விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் Bigg Boss. ஆங்கில ரியாலிட்டி நிகழ்ச்சியான Big Brother நிகழ்ச்சியை உலகமெங்கும் வெவ்வேறு மொழிகளில் எடுத்து வந்துள்ளார்கள். அப்படி தமிழில் விஜய் டிவியில் 7 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
என்றும் உங்கள் நான்.@vijaytelevision pic.twitter.com/q6v0ynDaLr
— Kamal Haasan (@ikamalhaasan) August 6, 2024
பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். நடிப்பில் மட்டும் இல்லாமல் திரைத்துறையிலேயே பல வேளைகளில் கைதேர்ந்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் விஜய் டிவியில் வாராவாரம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவரது ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு ஆச்சரியமான செய்தியாக இருந்தது.
இந்தியாவில் ஏற்கனவே ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்துவழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த ரசிகர்களுக்கு ஈடாக தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியும் பெரிய வெற்றியடைந்தது. அதிலும் முக்கியமாக உலக நாயகனை பார்ப்பதற்காகவே மக்கள் தவறாமல் வாராவாரம் Bigg Boss நிகழ்ச்சியை பார்த்தனர்.

அப்படி நடிகர் கமல் ஹாசன் என்ற நபருக்காகவே கொண்டாடப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இதற்கு முன் நடந்து முடிந்த Bigg Boss சீசன் 7 எதிர்பார்த்த அளவுக்கு TRP இல்லாமலும், போட்டியாளர்கள் மற்றும் கமல் ஹாசன் மீதே எழுந்த சர்ச்சைகள் இதற்கு காரணமாக அமைந்தது.
இப்போது தான் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரமுடியாது என்று தன்னுடைய வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு Bigg Boss சீசன் 7 போடாதது தான் காரணமா? கமல் ஹாசன் பிக் போஸில் இருந்து விலக்கியதற்கு காரணம் பிரதீப் ஆண்டனியின் எலிமினேஷனா? அரசியல் ரீதியாக கமல் ஹாசன் அவர்களின் நிலை தான் காரணமா?
Bigg Boss சீசன் 7 ஒரு சர்ச்சையான சீசனாக அமைந்தது. போட்டியாளர்கள் மத்தியில் சுவாரசியமான கன்டென்ட் இல்லாமல் இருந்தது. மக்களால் கொண்டாடப்பட்ட போட்டியாளர் பிரதீப் ஆண்டனிக்கு கமல் ஹாசன் Red Card தந்து வெளியேற்றியது, எப்போதும் அறிவுப்பூர்வமாக உரையாடி, தன்னுடைய முற்போக்கு சிந்தனைகளை தீர்க்கமாக சொல்லும் நடிகர் கமல் ஹாசன், நடந்து முடிந்த சீசனில் நிகழ்ச்சியை தாண்டி தனிப்பட்ட அரசியல் கருத்துக்களையும், அதிகமாக பேசியது என நிறைய சிக்கல்களில் மாட்டிக்கொண்டார்.

இதில் உண்மையான கரணம் என்னவாக இருக்கும் என மக்கள் விவாதித்து வருகிறார்கள். பிரதீப் ஆண்டனிக்கு நீதி கிடைத்தது என ஒரு கூட்டமும், கமல் ஹாசனை ஆதரித்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என அவரின் ரசிகர்களும் அவரின் பதிவில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரியாலிட்டி நிகழ்சிகளை பெயர்போன ஒரு சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அனால் சமீபத்தில் அவர்களின் பிரபலமான நிகழ்ச்சிகளில் மக்கள் ரசித்த முகங்களை இழந்து வருகிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பாட் சென்றதும் அந்தநிகழ்ச்சிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அதேபோல தற்போது உலகநாயகன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதும் கண்டிப்பாக விஜய் டிவிக்கு இழப்பாக அமையும்.
கமலுக்கு பதிலாக யார்?
மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வெள்ளித்திரையை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கொண்டாடப்பட்ட கமல் ஹாசன், நிச்சயமாக ஒரு கடினமான போட்டியை அமைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை இவருக்கு பின் தொகுக்கும் தகுதி யாருக்கு உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழ் Bigg Boss OTT நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்தார். ஒரு வார எபிசோட் மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்தார்.

விஜய் டிவியில் தீர்க்கமான பேச்சும், பலராலும் அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் என்று கணிக்கப்படுபவர் தொகுப்பாளர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சியை தனக்கானதாக மாற்றி, இன்றும் தொகுத்து வருகிறார். மற்றொரு பெரிய கணிப்பு நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்துவழங்க வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே வேற சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]