தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான game show-வான Big Boss தமிழ் ஏழு சீசன் கடந்து தற்போது 8-வது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை நடந்த ஏழு சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். படங்களில் கவனம் செலுத்தும் காரணத்தால் தமிழ் Big Boss-ல் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை விடுத்தார். அதன் பிறகு பல மக்கள் செல்வன் விஜய் சேதுபதி Big Boss தமிழ் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று விஜய் டிவியில் கோலாகலமாக “Big Boss தமிழ் சீசன் 8” தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் rap பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆன அறிவு இந்த நிகழ்ச்சியின் ஆல்பம் பாடலை பாடி தொடங்கி வைத்தார். வழக்கமான Big Boss தமிழ் bgm பின்னே ஒலிக்க நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளர் ஆக மேடையில் மிளிர்ந்தார்.
உலகத்தில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத பல விஷயங்களை நாம் எதுவும் செய்ய முடியாது. நடக்க வேண்டியது தானாகவே நடக்கும் என்பதை பலமுறை உணர்ந்துள்ளேன் இந்த முறையும் அப்படியே நடந்துள்ளது என்று Big Boss தமிழ் தொகுப்பாளராக தனது முதல் நாள் அனுபவத்தை மக்கள் முன் தெரிவித்தார்.
தீர்ப்பு வழங்குவது என்பது விளையாடுவதை விட மிகவும் எளிதானது என்று கூறினார். தனக்கான மிடுக்கான நடை மற்றும் தமிழில் Big Boss தமிழ் சீசன் 8 வீட்டை மக்களுக்கு சுற்றி காண்பித்தார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் நீளமான வெள்ளை கோடு ஒன்று போடப்பட்டுள்ளது, பார்த்த உடனே அதில் ஏதோ மாஸ்டர் பிளான் ஒளிந்துள்ளதை உணர்த்தியது. மிகவும் வண்ணமயாக வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
“வீடு எவ்வளவு அழகாக இருந்தாலும் அழகிய நினைவுகளை தரும் மனிதர்கள் இல்லை என்றால் அது வெறும் அழகிய கட்டிடம் மட்டுமே” என்று மொத்த வீட்டை சுற்றி காண்பித்து விட்டு கூறினார் நடிகர் விஜய் சேதுபதி. Big Boss தமிழ் சீசன் 8 முதல் போட்டியாளராக திரைப்பட தயாரிப்பாளரும், யூடூப்பில் reviewer ஆன ரவீந்திரன் அறிமுகம் ஆனார். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
- ரவீந்தர் சந்திரசேகர்
- சஞ்சனா நமிதாஸ்
- தர்ஷா குப்தா
- சத்யா
- தீபக்
- RJ அனந்தி
- சுனிதா
- ஜெப்ரி
- ரஞ்சித்
- பவித்ரா ஜனனி
- சௌந்தர்யா நஞ்சுண்டன்
- அருண் பிரசாத்
- தர்ஷிகா
- VJ விஷால்
- அன்ஷிதா
- ஆர்னவ்
- முத்துக்குமரன்
- ஜாக்குலின்
பெண்களில் சுனிதா, ஸாச்சனா, அர்ச்சனா, மற்றும் தர்ஷா குப்தா, மறுபக்கம் ஆண்கள் போட்டியாளர்கள் ரவீந்திரன், தீபக், சத்யா, ஜெர்ரி ஆகியோர் Big Boss தமிழ் சீசன் 8-ல் அறிமுகம் ஆகி வீட்டிற்குள் நுழைந்த உடன் முதல் ட்விஸ்ட் ஆக “Men vs Women” என்றே இந்த சீசன் முழுதும் இருக்கப்போகிறது என்று அறிவிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கான படுக்கை இடத்தை தேர்வு செய்து அடுத்த 100 நாட்களுக்கு அது தான் அவர்களின் இடம் என்று கூறப்பட்டது.
முதலில் ஆண் பெண் என இருவரும் ஒரே இடத்திற்காக மல்லுக்கட்ட தொடங்கினர். பல ஆலோசனைக்கு பிறகு ஆண்கள் அவர்களின் விருப்பமான தனி படுக்கைகள் இருந்த அறையை ஒரு strategy-யுடன் விட்டுக் கொடுத்தனர். இது பின்னால் வந்த பெண் போட்டியாளர்களில் சிலர் உடன்படவில்லை இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்.
மொத்தம் 18 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு அனைவரையும் living area-வில் அமர வைத்து மிகப்பெரிய twist-ஐ கொடுத்தார் விஜய் சேதுபதி. “24 hrs முதல் eviction” என்ற புதுவிதமான ஒன்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் Big Boss தமிழ் சீசன் 8-ல் தொடங்கிய இரண்டாவது நாளில் வெளியேற போகும் முதல் நபர் ஆக ஒருவர் வெளியேற்றப்படுவார்.
புதுமையான வீடு, போட்டியாளர்கள், தொகுப்பாளர் என எல்லாம் பார்க்கும் மக்களின் ஆர்வத்தை தூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் கடந்த சீசனை விட நன்றாக இருக்கும் என்று Big Boss தமிழ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.