Home shows “Maama Manasulayo” புத்தம் புது game show, என்ன மாதிரி இருக்கும்?

“Maama Manasulayo” புத்தம் புது game show, என்ன மாதிரி இருக்கும்?

சன் டிவியில் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அறிமுகம் ஆகும் புத்தம் புது game show “மாமா மனசிலாயோ”.

by Shanmuga Lakshmi

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவி மெகா சீரியல் மற்றும் புதுப்படங்களை ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ளது ஆனால் game show, ரியாலிட்டி ஷோ, மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு பின்னே உள்ளது. இதற்க்கு முன் சன் டிவியில் பல game show நடத்தப்பட்டது ஆனால் எதுவும் மக்கள் இடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” என்ற மாபெரும் வெற்றி வெற்றி பெற்ற நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி TRP-யில் முன்னே வந்து நிற்கிறது சன் டிவியில் ஒளிபரப்பான “டாப்பு குக்கு டூப்பு குக்கு”நிகழ்ச்சி. இதுவே முதல் சீசன் ஆனாலும் இந்த ரியாலிட்டி ஷோவுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. சனி & ஞாயிறு மதியம் 12.30-க்கு ஒளிபரப்பட்டது. இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் முடிவடைந்த நிலையில் முதல் சீசனில் வெற்றியாளர் ஆக நடிகர் மற்றும் youtube பிரபலமான நரேந்திர பிரசாத் மற்றும் நடிகை சுஜாதா அறிவிக்கப்பட்டனர்.  

தற்போது புதிதாக ஒரு game show-வை துவங்க முடிவெடுத்துள்ளது சன் டிவி. இதுவரை இந்த game show குறித்து மூன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இரண்டு ப்ரோமோவில் நகைச்சுவை நடிகர்கள் ஆன தீனா மற்றும் அதிர்ச்சி அருண் இடம் பெற்றுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு ஒரு celebrity எதிர்கொள்ளும் துன்பம் தெரிந்து கொள்ள இதை பார் என்று தீனா கூறுவது போன்ற ப்ரோமோ, இந்த game show திருமணம் முடிந்த, முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும் celebrities-ஐ வைத்து நடத்தப்படுமா என்ற யூகிப்பில் பல ரசிகர்கள் உள்ளனர். 

தமிழ் சினிமா ப்ரோமோஷன்களுக்கு ரியாலிட்டி ஷோக்கள் உதவுகிறதா?

“மாமா மனசிலாயோ” என்ற இந்த game show-வின் தொகுப்பாளர்களாக தீனா, அதிர்ச்சி அருண் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இந்த game show மதியம் 12.30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் என்று சன் டிவி இணையதள பக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.