Home Bigg Boss Tamil Bigg Boss 8 தமிழ் – புது போட்டியாளராக சேரும் Soundariya Nanjundan! 

Bigg Boss 8 தமிழ் – புது போட்டியாளராக சேரும் Soundariya Nanjundan! 

அக்டோபர் 6 முதல் வராரவாரம் ஓவர் ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ள Bigg Boss 8ல் அடுத்ததாக நடிகை, Model Soundariya Nanjundan போட்டியாளராக இணையவுள்ளதாக தகவல்.

by Vinodhini Kumar

Bigg Boss 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியல் பல இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகர்கள், பாடகர்கள், மாடல்கள் என கலை துறையில் பலவிதமான திறமையாளர்கள் வாய்ப்பு தேடி பங்கேற்பது வழக்கம். 

Soundariya Nanjundan

அப்படி அடுத்தபடியாக தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மாடலாக இருக்கும் Soundariya Nanjundan இந்த சீசனில் போட்டியாளராக இணைகிறார். இவர் இந்த சீசனில் ஒரு நல்ல போட்டியாக அமைவார் என இப்போதே கணிக்கப்படுகிறது. 

யார் இந்த Soundariya Nanjundan?

கர்நாடகா மாநிலத்தில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிறந்த சௌந்தர்யா நஞ்சுண்டன், தமிழ் தொலைக்காட்சியில் பல விளையாட்டு போட்டிகள், தொடர்கள் என நடித்து வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற நிகழ்சியில் பங்கேற்று பிரபலமானவர். 

Actress Soundariya Nanjundan

இவர் மேலும் 2019ம் ஆண்டு துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துணை நடிகையாக நடித்தார். அதை தொடர்ந்து 2020ல் வெளியான ‘திரௌபதி’ மற்றும் ‘தர்பார்’ படங்களில் நடித்தார். பெரியளவில் பேசும்படியான பாத்திரமாக எதுவும் அமையவில்லை என்றாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடலிங் செய்து வருகிறார். 

இவர் மேலும் Disney Hotstarல் ‘வேற மாறி Office’ என்ற தொடரில் நடித்தார். இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பலருக்கும் பிடித்தமான தொடராக இருந்த ‘Office’ தொடரின் அடுத்த பாகம் போல எடுக்க முயற்சித்தனர். 

Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள்!!

கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக இருந்து கடைசி நாள் வரை போட்டியாளராக இருந்த போட்டியாளர் விஷ்ணு உடைய நெருங்கிய நண்பர் தான் இந்த Soundariya Nanjundan. இவர்கள் இருவர் காதலித்து வருவதாகவும் சில தகவல்கள் கசிந்து வருகிறது. 

Bigg Boss சீசன் 8ல் போட்டியாளராக சேரும் Soundariya Nanjundan, இந்த சீசனில் கண்டிப்பாக ஒரு நெருக்கடி கொடுக்கும் போட்டியாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல தரப்பட்ட திறமையாளர்கள் போட்டியிட்டாலும், மக்களுக்கு பரிட்சயமான, அல்லது நகைச்சுவையான போட்டியாளர்கள் தான் நீண்ட நாட்கள் போட்டியில் நிலைப்பார்கள். 

பார்வையாளராக்களுக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்து பல நாட்கள் தக்க வைப்பது சற்றே கடினமான காரியம் தான். Soundariya Nanjundan இதில் எந்த விதமாக இருப்பர் என்பது விரைவில் தெரியவரும்.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.