இப்போது இருக்கும் இணையதள காலத்தில் social media-க்களில் இருக்கும் followers எண்ணிக்கை வைத்து ஒருவர் தீர்மானிக்கப்படுகிறார். அவர்களை இளைஞர்கள் தங்களின் inspiration ஆக எடுத்துக் கொள்வதும் உண்டு. இப்படி பல பேர் social media influencer ஆக இருந்து வருகையில், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளவர் RJ ஆனந்தி ஆகும்.
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்
Social Media – ஆரம்ப காலம்
1991-ல் பிறந்த ஆனந்தி ஐயப்பன், 2011-ல் RJ (Radio Jockey) ஆக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பல வானொலி நிலையங்களில் பணிபுரிந்த காரணத்தால் சரளமாக ஒரு தலைப்பு குறித்து பேசுவதில் வல்லமை பெற்றார். அதன் பிறகு தான் RJ ஆனந்தி ஆக அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு கிடைத்த மீடியா நண்பர்கள் மூலம் youtube-ல் “The Book Show” என்ற channel-ஐ தொடங்கினார். தற்போது வரை 714 காணொளிகளை இதில் பதிவிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ள எல்லா விதமான புத்தகங்கள் குறித்த கருத்து பதிவை வெளியிடுவார்.
Reels-ஐ செய்து இளைஞர்களை கவரும் பிரபலங்களில் புத்தக வாசிப்பை தூண்டும் விதமாக இருக்கும் இவரின் எல்லா காணொளியும் நல்ல வரவேற்பை பெற்று 7 லட்சத்திற்கும் மேல் இவரின் youtube சேனலை follow செய்கின்றனர். அதோடு “Why Blood Same Blood” என்ற மற்றொரு youtube சேனலில் தனது நண்பர் மற்றும் தொகுப்பாளர் முத்துராமன் உடன் இணைந்து சினிமா குறித்த காணொளிகள் பதிவிட்டு வருகின்றனர்.
Bigg Boss தமிழ் 8 நாள் 2: வீடு இரண்டு, விதிமுறைகளும் இரண்டு!
வெள்ளித்திரையில் கிடைத்த வெற்றி:
இணையதளம் பலருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. RJ ஆனந்தியும் நடிகையாக 2019-ல் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான “கோமாளி” படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் blockbuster ஹிட்டாக அமைந்தது. இது சினிமாவில் அவர் நடித்த மற்ற படங்களுக்கு மிகப்பெரிய அஸ்திவாரமாக அமைந்தது என்றே கூறலாம்.
வெளியான வருடம் | படம் |
2019 | கோமாளி |
2019 | பிகில் |
2020 | தாராள பிரபு |
2021 | நெற்றிக்கண் |
2023 | தீரா காதல் |
2024 | நண்பன் ஒருவன் வந்த பிறகு |
தொலைக்காட்சி:
தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அதில் தன்னை மெருகேற்றிக் கொள்ள RJ ஆனந்தி என்றும் தவறியது இல்லை. 2021-ஆம் ஆண்டு “Master D Blaster” என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி தற்போது Zee5 ott-யில் உள்ளது.
பிறகு தொடர்ச்சியாக தனது இணையதள பக்கம், youtube சேனல், Spotify app-ல் Podcast என எல்லாவிதத்திலும் மக்களிடம் இருக்கும் பந்தத்தை மெருகேற்றி கொண்டே இருக்கிறார். பொதுவாக Big Boss தமிழில் உள்ள எல்லா சீசன்களிலும் நடிகர், நடிகை, மாடல் என பலரை போட்டியாளர்களாக அழைக்கும் போது social media influencers-உம் அதில் இடம் பெறுவர். அப்படியாக தேர்வு செய்யப்பட்டவர் RJ ஆனந்தி ஆகும். இந்த வாய்ப்பு அவரின் career-க்கு ஒரு பெரிய திருப்புமுனையாக மாறும் என்று பலர் கூறி வருகின்றனர்.