கொண்டு, கடந்த அக்டோபர் 6 -ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவருகிறது. இதற்கு முன்பு நடந்த 7 சீசன்கள் கமல் ஹாசன் தொகுத்து வந்த நிலையில், சீசன் 8 -ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss சீசன் 8 -ல் முதல் வாரம் ரவீந்தர், இரண்டாவது வாரம் அர்னவ், மூன்றாவது வாரம் தர்ஷா குப்தா என ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் ஆகி வெளியேறினர். 4-வது வாரத்தில் ஒருவர் எலிமினேட் ஆகி வெளியேறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என விஜய் சேதுபதி ட்விஸ்ட் தந்தார். 

எலிமினேஷன் இல்லாததால் தீபாவளி பரிசாக பிக் பாஸ் வீட்டிற்கு Wild Card மூலம் புது போட்டியாளர்களை அனுப்பிவைத்துள்ளனர். Bigg Boss சீசன் 8 Wild Card -ல் எண்ட்ரி தரவுள்ள சில பிரபலங்கள் என சமூக வளைத்தளத்தில் குறிப்பிட்ட சில நபர்களை கூறிவந்தார். 

ஆனால் அதற்கு மாறாக வேறு சில பிரபலங்கள் Wild Card எண்ட்ரி தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். ரியா தியாகராஜன், ரயான், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட், ஷிவா குமார், ராணவ் என 6 பிரபலங்கள் தற்போது Big Boss சீசன் 8 -ல் Wild Card எண்ட்ரி தந்துள்ளனர். 

ரயான் – நடிகர், மாடல்:

Bigg Boss சீசன் 8 Wildcard contestant Rayan

பிக்பாஸ் வீட்டுக்கு Wild Card எண்ட்ரி தந்த ரயான், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” என்ற  சீரியலில் வில்லனாக நடித்தவர். அதே சீரியலில் ஹீரோவாக நடித்த தீபக் பிக்பாஸ் வீட்டில் இருந்துவரும் நிலையில், அவருக்கு சர்ப்ரைஸாக எண்ட்ரி தந்துள்ளார் ரயான். ரயான் வருகையால் ஹீரோ, வில்லன் என ஆட்டம் மாற வாய்ப்புள்ளது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பனிவிழும் மலர்வனம்” தொடரிலும் நடித்து வருகிறார். 

ரியா தியாகராஜன் – மாடல்:

Bigg Boss சீசன் 8 Wild Card எண்ட்ரி தரும் மற்றொரு போட்டியாளர் ரியா தியாகராஜன். மாடலாக இருந்து வரும் இவர், 2023 -ஆம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்துகொண்டு 3 -வது இடம் பிடித்துள்ளார். மேலும் தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். சில சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ரிவ்யூ செய்துள்ளார். 

மஞ்சரி நாராயணன் – சமூக வலைத்தள பேச்சாளர்:

சமூக வலைதள பேச்சாளரான மஞ்சரி இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை பார்த்து வருபவர். சமூக வலைத்தளங்களில் தனது பேச்சு மூலம் கவனம் பெற்று வருகிறார். மேலும் இந்த சீசனில் போட்டியாளராக இருக்கும் முத்துக்குமரன் உடன் பல மேடைகளில் பேசியுள்ளார். இவரின் வருகை முத்துக்குமாருக்கு எப்படி இருக்க போகிறது என்றும் வரும் வாரங்களில் பார்க்கலாம். 

தமிழ் பேச்சாளர் Muthu Kumaran Bigg Boss 8 நிகழ்ச்சியில் இணைந்தார்! 

வர்ஷினி வெங்கட் – நடிகை, மாடல்: 

மற்றொரு பெண் போட்டியாளராக Bigg Boss சீசன் 8 -ல் எண்ட்ரி தந்த வர்ஷினி நடிகை, பாடகி, பாடலாசிரியர் என பல திறமைகள் கொண்டவர். மேலும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். வர்ஷினி வெங்கட் “Miss Golden Face of South India” என்ற அழகிப் போட்டியில் கலந்துகொண்டு 3 -வது இடம் பிடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் “கண்ணான கண்ணே” சீரியலிலும் நடித்துள்ளார். 

ஷிவகுமார் – நடிகர்: 

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் ஷிவகுமார் சீசன் 8 -ல் wild card எண்ட்ரி தந்துள்ளார். இவரது மனைவி சுஜா வருணியும் பிக்பாஸ் சீசன் 1 -ல் வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி தந்தவர். மேலும் ஷிவகுமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “big boss ஜோடிகள்” சீசன் 2 -ல் கலந்துகொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார். 2008 -ல் வெளியான “சிங்கக்குட்டி” என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். 

ராணவ் – மாடல்:

நடிகர் ராணவ் சில படங்களில், ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.  மாடலாக இருந்து வரும் ராணவ் “Break Fast” என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். செல்லமே, ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் காந்தி கிருஷ்ணா 24 வருடங்களுக்கு பிறகு “Break Fast” படத்தை எடுத்துள்ளார்.  

இதற்கு முன்னர் நடந்த 7 சீசன்களில் A, R, M என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் Bigg Boss சீசன் 8 -ல் இதுவரை இருந்த போட்டியாளர்களின் ரஞ்சித் மட்டுமே R எழுத்தில் போட்டியாளராக இருந்து வருகிறார்.

முதல் மூன்று சீசனில் ஆரவ், ரித்திகா, முகென் என்றும், அடுத்த மூன்று சீசனில் ஆரி, ராஜு, முகமது அசீம், என்றும்,  ஏழாவது சீசனில் அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளதால் இந்த சீசனில் R என்ற எழுத்தில் தொடங்கும் நபர் வெற்றிபெறுவார் என சிலர் கணித்து கூறிவருகின்றார். 

அந்த வகையில் புதிதாக வந்த ரியா, ராயன், ராணவ் மற்றும் ஏற்கெனவே இருந்து வரும் ரஞ்சித் என இந்த 4 போட்டியாளர்களில் ஒருவர் வெற்றிவாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர்.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.