Cooku with Comali ஐந்தாவது சீசனில் இன்றைய வாரத்தின் புரோமோ வந்துள்ளது.
Cooku with Comali Season-5 இன்றைய புரோமோவில் குக்குகள் அனைவருக்கும் புதிய சவால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் மண் மனம் மாறாத கிராமத்து விருந்து சமையல் செய்வது தான் அந்த சவால். கடந்த வாரம் ஆரம்பித்து கலகலப்பாக நடந்து வருகிற Cooku with Comali season- 5, பல எதிர்பாராத Cookகள் கலந்துகொண்டு உள்ளனர்.
மண் மனம் மாறாத கிராமத்து விருந்து சமையல் சவாலில் மற்றும் ஒரு சவாலாக சிறு தானியங்கள் கொண்டு செய்ய வேண்டுமாம். சாதாரணமாக விருந்து சமைப்பதே கடினமான வேலை அதிலும் கூட ஒரு கோமாளி அதோடு வரும் டாஸ்க் என இத்தனையும் சமாளித்து இந்த வாரம் Cooku with Comali எபிசோட் ரகளையாக இருக்க போகிறது.

அனைத்து Cookகளும் பாரம்பரிய உடை அணிந்து அழகாக புரோமோவில் இருந்தார்கள். Chef Dhamu மற்றும் Chef மாதம்பட்டி ரங்கராஜ் வேட்டி சட்டையில் கலக்கலாக இருக்கிறார்கள்.
இந்த வாரம் Cooku with Comaliன் ஸ்பெஷல் கெஸ்டாக இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் Lakshmipathy Balaji மற்றும் Subramaniam Badrinath வந்துள்ளார்கள். ஏற்கனவே கிரிக்கெட் கமண்டரியில் இருவரின் நகைச்சுவை திரணை கேட்டிருப்போம், Cooku with Comali Season-5ல் உள்ள புதியகோமாளிகள் ஷப்னம், நாஞ்சில் விஜயன், அன்ஷிதா, வி ஜெ வைஷாலி, ராமர் உடன் இந்த வாரம் இவர்களும் சேர்ந்தால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. வார கடைசியில் கோலாகலமாக அமையப் போகிறது இந்த மண் மனம் மாறாத கிராமத்து விருந்து எப்பிசோட்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]