Home Bigg Boss Tamil Bigg Boss 8 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஜய் டிவி Dancer Sunita Gogoi!  

Bigg Boss 8 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஜய் டிவி Dancer Sunita Gogoi!  

அக்டோபர் 6ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள Bigg Boss 8 தமிழ் நிகழ்ச்சியில், மற்றுமொரு போட்டியாளராக விஜய் டிவியின் Sunita Gogoi இணைவதாக பேசப்படுகிறது. 

by Vinodhini Kumar

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பதுண்டு. அப்படி விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள், காமெடி ஷோக்கள், நாடன் போட்டிகள் என பங்கேற்று முழுமையான விஜய் டிவி பிரபலமாக இருப்பவர் Sunita Gogoi. 

Sunita Gogoi to enter Bigg Boss 8 Tamil

இவர் சமீபகாலமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இணைந்து, பின்னர் அந்த நிகழ்ச்சியில் சில சீசன்களிலேயே மிக முக்கியமான ஒரு பங்காக அமைந்துளார். இவர் அடுத்ததாக அதே வார இறுதியில் ஒளிபரப்பாகவுள்ள Bigg Boss 8 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைய அதிக வாய்ப்புள்ளது. 

Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும் 

யார் இந்த Sunita Gogoi?

Sunita Gogoi

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் பிறந்த சுனிதா, சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்டவராக இறந்துள்ளார். தன்னுடைய நாடன் திறமையை வெளிப்படுத்த அவருக்கு கிடைத்த பல மேடைகளில் ஒன்று தான் விஜய் டிவியில் நடத்தப்பட்ட Jodi No. 1 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சுனிதா, பின்னர் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒரு அங்கமாக உள்ளார். இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார், அவரும் ஒரு நடன கலைஞர். 

விஜய் டிவியில் Jodi No. 1 சீசன் 5 மற்றும் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்ற சுனிதா, 7 வது சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்து பின்னர் பல விழா மேடைகளில் நடனமாடி பிரபலமானார். ஒரு பெரிய இடைவேளைக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக சேர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

Bigg Boss Tamil சீசன் 8 -ல் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார் Shaalin Zoya! 

மொழி தெரியாமல், தத்தி தத்தி அவர் பேசுவதையே காமெடி content ஆக மாற்றி பின்னர் அவரையே பாட வைத்து சில சீசன்களாக promo முதல் ரீல்ஸ் வரை மக்கள் மத்தியில் நல்ல reach கிடைத்தது. நடனத்தை தாண்டி, இப்போது அவர் மற்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் சென்று காமெடி செய்து வருகிறார். 

Vijay TV Dancer Sunita

இவர் பல ஆண்டுகளாக Wong என்ற நடன கலைஞருடன் பல நிகழ்ச்சிகளில் போட்டியிட்டார். Sunita மற்றும் Wong இடையே நட்பை தவிர எந்தவிதமான உறவும் இருப்பதாக தகவல் இல்லை. இன்றும் இருவரும் சேர்ந்து நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துவருகிறார்கள். 

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்த வாக்குவாதத்தில், Sunita Gogoi பிரியங்கா பக்கம் சாதகமாக பேசி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் Live சென்றது பலரால் எதிர்க்கப்பட்டது. 

Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள்!!

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடனம், தங்கையுடன் காமெடியான ரீல்ஸ் ஆகியவற்றை பதிவிட்டு, பல ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். ஏறத்தாழ 1.6 மில்லியன் followers உடன் இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி supporter -களை வைத்துள்ளார். 

இந்த புகழை அடுத்தகட்டத்தில் Bigg Boss 8 நிகழ்ச்சியில் அவர் தக்கவைத்து, இந்த நிகழ்ச்சியில் எதனை வாரம் தாக்குபிடிப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். இவரோடு சேர்ந்து விஜய் டிவியில் உள்ள அன்ஷிகா, VTV கணேஷ் ஆகியோரும் பங்கேற்கப்போகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சுனிதா கூட்டணி அமைப்பார்? அல்லது சண்டை சச்சரவு என பார்வையாளர்களுக்கு entertainment கொடுப்பாரா என்பது விரைவில் தெரியவரும். 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.