Home Bigg Boss Tamil Youtuber TTF Vasan Bigg Boss 8 நிகழ்ச்சியில் போட்டியிடுகிறாரா? 

Youtuber TTF Vasan Bigg Boss 8 நிகழ்ச்சியில் போட்டியிடுகிறாரா? 

இளைஞர்கள் மத்தியில் பிரபலாமான Youtuber TTF Vasan, 100 நாட்கள் Bigg Boss 8 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. 

by Vinodhini Kumar

இணையதளத்தில் கோடிக்கணக்கான இளைஞர்களால் பார்க்கப்படும் Youtube பகிர்வுகளில் ஒன்று தான் Race Bike பற்றிய விடியோக்கள். அதிலும் முக்கியமாக இளைஞர்கள் தங்களின் பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்வதை விடியோவாக எடுத்து Youtube செயலியில் பதிவிட்டு பார்வையாளர்களை பெருக்கி வருகிறார்கள். 

அப்படி தமிழ் இளைஞர்கள் பலருக்கும் தெரிந்த பிரபல Youtuber தான் TTF Vasan. இவர் கோயம்பத்தூரில் 2000ம் ஆண்டு பிறந்தவர், 2017 முதல் தன்னுடைய பைக் உடன் பல இடங்களுக்கு சென்று அதை விடியோவாக பதிவிட்டார். 

TTF Vasan

இவரின் Twin Throttlers Youtube சேனலை தற்போது 4.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பல மலை பிரதேசங்களுக்கும், இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு தன்னுடைய Bike மற்றும் காரில் சென்று பகிர்ந்துவரும் விடியோக்கள் பல மில்லியன் views உடன் ட்ரெண்டாகி வருகிறது. 

TTF Vasan சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி கைது செய்யப்பட்டார். 2019 முதல் அதிவேகத்தில் பைக் ஓட்டி அதை விடியோவாக தன்னுடைய Youtube சேனலில் பதிவிட்ட TTF Vasan மீது பொதுமக்கள் வழக்கு பதிவிட்டனர். ஆனால் தனிப்பட்ட பகுதியில் தான் இயக்கியதாக அவர் கூறினார். 

2022ல் சாதிய பாகுபாட்டை ஆதரிக்கும் வகையில் அவரின் வீடியோவில் பேசியதற்கு பலத்த கண்டனம் எழுந்தது. இதையடுத்து TTF Vasan தன்னுடைய சேனலில் அதற்கு மன்னிப்பு கேட்டார். இதே போல் சமீபத்தில் திருப்பதி கோயிலில் அவரின் நண்பருடன் சேர்ந்து Prank வீடியோ ஒன்றை செய்து அதையும் பதிவிட்டவர் மீது வழக்கு பதியப்பட்டது. 

Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள்!!

இவர் 2024ல் அதிவேகமாக Bike ஓட்டி கோர விபத்துக்கு உள்ளனார். அந்த விபத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து, கோடிக்கணக்கான இளைஞர்கள் பின்தொடர்வதால், அவரின் ஓட்டுநர் உரிமத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்கு ரத்து செய்தனர்.

TTF Vasan மற்றும் நடிகை Shaalin Zoya நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்து சில விடீயோக்களில் சேர்ந்து பயணிப்பதும், prank செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். Bigg Boss 8 நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

தன்னுடைய கோடிக்கணக்கான Youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் இதர வலைதள ரசிகர்களின் ஆதரவுடன் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் அவர் நடிப்பதாக இருந்த நிலையில், அந்த படத்தை பற்றி பெரிதாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அந்த படத்தின் இயக்குனர் செல்வம் ஒரு நேர்காணலில், ‘மஞ்சள்  வீரன்’ படத்திலிருந்து TTF Vasan விலகுவதாக அறிவித்தார். 

இந்த படத்தில் இருந்து விளக்குவதற்கு காரணமாக TTF Vasan வேறொரு முக்கியமான வேலையில் ஒப்பந்தமாகி உள்ளார் என அவர் தெரிவித்தார். அந்த ஒப்பந்தம் Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்பது தான் என பலரும் கணிப்பு உள்ளது. அப்படி இந்த செய்தி உண்மையானால், அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதோடு, பல நாட்கள் TRP ஏறுவதற்கு காரணமாகவும் அவர் இருப்பார்.   

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.