விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Cook With Comali-யின் 5 வது சீசனில் புது நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து, ஏற்கனவே கோமாளிகளாக இருக்கும் புகழ், குரேஷி, சுனிதா, சரத், உள்ளிட்டோருடன் பல புது கோமாளிகள் இந்த சீசனில் இணைந்துள்ளனர். ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி எபிசோடை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் 14,15 ஆம் தேதி ஒளிபரப்பான செமி பைனல் எபிசோடில் டாப் 3 பைனலிஸ்ட் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
5 முறை “Chef of the week” வாங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூலம் come back கொடுத்த நடிகை சுஜிதா முதல் பைனலிஸ்ட் ஆக அறிவிக்கப்பட்டார். செமி பைனலில் அவருக்கு கோமாளியாக நடிகர் புகழ் அமைந்தார். அதன் பிறகு அவருக்கு இணையான போட்டியாளராக கருதப்படும் தொகுப்பாளினி பிரியங்கா இரண்டாவது பைனலிஸ்ட் ஆக அறிவிக்கப்பட்டார். மூன்றாவது பைனலிஸ்ட் ஆக youtube பிரபலமான இர்பான் தேர்வு செய்யபட்டார்.
இதில் நான்காவது போட்டியாளராக இருந்த அக்க்ஷய் கமல் அடுத்த வாரம் நடைபெறும் wild card சுற்றில் பங்கேற்று, இதற்கு முன் வெளியேறிய மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுவார் என்று நடுவர்கள் கூறினர்.
போட்டியாளர் பெயர் | பைனலிஸ்ட் | கோமாளி | செய்த உணவு |
சுஜிதா | முதல் பைனலிஸ்ட் | புகழ் | காலோட்டி கபாப் |
பிரியங்கா தேஷ்பாண்டே | இரண்டாவது பைனலிஸ்ட் | ராமர் | கட்டே கி சப்ஜி |
இர்பான் | மூன்றாவது பைனலிஸ்ட் | குரேஷி | லால் மாஸ் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]