Jodi Are You Ready Season 2 தொடங்கிவிட்டது. இதற்கு முன் தொகுத்து வழங்கிய ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் மீண்டும் இரண்டாவது சீசனில் தொகுப்பாளராக இணைந்துள்ளனர். நடன நிகழ்ச்சியில் மிகவும் கவனம் ஈர்க்கும் விஷயம் ஒன்று நடுவர்கள் மற்றொன்று பங்கு பெரும் ஜோடிகள். முதல் சீசனில் நடுவர்களாக பங்கேற்ற மாஸ்டர் சாண்டி மற்றும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருடன் 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னியாக கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்த ரம்பா இந்த முறை நடுவராக இவர்களுடன் இணைந்துள்ளார்.
Theri Performance by #Anshita 🔥
— Vijay Television (@vijaytelevision) January 25, 2025
Jodi Are U Ready Season 2 – சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SandyMaster #Sridevi #Rambha #JodiAreUReady2 #GrandLaunch #JodiAreUReadySeason2 #DanceShow #Dance #VijayTelevision #VijayTV #StarVijayTV pic.twitter.com/UUfLK9YIhe
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் உள்ளனர். அதே போல் இந்த “Jodi Are U Ready” நிகழ்ச்சிக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் 12 தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து ஜோடியாக பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கடந்த இரு வாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
யார் அந்த 12 பிரபலங்கள்?
விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் மீடியா துறையில் இருக்கும் பிரபலங்கள் உட்பட மொத்தம் 12 பிரபலங்கள் Jodi Are You Ready Season 2 -ல் பங்கேற்றுள்ளனர்.
- அன்ஷிதா
- அருமினா
- ஆதிரா
- அக்ஷிதா
- அனன்யா ராவ்
- சாந்தினி
- தீஷல்
- ஜாஸ்மின்
- காவ்யா
- ராணி குமாரி
- ரியா ரூத்
- ஸ்ரேயா
முதல் இரண்டு எபிசொட் கலாட்டாக்கள் நிறைந்த அறிமுகமாக அமைந்தது. இதையடுத்து அவர்களுக்கு ஜோடி யார் என்பதை தீர்மானம் செய்ய மொத்தம் 19 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இவர்களில் தனக்கான ஜோடி யார் என்பதை கொடுக்கப்பட்ட 100 தங்க நாணயங்களை வைத்து ஏலத்தில் உறுதி செய்து கொள்ளலாம் என்று பெண் போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது.
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ‘செல்லம்மா’…புது சீரியல் ‘கண்மணி அன்புடன்’!
ஆண்கள் போட்டியாளர்கள் முழு பட்டியல்
- பாஸ்கர்
- அபினவ்
- சஞ்சய்
- கௌரி ஷங்கர்
- B-Trix
- பிரசாத்
- பிரதீப்
- மோஹித் குர்மி
- விஜய்
- அவினாஷ்
- யஷ்வந்த்
- குருநாத்
- அவினாஷ்
- சிவா
- வேணு
- மகேஷ் பாலாஜி
- அரவிந்த்
- சாண்டி சுந்தர்
- மணிகண்டா
இவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தனது நடன திறமையை வெளிக்காட்டி இதுவரை உறுதியான ஜோடிகளின் பட்டியல் இதோ.
- அக்ஷிதா & B-Trixx
- அன்ஷிதா & சாண்டி சுந்தர்
- ஆதிரா & சஞ்சய்
- ஜாஸ்மின் & மணிகண்டா
- தீஷல் & அவினாஷ் அசோக்
- அனன்யா ராவ் & கௌரி ஷங்கர்
- ஸ்ரேயா & விஜய்
இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் அடுத்த 4 ஜோடிகள் யார் என்பது தெரிய வரும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]