மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்துவழங்கும் Bigg Boss சீசன் 8 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் யார் போட்டியாளர்களாக சேரப்போகிறார்கள் என்ற கணிப்பும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படி இன்று அதிகம் பேசப்படும் போட்டியாளர் தான் திவ்யா துரைசாமி.
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றில் தன்னுடைய எளிமையான நடிப்பால் தமிழ் நாட்டு மக்களை ஈர்த்துள்ள இந்த Dhivya Duraisamy யார்?

பெரம்பலூரில் 1990ம் வருடம் பிறந்த Dhivya Duraisamy, சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் பல முன்னணி செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே மாடலிங் செய்து வந்த திவ்யா, பின்னர் நடிக்க தொடங்கினார்.
இவரின் முதல் பட வாய்ப்பு 2019ல் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் மூலம் கிடைத்தது. இந்த படத்தில் மகாபா ஆனந்தின் காதலியாக நடித்திருப்பார். பின்னர், சில சிறு பட்ஜெட் படங்களில் நடித்தவர், 2022ல் சூரியா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படகில் ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஆனால் படம் முழுவதும் தனித்து தெரியும்படியான படமாக அமைந்தது 2024ல் வெளியான ‘Blue Star’ தான். இந்த படத்தில் நடிகர் ப்ரித்வி ராஜன் உடைய ஜோடியாக ‘தேன்மொழி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2024 Dhivya Duraisamy க்கு பெரிய திருப்பமாக அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘வாழை‘ படத்தில் ‘வேம்பு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உருக்கமான படமாக வெளியாகி பல வாரங்கள் சென்றும் பேசப்படும் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்தார்.
Bigg Boss Tamil சீசன் 8 -ல் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார் Shaalin Zoya!
இந்த படத்தில் நடித்து முடித்தபோது, விஜய் டிவியில் உள்ள பிரபல சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் கடைசி 5 வாரங்கள் வரை நல்ல போட்டியாக இருந்தவர், பின்னர் வெளியேற்றபட்டார்.

குக் வித் கோமாளி ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் வரும் அக்டோபர் 6 முதல் தொடங்கும் Bigg Boss நிகழ்ச்சியில் போட்டியிட இவர் தேர்வாகியுள்ளதாக பேசப்படுகிறது. பெரும்பாலான குக் வித் கோமாளி போட்டியாளர்களும், கோமாளிகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதால் இவர் இந்நிகழ்ச்சியில் இணைவது ஆச்சரியமாக இல்லை.
Bigg Boss சீசன் 8 தொடங்குவதற்கு முன் நடந்துள்ள விபரீதம்! – வடமாநில தொழிலாளி படுகாயம்!
சமயல் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், பட நிகழ்ச்சிகளிலும் மிகவும் சாந்தமான சுபாவத்தோடு, சிரித்த முகத்துடன் இருக்கும் திவ்யா துரைசாமி, பிக் பாஸ் போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் எப்படி 100 நாட்கள் அனைத்துவிதமான Task மற்றும் சண்டைகளை சிரிப்புடன் கடந்து வர போகிறார் என்பதை இன்னும் சில வாரங்களில் தெரிந்துகொள்ளலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]