விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள Bigg Boss 8 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் Bigg Boss வீட்டிற்கு சென்ற நிலையில், தற்போது புதிதாக சீரியல் நடிகர் Sathya SK ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்

நடிகர் Sathya SK ஜனவரி 3, 1993ல் சென்னையில் பிறந்தவர். 31 வயதாகும் இவருக்கு சிறு வயது முதல் நடிப்பின் மீது இந்த துரையின் மீதும் ஆர்வம் பெறுக, அதை கண்டிப்பாக பின்பற்ற தொடங்கினார். கல்லூரி படிக்கும் போது கிடைத்த மாடலிங் வேலைகளை செய்தவர் சில காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும் தொடங்கினார்.
2018ல் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பான சீரியல் ‘நீலக்குயில்’. இந்த சிரியலுக்காக புதுமுக கதாநாயகர்களை தேடியபோது நடிகர் Sathya SK அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்பது தெரிந்து, அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்கள். மற்றொரு ஹிட் சிரியலான ‘வேலைக்காரன்’ சீரியலில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக மிக அறுமியாயாக நடித்திருப்பார் நடிகர் Sathya SK.
இந்த சீரியலில் ஜெய் சூர்யா என்ற பத்திரிகையாளராக நடித்திருப்பார் Sathya SK. இவரின் நேர்த்தியான நடிப்பும், இயல்பான தோற்றமும் இவருக்கு பின்னாளில் பல வாய்ப்புகளை தேடி தந்தது. குறிப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் தொடரில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர் Zee தமிழில் ஒளிபரப்பான ‘அண்ணன்’ தொடரிலும் நடித்தார்.
தமிழ் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு மொழியிலும் வளர்ந்து வரும் இயக்குனர்களுடன் பணியாற்றி வரும் Sathya SK, அடுத்ததாக நடிகர், நடன கலைஞர் பிரபு தேவா நடிப்பில் உருவாகும் ‘Musasi’ என்ற படத்தில் ஆக்ஷன் பாத்திரத்தில் நடிக்கிறார். இவரை பல தெலுங்கு மற்றும் தமிழ் ஆல்பம் பாடல்களில் இவரை பார்க்கலாம்.
இவர் பாடகி NSK Ramya வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் விஜய் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.
பாடகி NSK Ramya Bigg Boss 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் Sathya SK Bigg Boss 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கு என்றாலும், இந்தநிகழ்ச்சியை வெற்றியடைய அவர் நிச்சயம் ஒரு சமமான போட்டியாக சக போட்டியாளர்களுக்கு அமைவார்.
அவரின் மனைவியின் முன் அனுபவம் இவருக்கு நல்ல பாடமாக அமைய, இந்த நிகழ்ச்சியில் அவரின் பங்கு எப்படி இருக்கு என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப தொடங்கியதும், மக்களின் வாக்குகளின் வழியே தெரியவரும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]