சமீபத்தில் பண மோசடியில் சிக்கி சிறைசென்ற தயாரிப்பாளர் ரவீந்தர் தற்போது Big Boss வீட்டிற்க்கு வந்துள்ளார். இவர் இதுவரை நடந்த சீசன்களை பற்றி ரிவ்யூ வெளியிட்டு பல விமர்சனங்களுக்கும் ஆளானார்.
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்
விஜய் டிவியில் ஆண்டுக்கு ஒருமுறை வெளியானாலும் பல்வேறு கன்டென்ட் தரும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இதுவரை நடந்த 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். அவருடைய ஸ்டைலில் எதார்த்த பேச்சால் கமல் இடத்தை நிரப்புவாரா என பல கேள்வி எழுந்து வந்தது.
ரவீந்தர் பற்றிய ஒரு அலசல்:
சின்ன திரை, வெள்ளி திரை என பலரது பெயர் அடிபட்டு வந்த நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான ரவீந்தர் சந்திரசேகரன் பங்கு பெற வாய்ப்புள்ளது. இவர் ஜூலை 8, 1984 -ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் திரையுலகில் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமாகி இருந்தார்.
அவரது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன் ஹவுஸின் கீழ் ஒரு சில படங்களை தயாரித்தும் வந்தார். அதுமட்டுமல்லாது “மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரி” என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.
விமர்சனங்களை கடந்த வாழ்க்கை:
ரவீந்தர் சற்று உடல் பருமனாக இருந்து வருவதால் fatman என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். மேலும் இவர் தனியாக “Fat Man Facts” என்ற You Tube சேனல் நடத்தி வருகிறார். அதில் இதற்க்கு முன்பு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்திருந்தார்.
மேலும் தனிப்பட்ட வாழ்கை முறை, பேட்டி என தனது சேனலில் பதிவிட்டது வருகிறார். 129K பாலோவர்ஸ் கொண்டு தனது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
2022 -ஆம் ஆண்டு திருப்பதியில் சீரியல் நடிகை மஹாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தனர். இதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத இருவரும் இதுவரை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் படம் எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கைதான ரவீந்தர் சந்திரசேகரன் ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் தற்போது ஜாமினில் வெளிவந்தார். சிறையில் கஷ்டப்பட்டதையும், பல சிரமங்களை சந்தித்ததையும் சமூகவலைத்தள பேட்டிகளில் பேசி இருந்தார்.
பெயர் | ரவீந்தர் சந்திரசேகரன் |
பிறப்பு | ஜூலை 8, 1984. சென்னை |
தொழில் | இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் |
வயது | 40 |
ரவீந்தர் தயாரிப்பில் சுட்ட கதை (2013), நளனும் நந்தினியும் (2014), கோலை நோக்கி பார்வை (2014), கல்யாணம் (2017), மற்றும் முருங்காக்கை சிப்ஸ் (2021) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது.