சில நாட்களாக இணையத்தில் அதிக அளவில் பேசுபொருளாக இருந்தது மணிமேகலை – பிரியங்கா இடையேயான கருத்து வேறுபாட்டால் வந்த பிரச்சனை தான். பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு குரல் கொடுத்து வந்துள்ளனர்.
யார் என்ன செய்தார்கள், எது உண்மை என சர்சைக்களுக்கு மத்தியில் குக் வித் கோமாளி சீசன் 5 – ல் சுஜிதா, பிரியங்கா, முகமது இர்பான் ஆகிய மூவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
இந்த வாரம் Wild Card ரவுண்டில் VTV கணேஷ், பூஜா வெங்கட், வசந்த் வாசி, அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா ஆகியோர் எண்ட்ரி ஆகியுள்ளனர். Wild Card எண்ட்ரி தந்த 5 பேரில் 4 -வது Finalist யாராக இருப்பார்கள் என இந்த வார இறுதியில் தெரியவரும். இந்த வார Advantage டாஸ்க்கில் குக்குகள் வித்தியாசமாக குச்சி சமோசா செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக “கடைசி உலகப்போர்” படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனேகா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் குக்குகள் மற்றும் கோமாளிகள் நகைச்சுவை விருந்து வைத்தனர்.
Advantage டாஸ்க் முடித்து “கொங்கு நாட்டு சமையல்” முறைப்படி main டாஸ்க் இருந்தது. மேலும் கோலி சோடா ரைசிங் வெப் சீரிஸில் நடித்த ஷியாம், அபிராமி, புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Cook With Comali நிகழ்ச்சியில் மற்றுமொரு திருப்பம். அடுத்த Anchor யார்?
மேலும் wild card எண்ட்ரி தந்த 5 பேரில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என பரபரப்பான வாரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]