Home shows Sun Tv’யின் ‘Top Cooku Dupe Cooku’ ஷோவின் நடுவர் சிம்புவா?!

Sun Tv’யின் ‘Top Cooku Dupe Cooku’ ஷோவின் நடுவர் சிம்புவா?!

'Cook With Comali' நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பாளர் இயக்குநரான ரவுஃபாவுக்கு சிம்பு மிகவும் நல்ல நண்பர். அந்த நெருக்கத்தின் காரணமாக 'Top Cooku Dupe Cooku' ஷோவுக்கு சிம்புவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

by Santhiya Lakshmi

விஜய் டிவியில் புகழ்பெற்ற காமெடி குக்குங் ஷோவான ‘குக்கு வித் கோமாளி’ ஷோவை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் அப்படியே சன் டிவிக்கு இடம்பெயர்ந்து ‘Top Cooku Dupe Cooku’ எனப் புது ஷோவை உருவாக்கியிருக்கிறது. ஜூன் மாதம் முதல் இந்த ஷோ சன் டிவியில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாக இருக்கிறது. 

வெங்கடேஷ் பட் நடுவராக களமிறங்கும் இந்த ஷோவில் ‘குக்கு வித் கோமாளி’யில் இருந்த கலக்கப்போவது தீபா, யாரு தீனா, ஜிபி முத்து, சூப்பர் சிங்கர் பரத், மோனிஷா பிளசி எனப்பலரும் கலந்துகொள்கிறார்கள்.

இதில் வெங்கடேஷ் பட்டோடு செலிபிரிட்டி நடுவராக  கலந்துகொள்ள ‘சிம்பு’விடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ தயாரிப்பு டீம். தயாரிப்பு நிறுவனத்துக்கு சிம்பு நீண்டகால நண்பர் என்பதால் சிம்பு ஓகே சொல்லலாம் என்கிறார்கள். அதேசமயம் விஜய் டிவியைப் பகைத்துக்கொண்டு சிம்பு சன் டிவிக்கு வருவாரா என்பதும் சந்தேகம்தான் என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு என்ன என்பது தெரிந்துவிடும்.

Cooku with Comali Season-5ல் மண் மனம் மாறாத கிராமத்து சமையல்! 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.