குக் வித் கோமாளி சீசன் 5 -ல் ஆகஸ்ட் மாதம் கடைசி வார இறுதி எபிசோடில் குக்குகளுடைய குடும்பத்தினர்கள் இருவர் சேர்ந்து வந்து சமைக்கும் ‘Family Round’. இந்த வாரத்திற்கான 7 ப்ரோமோக்கள் வெளியானது, அதோடு கடைசி ப்ரோமோ வீடியோவில் சிறப்பு விருந்தினர் யார் என்றும் தெரியவந்தது.

இந்த வாரம் வெளியாகியுள்ள Nani’s Saturday திரைப்படத்தை ப்ரொமோட் செய்ய அந்த படக்குழுவினர் குக் வித் கோமாளி சீசன் 5 செட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் மீதமுள்ள 6 டாப் குக்குகள் உடைய குடும்பத்தில் இருந்து இரண்டு நபர்கள் இணைந்து வந்து அவர்களுக்கு உதவ போகிறார்கள்.
முதல் ப்ரோமோவில் நடிகை சுஜிதாவின் கணவன் மற்றும் மகன், யூடுப் பிரபலம் இர்பான் உடைய அக்கா மற்றும் மனைவி, ப்ரியங்காவின் அம்மா மற்றும் சகோதரன், நடிகர் அக்ஷய் கமல் உடைய அம்மா மற்றும் தம்பி, VTV கணேஷ் உடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த டாப் contestantகளுடன் சேர்ந்து அவர்களின் குடும்பத்தினர் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்குகளை கடந்து இந்த வரத்துக்கான Chef Of The Week பட்டத்துக்காக போட்டியிடபோறார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]