Home Bigg Boss Tamil Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள்!! மற்றும் புகைப்படம்.

Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள்!! மற்றும் புகைப்படம்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் Bigg Boss சீசன் 8-இன் போட்டியாளர்கள் என இணையத்தில் வைரலாகி வரும் பல பிரபலங்களின் பட்டியல்.

by Shanmuga Lakshmi

பெரிய திரைகளில் கண்டு கொண்டாடப்பட்டு வந்த உலக நாயகன் கமல்ஹாசன், Bigg Boss தமிழ் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தொலைக்காட்சி வாயிலாக அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் குடி புகுந்தார். 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஏழு சீசன்களை கடந்து வெற்றிகரமாக எட்டாவது சீசனில் அடி எடுத்து வைக்க உள்ளது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் அவர்கள், அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி உள்ள காரணத்தால் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழில் இனி அவர் தொகுத்து வழங்க இயலாது என்றும் அதிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அறிக்கை விட்டிருந்தார். இதை அடுத்து அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதை குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள – முழு விவரம் இதோ

வரவிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-இல் கலந்துகொள்ள கூடிய போட்டியாளர்களின் விவரங்களை காணலாம்,

1. ரவீந்தர் சந்திரசேகர்

Fatman ரவீந்தர் Bigg Boss Tamil 8
Source: Ravindhar(Twitter)

திரைப்பட தயாரிப்பாளர், youtube-ல் திரைவிமர்சனம் மற்றும் Big Boss தமிழ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் பல காணொளியில் பங்கேற்றுள்ளார். “நலனும் நந்தினியும், கொலை நோக்கு பார்வை, முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம், சுட்ட கதை” என பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனம் “Libra Productions” என்ற பெயரில் தயாரிப்பு நடத்தி வருகிறது. 

2. சஞ்சனா நமிதாஸ் 

Sanchana Namidas
Source: Sanchana Namidas (Instagram)

இந்த ஆண்டின் சிறந்த படமான “மகாராஜா” திரைப்படத்தில் நடித்த ஸாச்சனா Big Boss தமிழ் சீசன் 8-ல் உள்ள young போட்டியாளர் ஆகும். பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்து வெள்ளித்திரையில் அவர் தோன்றிய முதல் படம் 2023-ல் வெளியான “ஆகஸ்ட் 16, 1947”.

3) தீபக்

Deepak Dinakar Instagram
Source: Deepak DInakar(Instagram)

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு நபர் நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆன தீபக். 1999-ல் தனது பயணத்தை சின்னத்திரையில் தொடங்கினார். மாடலிங் செய்து கொண்டிருந்த வேளையில் சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி, என பல முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2006-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி No.1” நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆக அறிமுகமாகி அவரின் திரைப்பயணத்திற்கு பெரும் உதவி செய்தது. 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட தீபக் தற்போது  Big Boss தமிழ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

4.தர்ஷிகா

Tharshika
Source: Tharshika(Instagram)

Classical டான்சர், நடிகை, மாடல், என பல பரிமாணங்கள் கொண்ட அடுத்த போட்டியாளர் தர்ஷிகா. வில்லியாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அவரின் கடின உழைப்பால் “தென்றல் வந்து என்னை தொடும்” மெகா சீரியலில் நடித்து கடந்த வருடம் விஜய் television விருதில் “சிறந்த துணை நடிகை”-க்கான விருதை வென்றுள்ளார். இதோடு “யாக்கை apparel” என்ற ஆடை நிறுவனம், “Magic Spell Events” என்ற இரு நிறுவனத்தின் founder ஆகும்.

5) சுனிதா

Sunita Gogoi
Image Source: Sunita(Instagram)

விஜய் டிவியில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மற்றொரு செலிபிரிட்டி நடிகையும் டான்ஸரும் ஆன சுனிதா. “குக்கு வித் கோமாளி” இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை மக்கள் முன்னிலையில் டான்சராக நல்ல வரவேற்பை பெற்றிருந்த சுனிதா ஒரு complete entertainer ஆக இந்த நிகழ்ச்சியில் தான் அடையாளம் காணப்பட்டார்.

6) அருண் பிரசாத்

Arun Prasad Bigg Boss 18
Source: Arun Prasad( Instagram)

விஜய் டிவியில் மிகப்பெரிய வெற்றி அடைந்த சீரியல் ஆன “பாரதி கண்ணம்மா”-வில் பாரதியாகவே வாழ்ந்த நடிகர் அருண் பிரசாத் இந்த சீசன் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. சின்னத்திரைக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே குறும்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமான நபராக மாறினார். “ஏனோ வானிலை மாறுதே, ஏதோ மாயம் செய்தாய், நிகழ் காலம், மதி மயங்கினேன்” என இவை அனைத்தும் இவரின் ஹிட்டான குறும்படங்கள். அதோடு 2017ல் “மேயாத மான்” திரைப்படத்தில் துணை நடிகர் ஆக நடித்து வெள்ளித்திரைக்கும் சென்றுள்ளார்.

7) Rj ஆனந்தி ஐயப்பன்

அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு Youtube பிரபலமான யூகிக்கப்படும் மற்றொரு போட்டியாளராக கருதப்படுகிறார். “The Book Show” என்ற youtube சேனலை நடத்தி வருகிறார் இதில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும் புத்தகங்களை ரிவ்யூ செய்வதும் அதை குறித்த கருத்துகளை பகிர்வதும் இவரது சேனலின் பிரதானமான கூறாக உள்ளது. Instagram மற்றும் YouTube இல் மிகச்சிறந்த influencer ஆக வலம் வருபவர்களில் இவரும் ஒருவர். அதோடு “கோமாளி, நெற்றிக்கண், பிகில், D Block, நண்பன் ஒருவன் வந்த பிறகு, தாராள பிரபு, மற்றும், Ctrl+Z” போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்பதை உறுதி செய்கிறது.

RJ Anandhi Iyappan Bigg Boss 8

Image source – Instagram(@rjanadhi_iyappan)

8. ஜெப்ரி

இதுவரை ஒளிபரப்பான Big Boss Tamil எல்லா சீசன்களிலும் rap பாடகர்களை தேர்வு செய்வதில் குறிப்பாக இருந்துள்ளனர். அதேபோல் தற்போதும் ஜெப்ரி என்ற rap மற்றும் கானா பாடகரை தேர்வு செய்துள்ளனர். தனது தாயின் ஊக்குவிப்பால் ஒரு பாடகராக தற்போது வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. ரஞ்சித்

Ranjith

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” மெகா தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரஞ்சித் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சினிமா மற்றும் சின்ன திரையில் அவரது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். பொன்னுமணி, கண்ணம்மா, சத்ரியன், அன்பு போன்ற படங்கள் இவரின் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டும். 

10. Vj விஷால்

Vj Vishal
Source: VJ Vishal (Instagram)

சிறு சிறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “பாக்யலட்சுமி” என்ற மெகா தொடரில் ‘எழில்’ எந்த கதாபாத்திரம் தமிழக மக்களுக்கு Vj விஷால் யார் என்பதை வெளிகாட்டியது. இந்த சீரியல் அவரின் திரை பயணத்துக்கு மிகவும் உந்துகோளாக அமைந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட பயணத்திற்காக இந்த சீசனில் போட்டியாளராக கலந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

11. பவித்ரா ஜனனி

Pavithra Janani
Source: Pavithra Janani

“ஈரமான ரோஜாவே” “தென்றல் வந்து என்னை தொடும்” போன்ற மெகா தொடர்களில் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றவர் நடிகை பவித்ரா ஜனனி ஆகும். தனது இயல்பான நடிப்பால் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

12. சத்யா

Sathya Sk
Source: Sathya SK(Instagram)

Big Boss Tamil season 8-ல் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளர் நடிகர் சத்யா ஆகும். இவர் இதற்கு முன் ஒளிபரப்பான Big Boss Tamil season 2-ல் பங்கேற்ற பாடகி NSK ரம்யாவின் கணவராகும். Bodybuilding மீது தீராத காதல் கொண்டதால் bodybuilding போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சின்ன திரையில் நடிகராக அறிமுகமானார். ‘நீலக்குயில், வேலைக்காரன்’ பல சீரியலில் துணை கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 

13. அன்சிதா

Anshitha
Source: Anshitha(Instagram)

தற்போது ஒளிபரப்பாகிய ‘குக்கு வித் கோமாளி’ சீசன் ஐந்தில் கோமாளியாக அறிமுகமானவர் நடிகை அன்சிதா. கேரளாவை தனது பூர்வமாக கொண்ட நடிகை அன்சிதா நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறு சிறு வேடங்களில் நடித்து “செல்லம்மா” என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.

14. அர்னவ்

Arnav
Source: Arnav(Insgtagram)

‘சக்தி’ என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் அர்னவ். அதன் பிறகு ‘கேளடி கண்மணி, பிரியசகி, கல்யாண பரிசு, அழகு, செல்லம்மா’ என்ற சீரியலில் நடித்துள்ளார். நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் bigg Boss Tamil season 8ல் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

15. ஜாக்குலின்

jacqueline VJ Bigg Boss Tamil
Source: Jacqueline Instagram

தொகுப்பாளனியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் அறிமுகமான ஜாக்குலின் அதன் பிறகு சிறு இடைவேளை எடுத்துக்கொண்டு நடிகையாக “தேன்மொழி பி ஏ” என்ற சீரியலில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு bigg Boss Tamil season 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு மறுபடியும் விஜய் டிவிக்கு entry கொடுத்துள்ளார்.

16. முத்துக்குமரன்

விஜய் டிவியில் 2023-ல் ஒளிபரப்பான “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்ற ரியாலிட்டி ஷோவில் பேச்சாளராக தமிழக மக்களுக்கு முத்துக்குமரன் அறிமுகமானார். அதன் பிறகு பல youtube சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். பல பட்டிமன்றங்களிலும் தனது சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். பேச்சாளராக மட்டுமில்லாமல் ஒரு நபராக தன்னை மக்கள் காண வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

17. சௌந்தர்யா நஞ்சுண்டன் 

Soundarya Nanjundan Bigg Boss 8

நடிகை மற்றும் மாடல் சௌந்தர்யா நஞ்சுண்டன் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். “தர்பார், திரௌபதி, ஆதித்யா வர்மா” இந்த படங்களில் நடித்துள்ளார். Aha ott-யில் மிகவும் பிரபலமான “வேற மாதிரி ஆபீஸ்” என்ற தொடரிலும் நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

18. தர்ஷா குப்தா

Dharsha Gupta
Source: Dharsha Gupta(Instagram)

ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கி அதன் பின்னே மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் நடிகையாக மாறி தற்போது Big Boss Tamil season 8-ன் போட்டியாளராக கலத்தில் இறங்கியுள்ளார் நடிகை தர்ஷா குப்தா. ஜீ தமிழில் ஒளிபரப்பான “முள்ளும் மலரும்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன் பிறகு, “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். 2021-ல் வெளியான ருத்ர தாண்டவம் மற்றும் 2022 இல் வெளியான Oh My Ghost என்ற திரைப்படங்களில் நடித்து வெள்ளி திரைக்கும் அறிமுகம் ஆகி உள்ளார்.

இதுவரை நடந்த ஏழு பிக் பாஸ் தமிழ் சீசனில் வெற்றி பெற்ற டைட்டில் வின்னர்களின் பட்டியல்.

பிக் பாஸ் தமிழ் சீசன் டைட்டில் வின்னர் 
சீசன் 1ஆரவ் நபீஸ் 
சீசன் 2ரித்விகா 
சீசன் 3முகேன் ராவ் 
சீசன் 4ஆரி அர்ஜுனன் 
சீசன் 5ராஜு ஜெயமோகன் 
சீசன் 6மொஹம்மத் அசிம் 
சீசன் 7அர்ச்சனா 

இவர்கள் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.