மணிமேகலை – பிரியங்கா இடையேயான கருத்து வேறுபாட்டால் Cook With Comali நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலைக்கு மாற்றாக புது Anchor யார்? என விடியோவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே நீக்கிய விஜய் டிவி.
சீசன் 5 – cook with comali நிகழ்ச்சியில் ஆங்கராக இருந்து வந்த மணிமேகலை கடந்த வாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இனிமேல் cook with comali ஷோவில் ஆங்கராக பணியாற்றப்போவதில்லை என கூறினார்.
குக்காக இருந்துவரும் பிரியங்காவை மறைமுகமாக கூறி, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குக் வித் கோமாளி ஷோவில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் மணிமேகலைக்கு ஆதரவு வர, சில விஜய் டிவி நட்சத்திரங்கள் பிரியங்காவிற்கு குரல் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
இவர்களது பிரச்சனை ஒரு பக்கம் நடந்தாலும் குக் வித் கோமாளி ஷோவில் இறுதிப்போட்டியாளராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார். மேலும் இர்பான், சுஜிதா, பூஜா, ஜோயா என மொத்தம் 5 இறுதிப்போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளார்.
இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளர் இறுதிப்போட்டிக்கு தேர்வாக வாய்ப்புள்ளது. கடந்த வாரம் ரக்ஸன் மட்டும் ஆங்கராக இருந்து வந்த நிலையில் வரும் வாரத்தில் அவருடன் இணைந்து யார் ஆங்காரக இருக்கப்போவது யார் என்று ஒரு விடியோவை வெளியிட்டது விஜய் டிவி.

ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விடியோவை நீக்கியது. ஆனால் சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோ மற்றும் சீசன் 5 -வில் ரக்ஸன் உடன் யார் அடுத்த ஆங்கராக இருப்பார் என்ற கருத்து பேசுபொருளாக பரவி வருகிறது.
Next anchor…!!!??? #Cookwithcomali | #CookWithComali5 | #CookuWithComali | #CookuWithComaliSeason5 pic.twitter.com/ZJ7y61lRJu
— Cooku With கோமாளி (@ComalCook) September 23, 2024
கடந்த வாரம் வெளியான எபிசோடில் ரக்ஸன் கோர்ட்டில் குக் வித் கோமாளியில் பணியாற்றியவர்கள் மற்றும் கேமராவிற்கு பின்னாள் பணியாற்றும் நபர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதில் ஜாக்லின் பெயரும் இடம்பெற்றது. அந்த வகையில் அடுத்த ஆங்காரக யார் இருப்பர் என்ற பெயரில் பெரும்பாலும் ஜாக்லின் பெயர் தான் அடிபடுகிறது.
ஏனெனில் இதற்க்கு முன்பு ரக்ஸன் மற்றும் ஜாக்லின் இணைந்து தொகுத்து வழங்கிய கலக்கப்போவது யார் சீசன் 5 – 7 நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சீசன் 5 -ல் கோமாளியாக கலந்துகொண்ட அறந்தாங்கி நிஷா குக் வித் கோமாளி சீசன் 1 -ல் ஆங்காரக இருந்தார். இவரும் அடுத்த ஆங்காரக வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்த பாலா தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இதனால் ஆங்காரக வர வாய்ப்புள்ளது.
இந்த வார ப்ரோமோவில் VTV கணேஷ் ஆங்கராக எண்ட்ரி தந்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. வழக்கமாக அவரது பாணியில் காமெடி செய்து அசத்தியுள்ளார். மேலும் புகழ் ஆங்காரக பேசும் promo video -வும் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் அடுத்த ஆங்கர் என வரும் வாரங்களில் வெளியாகும் குக் வித் கோமாளி ப்ரோமோவில் தெரிய வாய்ப்புள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]