விஜய் டிவியில் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 5 எபிசோடின் ப்ரோமோக்கள் வெளியானது. ‘கிடா விருந்து’ சுற்றில், போட்டியாளர்கள் கிராமத்து சாயலில் அம்மிக்கல் பயன்படுத்தி சமைக்கும் டாஸ்க் நடக்க உள்ளது. அதிலும் முக்கியமாக இந்த வார சிறப்பு விருந்தினர்களாக நடிகர்/ இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை சரண்யா பொன்வண்ணன் கலந்துகொள்கிறார்கள்.

‘மழை பிடிக்காத மனிதன்‘ படத்தின் ப்ரோமொஷனுக்கு நடிகர் விஜய் ஆண்டனி குக் வித் கோமாளி சீசன் 5 -க்கு விருந்தினராக வருகிறார். சினிமாவில் பிரபலாமான நடிகர்களின் வேடங்களில் கோமாளிகள் காமெடி செய்ய, அவர்களுடன் இணைந்து விஜய் ஆண்டனியும் நகைச்சுவையை பேசுகிறார். குக் வித் கோமாளி பற்றிய பாடல் ஒன்றையும் மெட்டமைத்து அனைவரும் பாடினார். இந்த ப்ரோமோவை அடுத்து, இன்னொரு ப்ரோமோவில் ஒரு surprise இருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். அவரும் இந்த வார இறுதி எபிசோடில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். கோமாளிகளுடன் சேர்ந்து சரண்யா பொன்வண்ணனும் காமெடி செய்வது ப்ரோமோவாக வெளியிடப்பட்டது.
மூன்றாவது ப்ரோமோவில் ‘கிடா விருந்து’ சுற்றில் கண்டிப்பாக Elimination உள்ளதாகவும், அதில் கடைசி மூன்று புள்ளிகள் பெற்று Danger Zoneல் உள்ள போட்டியாளர்களை காட்டினார். VTV கணேஷ் அவர்கள், ஷாலின் ஜோயா மற்றும் அக்ஷய் கமல் ஆகியோர் இந்த வாரம் கடைசி மூன்று இடங்களில் இருக்கிறார்கள். விஜய் டிவியின் பாதி குக் வித் கோமாளி ப்ரோமோக்களில் கன்டென்ட் கொடுத்து நிகழ்ச்சியில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் VTV கணேஷ்.
குக் வித் கோமாளி சீசன் 5ல் அதிகம் கன்டென்ட் கொடுத்து கலக்கி வருபவர் ஷாலின் ஜோயா. அவர் ஏற்கனவே elimination கட்டம் வரை வந்து, அவருக்கு பதிலாக இனொரு நல்ல போட்டியாளர் நீக்கப்பபட்ட சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் விஜய் டிவியில் ஷாலின் ஜோயாவை Eliminate செய்யமாட்டார்கள். மீதம் உள்ளது நடிகர் அக்ஷய் கமல் ஒருவரே. அவர் தரப்பில் இருந்து பெரியளவில் நகைச்சுவை கன்டென்ட் இல்லாததால் அவரை வெளியேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.
எப்படியும் அடுத்த ரியாலிட்டி ஷோவான Bigg Boss சீசன் 8 வரும் வரை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வைத்து தான் TRP யை தக்கவைத்து வரமுடியும் என்ற தீர்மானத்தில் உள்ளது விஜய் டிவி.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]