Home shows இர்ஃபான் முதல் ஷப்னம் வரை… Cook with Comali Season 5-ன் போட்டியாளர்கள் யார், யார்?! 

இர்ஃபான் முதல் ஷப்னம் வரை… Cook with Comali Season 5-ன் போட்டியாளர்கள் யார், யார்?! 

கடந்த 4 சீசன்களை போலவே இந்த சீசனிலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

by Santhiya Lakshmi

டிவி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி ஷோ ‘குக்கு வித் கோமாளி’. கடந்த நான்கு சீசன்களாக செம ஹிட் அடித்த இந்த ஷோவுக்கு இந்த ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகள். காரணம் இந்த நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்கும் விஜய் டிவி நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புதான்.

இதனால் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து தயாரிப்பு நிறுவனம் விலக, தயாரிப்பு நிறுவனத்துக்கு சப்போர்ட்டாக நான்கு சீசன்களிலும் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட்டும், செஃப் தாமுவும் விலகுவதாக அறிவித்தார்கள். ஆனால், தாமு மட்டும் மீண்டும் சேனலுடன் டீல் போட அவர் திரும்ப ஐந்தாவது சீசனுக்குள் வந்துவிட்டார். தாமுவுடன் இன்னொரு ஜட்ஜ் யார் என்கிற சஸ்பென்ஸையும் விஜய் டிவியே உடைத்துவிட்டது. 

மெஹந்தி சர்க்கஸ்‘ படத்தில் ஹீரோவாக நடித்தவரும், பிரபல செஃபுமான மாதம்பட்டி ரங்கராஜ் இன்னொரு நடுவராக களமிறங்கி இருக்க, இப்போது போட்டியாளர்கள் யார், யார் என்கிற பரபரப்பு சூடு பிடித்திருக்கிறது.

குக்கு வித் சீசன் 5 நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (27-04-2024) இரவு 9.30 மணிக்கு தொடங்கயிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் யார், கோமாளிகள் யார் எனப்பார்ப்போம்!

இர்ஃபான்

Cook with Comali 5

ரோட்டுக் கடைகளில் ப்ளேட்டோடு நின்று, வியர்க்க வியர்க்க சாப்பிட்டே வியூஸ் அள்ளிய யூ-ட்யூப் ரிவியூவர் இர்ஃபான் இந்த சீசனில் குக்காக கலந்துகொள்கிறார்.

அக்‌ஷய் கமல்

Cook with Comali 5
Oplus_131072

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘இந்திரா’ தொடரில் ஹீரோவாக நடிக்கும் அக்‌ஷய் கமல் இந்த சீசனில் போட்டியாளராக என்ட்ரி கொடுக்கிறார்.

சுஜிதா

Cook with Comali 5

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1-ல் அண்ணியாக நடித்து புகழ்பெற்ற சுஜிதா இந்த சீசனில் குக்காக களமிறங்குகிறார். 

திடியன்

Cook with Comali 5

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் நடிக்கும் திடியன் கோமாளியாக அட்டகாசம் செய்ய இருக்கிறார். 

பிரியங்கா

Priyanka Cook with Comali 5

நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியங்கா ஏற்கெனவே பிக்பாஸில் கலந்துகொண்ட நிலையில் இப்போது குக்கு வித் கோமாளியிலும் போட்டியாளராக, குக்காக கலந்துகொள்கிறார். 

அன்ஷிதா

Cook with Comali 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மா’ தொடரில் நடித்துவரும் அன்ஷிதா இந்த சீசனில் கோமாளியாக களமிறங்குகிறார்.

விடிவி கணேஷ்

Cook with Comali 5

கரகர குரலுக்கு சொந்தக்காரரான விடிவி கணேஷ் இந்த சீசனில் குக்காக கலந்துகொள்கிறார்.

திவ்யா துரைசாமி

Cook with Comali 5

சோஷியல் மீடியா கவர்ச்சிப்புயலான திவ்யா துரைசாமி இந்த சீசனில் குக்காக கலந்துகொள்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘புளூ ஸ்டார்’ படத்தில் நடித்திருந்தார்.

ஷப்னம்

Cook with Comali 5

சின்னத்தரையில் பல காலமாக பாப்புலராக வலம் வரும் ஷப்னம் இந்த சீசனில் கோமாளியாக ரகளை செய்ய இருக்கிறார். 

வசந்த்

Cook with Comali 5

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துவரும் வசந்த் வசி போட்டியாளராக களமிறங்குகிறார்.

ஷாலின் ஜோயா

Cook with Comali 5

பைக் ஸ்டண்ட்டுகள் மூலம் யூ-ட்யூபில் வைரைலான டிடிஎஃப் வாசனின் கேர்ள் ஃப்ரெண்ட் எனசொல்லப்படும் ஷாலின் ஜோயா இந்த சீசனில் குக்காக கலந்துகொள்கிறார்.

பூஜா

Cook with Comali 5

சூப்பர் சிங்கர் போட்டி மூலம் வைரல் குரலுக்கு சொந்தக்காரியான பூஜா இந்தமுறை பாடகியாக அல்ல சமையல்கலைஞராக களமிறங்குகிறார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.