Home shows குக் வித் கோமாளி ‘Knockout’ சுற்றில் Eliminate ஆவது யார்? – ஆகஸ்ட் 10 & 11

குக் வித் கோமாளி ‘Knockout’ சுற்றில் Eliminate ஆவது யார்? – ஆகஸ்ட் 10 & 11

விஜய் டிவியில் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவை ஷோ குக் வித் கோமாளி சீசன் 5. இந்த வாரம் 'Knockout' சுற்றில் போட்டியாளர்களின் ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார். 

by Vinodhini Kumar

ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வித்தியாசமான சுற்றுக்களை நடத்தி, போட்டியாளர்களுக்கு சவால் கொடுத்து வருகிறார்கள். அப்படி இந்த வாரம் ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதி ஒளிபரப்பாகும் எபிசோடில் ‘Knockout’ சுற்று நடக்க உள்ளது. 

CWC Knockout round

இந்த ‘Knockout’ சுற்றில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல நடிகர் பிரஷாந்த் மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த், குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொள்கிறார்கள். ‘அந்தகன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர்கள் இதில் வருகை தருகிறார்கள்.

‘Top Star’ பிரஷாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ –  திரை விமர்சனம்!

கோமாளிகள் இந்த வாரம் ‘குக் வித் கோமாளி சீசன் 5’ல் உள்ள போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களாக மாறி வந்து காமெடி செய்ய உள்ளனர். முக்கியமாக புகழ் இந்த சீஸனின் புகழ்பெற்ற போட்டியாளர் Shaalin Zoya போல புடவையில் வந்து நடிகர் பிரஷாந்த் உடன் செய்கிறார். KPY சரத் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் போல உடையணிந்து அசத்தியுள்ளார். 

தற்போது 7 போட்டியாளர்கள் காலத்தில் உள்ள நிலையில், இந்த வாரம் ‘One on One’ போட்டி நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் இருவர் மோதிக்கொள்ளும் பரிட்சையில் யார் குறைந்த புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்கள் Elimination Cooking Challenge சுற்றுக்கு செல்லும் நிலை ஏற்படும். 

அப்படி கடைசி மூன்று இடத்தில் இந்த வாரம் இருப்பவர்கள் – அக்ஷய் கமல், இர்பான் மற்றும் பாடகி பூஜா Elimination Cook Offல் சமைத்து நடுவர்களை கவர வேண்டும். இதில் கடந்த வாரமும் கடைசி இரண்டு இடத்தில இருந்தவர் அக்ஷய் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5- ஹிட்டாகாதது ஏன்?

இந்த மூவரில் Youtuber இர்பான் இந்த சீசனில் நன்றாக சமைத்து பாராட்டுக்கள் பெற்று வருகிறார். அதே போல சூப்பர் சிங்கர் பாடகி பூஜாவும் சில சுற்றில் நடுவர்களிடம் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். மீதம் உள்ள நடிகர் அக்ஷய் கமல் தான் வெளியேற அதிக வாய்ப்புள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.