விஜய் டிவியில் பாடல், நடனம், நடிப்பு, விளையாட்டு என பலதரப்பட்ட போட்டி நிகழ்ச்சிகள் ஒவ்வொரு இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஒளிபரப்பாவது வழக்கம். அப்படி நடன நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகியிருந்தாலும், ‘Jodi No. 1’ நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் அதிகம். இந்த நிகழ்ச்சியின் நீட்சியாக தற்போது ‘Jodi Are You Ready’ என்ற நடந்த் போட்டி ஒளிபரப்பானது. 2024 ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பான முதல் சிசனின் வேறையாளர்களாக போட்டியாளர்கள் தனுஷ் மற்றும் ஜஸ்டினா தேர்ந்தெடுக்கப்பட்டு கோப்பையை வென்றனர்.
தென்னிந்தியாவின் பிரமாண்ட Dance battle.. 💃🕺😎 #JodiAreUReady Season 2 – விரைவில்.. நம்ம விஜய் டிவில.. #SandyMaster #Sridevi #JodiAreUready #VijayTelevision #VijayTV pic.twitter.com/mYSTBMN99H
— Vijay Television (@vijaytelevision) January 3, 2025
இப்போது அடுத்ததாக ‘Jodi Are You Ready 2’ இரண்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில் கடந்த சீசன் நடுவர்களாக இருந்த சாண்டி மாஸ்டரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரும் கலக்கலாக நடனமாடி இரண்டாவது சீசனை அறிவித்தனர். ஏறத்தாழ தற்போது நடந்துவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய, அந்த நேரத்தில் வார இறுதியில் ‘Jodi Are You Ready 2’ நிகழ்ச்சி என தெரிகிறது.
கடந்த சீசன் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக சாண்டி மாஸ்டர், நடிகைகள் ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் மீனா ஆகியோர் இருந்தனர். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகர் ரியோ ராஜ் மற்றும் தொகுப்பாளினி ஏஞ்சலின் ஆகியோர் முதல் சீசனை தொகுத்து வழங்கினார்கள். இந்த சீசனிலும் திறமையான நடனக் கலைஞர்கள் பலர் போட்டியிட்டு வாராவாரம் மக்களை மகிழ்விப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.