தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக முன்னணி வகித்து வரும் Vijay Tv-ல் பல reality show ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. செப்டம்பர் 8, ஞாயிற்றுகிழமை அன்று கடைசி episode-ஐ ஒளிபரப்பியது “அது இது எது” நிகழ்ச்சி. 2009-ல் சீசன் 1 நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. ‘குரூப்ல டூப்பு”, “சிரிச்சா போச்சு”, “மாத்தி யோசி” என மூன்று சுற்றுகளை கொண்ட இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து தொடங்கப்பட்டது. மிகப்பெரிய அங்கீகாரம் நிகழ்ச்சிக்கு மட்டும் அல்ல சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் கிடைத்தது. 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மா.கா. பா.ஆனந்த் நியமிக்க பட்டார்.
முதலில் விமர்சனங்கள் எழுந்தாலும் பின்னர் மா.கா. பா.ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியது. தற்போது அவருக்கு மாற்றாக வேறு யாரையும் நினைக்க முடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக அந்த நிகழ்ச்சி மட்டும் அல்லது விஜய் டிவியில் மற்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அது இது எது சீசன் 3, மதியம் 1.30 மணிக்கு ஞாயிற்றுகிழமை ஒளிபரப்பானது. இதன் கடைசி எபிசொட் செப்டம்பர் 8 அன்று ஒளிபரப்பான நிலையில், அடுத்த reality show தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் விஜய் டிவி இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதை உறுதி படுத்தும் விதமாக விஜய் டிவியின் இன்ஸ்ட்டா பக்கத்தில் புது reality show-வின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. “Company” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியும் ஒரு game show பின்னணியில் அமைய உள்ளது. இந்த நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க உள்ளார். “அது இது எது” ஒளிபரப்பான மதியம் 1.30 மணிக்கு “Company” என்ற புது கேம் ஷோ ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com