விஜய் டிவி யில் கலக்க போவது யாரு? போன்ற ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராகவும், குக்கு வித் கோமாளியின் கோமாளிகையாகவும் கலக்கி கொண்டிருந்த மணிமேகலை குக்கு வித் கோமாளி சீசன் 5 யின் தொகுப்பாளராக பங்கேற்றிருந்தார். அங்கு மணிமேகலைக்கும் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் VJ பிரியங்காவிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. “அவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுப்பதாகவும், அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என கூறி என்னுடயை வேலையில் தலையிடுகிறார் என்றும்” மணிமேகை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு காரணம் VJ பிரியங்கா தான் காரணம் எனக் கூறி நெட்டிசன்கள் பிரியங்காவை திட்டி தீர்த்தனர்.
இந்த சில பிரச்சனைகளால் மணிமேகலை குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்தும், விஜய் டிவியை விட்டும் விலகியிருந்தார். அதன் பின், தற்போது மணிமேகலை ஜீ தமிழில் தனது தொகுப்பாளர் பயணத்தை மீண்டும் துவங்கியுள்ளார். அதன் முதல் படியாக Dance Jodi Dance Reloaded 3 ன் தொகுப்பாளராக இவர் பங்கேற்கிறார். மேலும், இந்த ஷோவின் முன்னாள் தொகுப்பாளரான RJ விஜயுடன் மணிமேகலையும் இணைத்து கலக்கல் காமெடியுடன் அசத்தலான Dance Jodi Dance Reloaded 3 ஐ தொகுத்து வழங்கவுள்ளார்.
The next in My CAREER ! @ZeeTamil Dance Jodi Dance Reloaded 🎥 #Anchor
— MANIMEGALAI (@iamManimegalai) February 23, 2025
Need all ur Wishes & Love as always 💛
Work Hard
Trust God 😎 pic.twitter.com/e3qhoeaxjG
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். அதன் அடுத்த சீசன் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த, “சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்று மேடை மீண்டும் வந்து விட்டது” என்ற அசத்தலான வாசகத்துடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சினேகா, வரலட்சுமி சரத்குமார், மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். முந்தைய இரண்டு சீசன்களிலும் சங்கீதா நடுவராக இருந்த நிலையில், அவர் விலகியதால் வரலட்சுமி சரத்குமார் முதல் முறையாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
Dance Jodi Dance Reloaded 3 – ஒளிபரப்பு நேரம்
மணிமேகலை மற்றும் ஆர்.ஜே.விஜய் இணைந்து தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 1 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]