Home shows சுவையான பிரியாணி ரெடி…Cook with Comali season 5 இந்த வார ஸ்பெஷல்…

சுவையான பிரியாணி ரெடி…Cook with Comali season 5 இந்த வார ஸ்பெஷல்…

விஜய் டிவியில் ஏப்ரல் மாதம்  ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வார வாரம் Fun , என்டேர்டைன்மெண்ட்களுக்கு பஞ்சம் இல்லாமல் கலக்கலாக ஒளிபரப்பாகி வருகிறது. 

by Sudhakaran Eswaran

விஜய் டிவியில் ஏப்ரல் மாதம்  ஒளிபரப்பாகி வரும் Cook with Comali நிகழ்ச்சியில் வார வாரம் Fun , என்டேர்டைன்மெண்ட்களுக்கு பஞ்சம் இல்லாமல் கலக்கலாக ஒளிபரப்பாகி வருகிறது. 

குக் வித் கோமாளி ஷோ தொடங்கி கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஒரு ஸ்பெஷல் வீக் ஆக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு 4 வாரத்திற்கும் ஒரு முறை எலிமினேஷன் வாரமாக உள்ளது. கடந்த முறை ஸ்ரீகாந்த்தேவா அவர்கள் எலிமினேஷன் ஆனார். 

சின்னத்திரை, வெள்ளி திரை, youtube பிரபலங்கள் என இந்த சீசன் குக் வித் கோமாளி ஷோ பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. பிரியங்கா தேஷ்பாண்டே, VTV கணேஷ், முஹம்மது இர்பான், ஷாலின் ஜோயா, அக்சய் கமல், திவ்யா துரைசாமி, சுஜிதா, வசந்த் வசி, ஸ்ரீகாந்த் தேவா, வெங்கட் ஆகிய 10 பெரும் இந்த சீசனில் குக் ஆக வந்துள்ளனர். 

புகழ், குரேஷி, சரத், சுனிதா, தங்க துரை, ராமர், சப்னம், வினோத், கெமி, அன்ஷிதா, TSK, பரீனா, அறந்தாங்கி நிஷா, நாஞ்சில் விஜயன் ஆகியோர் கோமாளிகளாக குக்கை தொந்தரவு செய்ய வந்துள்ளனர்.  

இந்த சீசனில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். ரக்ஷன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். ஒவ்வொரு வாரமும் செலிபிரேசன் வீக் ஆக குக்கிங் செய்து வருகின்றனர். 

Untitled design 6 5

புகழ், குரேஷி காமெடி, VTV கணேஷ் அவர்களின் எதார்த்த பேச்சு, ஜோயாவின் மலையாளம் கலந்த தமிழ் பேச்சு, பிரியங்கா, இர்பான் அக்கா தம்பி பாசம், மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் பன்ச் டயலாக் என இந்த சீசன் தொடங்கிய 2 மாதத்திலேயே பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. 

மகாராஜா படத்தின் டீம், இந்திய அணியின் வீரர்கள் பத்ரிநாத், பாலாஜி ஆகியோரும்,  உப்பு புளி காரம் வெப் சீரிஸ் டீம் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். 

கடந்த வாரங்களில் sea food, கிராமத்து விருந்து, சிக்கன் ஸ்பெஷல், கல்யாண விருந்து, street food, பிரியாணி என ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்பெஷல் வாரமாக இருந்து வருகிறது. 

இந்த வாரம் எலிமினேஷன் வீக்கில் danger zone-ல் இருந்த பூஜா, வசந்த் வசி, அக்சய் கமல் ஆகியோர் எலிமினேஷன் வீக்கில் இந்த வாரம் போட்டி போட்டனர். அதில் வசந்த் வசி இந்த வார குக் வித் கோமாளி ஷோவில் இருந்து எலிமினேஷன் ஆனார். 

Untitled design 7 4

மீண்டும் அவர் வைல்ட்கார்ட்ல் எண்ட்ரி ஆக அதிகம் வாய்ப்புள்ளது. மேலும் இந்த வாரம் சிறப்பாக பிரியாணி செய்த சுஜிதா மற்றும் கெமி ஆகியோர் “செஃப் அஃப் தி வீக்” ஆக தேர்வு செய்யப்பட்டனர்.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.