அக்டோபர் 6 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள Bigg Boss நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் 16 போட்டியாளர்கள் முடிவாகி, அவர்கள் இந்த வீட்டுக்குள் செல்வதும் படப்பிடிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு போட்டியியலார் பற்றி தெரியவந்துள்ளது.
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்
நடிகை Dharsha Gupta சென்னையில் 1994ல் ஜூன் 7ம் தேதி பிறந்தவர். இவர் தொடக்கத்தில் இணையத்தில் மாடலிங் செய்து அதன் மூலமாக பலருக்கும் தெரியவந்தார். இவர் முதலில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Zee தமிழில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியலில் விஜயலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் Dharsha Gupta. பின்னர் 2019 முதல் 2020 வரை ‘மின்னலே’ என்ற சீரியலில் வர்ஷா என்ற பாத்திரத்தில் நடித்தார். இவருக்கு தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவியில் வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான்.
குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக Dharsha Gupta பங்கேற்றபோது இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். இவரின் சமையலை தாண்டி இவரும் கோமாளியாக வரும் புகழும் செய்யும் நகைச்சுவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல நாட்கள் போட்டியில் தக்கவைத்து இருந்த Dharsha Gupta, இசையில் வெளியேறினாலும் அந்த நிகழ்ச்சியின் ரசிகர்களால் இன்றும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுகிறார். இவருக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின் கிடைத்த புகழால் பட வாய்ப்புகள் சில கிடைத்தது.
2021ல் ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் Dharsha. இப்படத்தில் வராஹி என்ற பாத்திரத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்க ஒரு ஆக்ஷன் படமாக அமைந்தது. இப்படம் நினைத்தபடி ஹிட்டாகாததால், மீண்டும் மாடலிங் செய்து வந்தார் Dharsha.
பிறகு சன்னி லியோன் நடித்த தமிழ் பேய் படமான ‘Oh My Ghost’ படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘தலைமை செயலகம்’ என்ற web series -ல் நடித்துள்ளார். இப்போது Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்பதின் மூலம் மேலும் பெரிய வாய்ப்புகளை கருத்தில் கொண்டு தான் போட்டியிடுவார்.
இவருக்கு ஏற்கனவே இருக்கும் பல கோடி ரசிகர்கள் இவரை Bigg Boss நிகழ்ச்சியிலும் அவருக்கு துணையாக இருந்தால் நிச்சயம் நல்ல போட்டியாக அமைவார். தொலைக்காட்சி முதல் திரைப்படங்கள் என இவர் ஏற்கனவே கிடைத்த வாய்ப்புகளை தக்க வைக்க பொறுப்புடன் எந்த வித சண்டைக்குள்ளும் நுழையாமல் இருப்பாரா? அல்லது போட்டிக்கு தேவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இந்த சீசனில் பிரபலமாவாரா? என்பது விரைவில் தெரியவரும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]