Home shows குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகல்! வெளிச்சத்துக்கு வரும் இருதரப்பு உண்மைகள்!

குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகல்! வெளிச்சத்துக்கு வரும் இருதரப்பு உண்மைகள்!

விஜய் டிவியில் நடந்துவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனிமேல் தான் பயணிக்க போவதில்லை என தொகுப்பாளினி மணிமேகலை அறிவித்துள்ளார். 

by Vinodhini Kumar

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி, லட்சக்கணக்கான ரசிகர்களை கொரோனா நேரத்தில் சிரிக்க வைத்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடக்கம் முதல் சர்ச்சைகளாகவே இருந்து வருகிறது. இதில் புதிதாக தொகுப்பாளினி மணிமேகலை சமீபத்தில் விளக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Anchor மணிமேகலை

குக் வித் கோமாளி சீசன் 5ஐ தொகுத்து வழங்கி வந்தவர் மணிமேகலை. 2019ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் சேர்ந்து பல ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை தொகுத்துவந்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதலில் கோமாளியாக இறந்தவர், சீசன் 4 முதல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

மணிமேகலை குக் வித் கோமாளியை விட்டு விலக காரணம் என்ன? 

தற்போது ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 5ல், விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக பங்கேற்றார். இந்த சீஸனின் ஆரம்பம் முதல் அவரின் குரல் இந்த நிகழ்ச்சியில் ஓங்கியிருப்பதும், அவர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் என்பதை மறந்து தொகுப்பாளராக நினைத்து பல முறை தன்னை குறுக்கிட்டதாகவும் தொகுப்பாளினி மணிமேகலை கூறினார். 

Priyanka Deshpande

தன்னுடைய விலகல் பற்றியும், அதன் பின்னல் இருக்கும் காரணம் பற்றியும் ஒரு விடியோவாக வெளியிட்டிருந்தார். அதில் குக் வித் கோமாளி சீசன் 5ல் மற்றொரு தொகுப்பாளர் கலந்துகொண்டுள்ளார், அவர் என்னுடைய வேலைக்கு தடங்களாகவும், பல முறை குறுக்கிட்டு பேச விடாமல் செய்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும் சீசன் 4 வரை இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த Media Masons நிறுவனம் விஜய் டிவியை விட்டு விலகியதால், இந்த புது சீசனை விஜய் டிவியில் ஏற்கனவே சம்பந்தப்பட்டு உள்ள Global Villagers நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மாற்றம் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தனக்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி பல முறை மணிமேகலை இந்நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ளார். “ஆனால் சுய மரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இ.தொ.காவிலிருந்து விலகிவிட்டேன்” என அவர் பதிவிட்டிருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.  

“இந்த சீசனின் தயாரிப்பாளர்கள் என்னை ப்ரியங்காவுடன் ஒத்துப்போக சொன்னார்கள், மேலும் இப்படியே தொகுப்பாளராக நீடித்தால் மேலும் 2, 3 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளது என தன்னை Adjust செய்ய கூறினார்கள்” என தொகுப்பாளினி மணிமேகலை அவரின் வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார். 

மணிமேகலைக்கு கிடைத்த ஆதரவு

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியிருப்பதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மணிமேகலைக்கு, பல பிரபல டிவி தொகுப்பாளர்களும் தங்களின் ஆதரவை தெரிவித்தனர். ஏற்கனவே விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்துள்ள அனிதா சம்பத் “Guts..All The Best மணி’ என தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். 

TV Celebrities commenting on the rift between Manimegalai and Priyanka Deshpande

மேலும் நடிகையும் தொகுப்பாளினியுமான Farina, குக் வித் கோமாளியின் கோமாளியாக இருந்த Monisha Blessy  மற்றும் சக்தி ஆகியோரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா, “ப்ரியங்கா இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய இடத்தை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கவலை படாதீர்கள், இதை விட நல்ல விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது” என Comment செய்துள்ளார். 

Aishwarya Dutta comments about Priyanka Deshpande

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய 15 வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் மணிமேகலை, இப்படியான முடியை தைரியமாக எடுத்திருப்பதை இணைய வாசிகள் பாராட்டி வருகிறார்கள். தன்னுடைய உழைப்பின் மீதும், திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து, சுய மரியாதையுடன் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது பாராட்டத்தக்க செய்தியாகும்.  

மேலும் தற்போது குக் வித் கோமாளி உடைய இறுதி சுற்றின் படப்பிடிப்பு முடிந்து, அதில் முதல் இடத்தை பிடித்து நிகழ்ச்சியின் Title Winner பட்டத்தை பிரியங்கா வென்றுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இந்த எபிசொட் ஒளிபரப்பினால் கடுமையான கண்டனம் எழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை பற்றி மனம் திறந்த பிரியங்கா

இந்த சர்ச்சை முடிந்து பலர் இந்த இருவருக்கிடையே நடந்தது என்ன? உண்மையில் விஜய் டிவி செட்டில் நடந்தது என்ன? என சம்பந்தப்பட்டவர்களை காட்டிலும் வெகுவாக கருத்துக்களை பகிர்ந்தனர். தான் விலகியதாக கூறப்படும் எபிசோட் ஒளிபரப்பான பின் மணிமேகலை தன்னுடைய கண்ணோட்டத்தில் நடந்ததாகி 20 நிமிட விடியோவாக பதிவிட்டார். ஆனால் பிரியங்கா தரப்பில் இருந்து தனிப்பட்ட கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை.

குக் வித் கோமாளி சீசன் 5ன் Title Winner பட்டத்தை வென்ற பிரியங்கா முதல் முறையாக இந்த சீசனில் நடந்ததை பற்றி ஒரு பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த சீஸனின் வெற்றியாளராக மேலும் தன்னுடைய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன் என்றும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பெரிய பதிவில் அவரின் Kitchen Superstar நிகழ்ச்சி அனுபவத்தையும், எப்படி அதில் வெளியேறினார் என்றும், இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளராக அவர் முன்னேறி உள்ளதையும் குறிப்பிட்டு 10 ஆண்டுகளில் அவருக்கு சேமிக்க தெரியாததே இல்லை எனவும் பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த பதிவில் “இந்த உலகில் என்னை பற்றி தவறாக பேசும் பலர் இருந்தும், எனக்கு ஆதரவு தந்து உடன் நிற்கும் பலரை நான் கண்டுபிடித்துள்ளேன் என அவர் பதிவிட்டுள்ளார். எனக்கு போட்டியாக நான் எப்போதுமே என்னையே வைத்துக்கொள்வேன் என்றும் என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குடும்பத்தினருக்கு நன்றி” எனவும் பதிவிட்டார்.

Priyanka's statement about issue with Manimegalai

இவரின் இந்த் பதிவிற்கு பலர் ஆமோதித்து பேசியிருந்தாலும், அதற்கு இணையாக எதிர்ப்பும் எழுந்தது. உண்மையில் அந்த சூழலில் நடந்ததும், அதை சம்பந்தப்பட்ட இருவரும் எப்படி கையாண்டனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும் என்ற பேச்சும் இந்த சலலப்புக்கு இடையே முணுமுணுக்கப்படுகிறது.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.