கண்டிப்பாக வெளிநாட்டினர் ஒருவர் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளை சமைப்பதை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் Krishna Mckenzie, பிரபலமாக “இது இன்னாது இது” என தெளிவாக தமிழில் பேசுவது, பலரின் கவனத்தை ஈர்த்தது.

இணையதளத்தில் இப்போதெல்லாம் வித்தியாசமான, தனித்துவமாக உருவாக்கியுள்ள Content -கள் பல உண்டு. அதில் சமீப காலமாக பலரால் பார்த்து பேசப்பட்டு வரும் ஒருவர் தான் Chef Krishna Mckenzie. ஆனால் இவர் ஏன் இப்போது தனித்து, பேசும்பொருளாக உள்ளார் என்ற கேள்விக்கு பதில் பலருக்கும் தெரிந்தது தான்.
யார் இந்த Chef Krishna Mckenzie?
இயற்க்கை விவசாயம் மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு, அதை தன்னுடைய சானலில் பதிவிட்டு வருகிறார் Chef Krishna Mckenzie.
இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படித்த கிருஷ்ணா மெக்கன்சி, ஒரு இயற்க்கை விவசாயி மற்றும் இசைக்கலைஞர் ஆவார். அவர் 1993ல் தமிழ் நாட்டிற்கு வந்து, ஆரோவில்லுக்கு அருகில் அமைந்துள்ள தனிமைப் பண்ணையின் மையத்தில் இருக்கிறார். அங்கு அவர் தமிழ்நாட்டின் நாட்டு காய்கறிகளை முழுமையாக இயற்க்கை வழியாக விவசாயம் செய்து, ஒரு ஆரோக்கியமான உணவகத்தையும் நடத்தி வருகிறார்.
சமையல் Express | Coming Soon…#SamayalExpress #ComingSoon #NewRealityShow #ZeeTamil pic.twitter.com/znD97xcOZU
— Zee Tamil (@ZeeTamil) August 30, 2024
விஜய் டிவிக்கு No சொன்ன காரணம்
லட்சகணக்கான பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை கொண்டு 5 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் பரிட்சயமான போட்டியாளர்களுடன் வித்தியாசமான, எதிர்பார்க்காத போட்டியாளர்களை அழைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய சீசனில் இவரை போட்டியாளராக தேர்ந்தெடுததாக செய்தி வெளியானது.
குக் வித் கோமாளி – டாப் 5 போட்டியாளர்கள் யார்? வெளியேறுவது யார்?
வெளிநாட்டவரான Krishna Mckenzie, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்தால் இயற்கையாக விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே பயன்படுத்தி சமைப்பேன் என கூறியதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்த நிகழ்ச்சி தயாரிப்பாளர், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அவரின் வேண்டுகோளை மறுத்ததாகவும் கூறினார் கிருஷ்ணா மெக்கன்சி. இந்த காரணத்தால் தான் விஜய் டிவியில் இணையவில்லை என்ற உண்மையை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறினார்.
Zee தமிழில் புதிய சமையல் நிகழ்ச்சி
Zee தமிழ் சேனல் தற்போது விஜய் டிவிக்கு பெரிய போட்டியாக வளர்ந்து வருகிறது. சீரியல்கள் வழியாக போட்டி போட்டுவந்தவர்கள் இப்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஆரம்பித்துள்ளது. சமையல் நிகழ்ச்சிகளை நடத்துவதஹு Zee தமிழ் சேனலுக்கு புதிதல்ல, இவர்கள் ஏற்கனவே ‘அஞ்சறை பேட்டி’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினர்.
தற்போது இணையத்தில் பிரபலமாக பார்க்கப்படும் Krishna Mckenzieயை அவர்களின் புது சமையல் நிகழ்ச்சியான ‘சமையல் Express’ யில் இணைத்துள்ளனர். விஜய் டிவியை உதறி தள்ளிவிட்டு Zee தமிழில் இணைந்துள்ளது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]