Home shows குக் வித் கோமாளி – டாப் 5 போட்டியாளர்கள் யார்? வெளியேறுவது யார்?

குக் வித் கோமாளி – டாப் 5 போட்டியாளர்கள் யார்? வெளியேறுவது யார்?

டாப் 5 போட்டியாளர்கள் யார் என தீர்மானிக்க போகும் இந்த குக் வித் கோமாளி வாரத்தில், 'பிக் பாஸ் Confusion ரூம்' ரவுண்ட் நடக்கவுள்ளது. 

by Vinodhini Kumar

விஜய் டிவியில் வார இறுதியில் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் காமெடி நிறைந்த சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 5. இந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களை தீர்மானிக்கும் போட்டி நடக்கிறது. இந்த வாரம் ‘பிக் பாஸ் Confusion ரூம்’ ரவுண்டு நடக்கிறது. 

முதல் ப்ரோமோவில் விதவிதமாக பேய் வேடமிட்டுள்ள கோமாளிகள், இந்த confusion ரூமுக்கு சென்று அங்கு பிக் பாஸ் குரலில் அடுத்தடுத்து சொல்லும் சமையல் பொருட்களை எழுதி சமையல் செய்பவர்களிடம் குறி சேமிக்க வேண்டும். இந்த வாரத்தில் நடிகை சுசித்ரா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, VTV கணேஷ், இர்பான், அக்ஷய் கமல் ஆகியோர் டாப் 6 குக்குகள் போட்டியில் உள்ளனர். 

இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 5 -ல் Natural Star நானி வருகை!

ஒரு வாரத்திற்கு முன் VTV கணேஷ் அவர்கள் போட்டியிடாமல் இருந்ததால் அவர் Danger Zone -ல் உள்ளார். கடந்த வாரம் ‘family சுற்று’ நடந்தது, அதில் நடிகை திவ்யா துரைசாமி கலந்துகொள்ளாததால், அவரும் Danger Zone -ல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வாரம் கம்மியான புள்ளிகளுடன் இருப்பவர் மூன்றாவது Danger Zone குக்காக இருப்பார்கள். 

Actress Sujitha in குக் வித் கோமாளி season 5

இந்த வாரம் கண்டிப்பாக ஒரு எலிமினேஷன் இருக்கிறது, அது யாராக இருக்கு? குக் வித் கோமாளி சீசன் 5 -ன் டாப் 5 போட்டியாளர்கள் யார்? என்ற பதில்கள் இந்த வாரம் தெரியவரும். அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 8 உடைய செய்தி இன்று வெளியாகிறது, குக் வித் கோமாளி முடிந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுக்கப்போவது பற்றியான செய்தி தான் வெளியாகிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.