விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்யப்படும் சமையலை விடவும் அதில் எந்த கோமாளி எப்படி கெட்டப் போட்டு நகைச்சுவை செய்கிறார் என்பதற்கான ஆவல் அதிகமாக இருந்துவருகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடக்கும் elimination சுற்றில் யார் வெளியேறுகிறார்கள் என்பதும் பலரின் கேள்வியாக அமைகிறது.
அப்படி கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 5ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் Double Eviction நடந்தது. இதுவரை குக் வித் கோமாளி வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வெளியேற்றம் அவர்களின் சமையல் திறமையை அடிப்படையாக கொண்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா?

கடந்த சில வாரங்களாக டாப் 6 போட்டியாளர்களின் ஒருவரான தயாரிப்பாளர், நடிகர் VTV கணேஷ் அவர்கள் பட வேலைக்காக ஹைதராபாத் சென்று வந்துள்ளார். இதனால் குக் வித் கோமாளி படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் இருந்தது. இந்த காரணத்தால் இவரை Elimination சுற்றில் சேர்த்தனர்.
அதே போல் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்த ‘வாழை’ படத்தில் நடித்த நடிகை திவ்யா துரைசாமி, இரண்டு வாரம் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதில் ஒரு வாரம் பழைய போட்டியாளர்களுடன் சேர்ந்து celebration வாரம் நடத்தியதால், ஐவரும் Elimination சுற்றில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையில் இந்த சீஸனின் டாப் 5 போட்டியாளர்கள் யார் என அனைவரும் நினைத்த பொது, கடந்த வாரம் VTV கணேஷ் மற்றும் திவ்யா துரைசாமி இருவரும் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
Double Eviction செய்த காரணம்
விஜய் டிவியில் பெருவாரியான ரசிகர்களை ஈர்த்து, வார இறுதியில் TRP ரேட்டிங்கை தன வசம் வைத்துள்ள உதவும் இரண்டு நிகழ்ச்சிகள் என்றால் அது குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ். விரைவில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருப்பதாலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப சரியாக இருக்கும் என்பதால் கடந்த வாரம் Double Eviction நடத்தப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் விஜய் சேதுபதி! வெளியானது ப்ரோமோ
இந்த வாரம் குக் வித் கோமாளியில் அரை இறுதி போட்டி நடக்கவுள்ளது. இதில் டாப் 4 போட்டியாளர்களாக அக்ஷய் கால், பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா மற்றும் இர்பான் போட்டியிடவுள்ளனர். இதில் ஒருவர் தேர்வாகி இறுதி போட்டிக்கு செல்வார். அடுத்ததாக Wild கார்டு கூற்றில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களின் ஒருவர், போட்டியில் சேர்ந்து சமைத்து இறுதி போட்டிக்கு தேர்வாகுவார்.
இப்படி இன்னும் மூன்று வாரம் கடுமையான போட்டி நிலவ உள்ளதால், கடந்த வாரம் கண்டிப்பாக இரண்டு போட்டியாளர்களை நீக்கினால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வழி விட முடியும் என்ற காரணத்தால் முதல் முறையாக இந்த Double Eviction நடத்தப்பட்டுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]