குக் வித் கோமாளி சீசன் 5 முடிவுக்கு வரவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக Manimegalai மற்றும் Priyanka Deshpande இடையே நடந்த சண்டை தான் பேசுபொருளாக அமைந்துள்ளது. ஞாயிறு ஒளிபரப்பான எபிசோடுக்கு பிறகு மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி சீசன் 5லிருந்து விளங்குவதாக அறிவித்தார்.

தொகுப்பாளினி மணிமேகலை பதிவிட்ட வீடியோவிற்கு விஜய் டிவியின் பல பிரபலங்கள் அவர்களின் ஆதரவை தெரிவித்தனர். இதனையடுத்து Priyanka தரப்பில் எந்தவித கருத்தும் வெளியாகாமல் இருந்தது ஆனால் இந்த சர்ச்சை தொடங்கி நான்கு நாட்களுக்கு பிறகு தற்போது ப்ரியங்காவிற்கு ஆதரவாக பலர் பேச தொடங்கியுள்ளனர்.
குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகல்! வெளிச்சத்துக்கு வரும் பிரியங்கா செய்த சம்பவம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் டிவியின் சீனியர் Anchor பிரியங்கா போட்டியாளராக பங்கேற்பது மட்டுமல்லாமல் ஒரு தொகுப்பாளினியின் வேலையையும் அவரே செய்துவருவதாகவும், அதனால் தனக்கு அங்கு சுய மரியாதை இல்லை என்ற காரணத்தால் மணிமேகலை விளக்கியுள்ளார்.
குக் வித் கோமாளி செட்டில் நடந்தது என்ன?
நடிகை திவ்யா துரைசாமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும்போது, அவரை பற்றி சகா போட்டியாளர்கள், நடுவர்களை மற்றும் கோமாளிகள் என பலரும் eliminate ஆனதால் அவரை பற்றி ஏதாவது நல்லதாக பேசி வழி அனுப்பி வைப்பது வழக்கம்.

இதே நடைமுறை திவ்யா துரைசாமி eliminate ஆனபோது அனைவரும் இந்த கருத்துக்களை சொன்னபோது, Priyanka Deshpande நான் சில வார்த்தைகள் திவ்யாவை பற்றி பேசவேண்டும் என கேட்க, அதற்கு மணிமேகலை மறுப்பு தெரிவித்ததால் இந்த சண்டை தொடங்கியதாக தகவல் வந்துள்ளது.
அடுத்த வார படப்பிடிப்பில் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மணிமேகலையிடம் பிரியங்காவுடன் நடந்த சண்டைக்காக மன்னிப்பு கேட்க சொன்னதாகவும், அதற்கு ஒப்புக்கொள்ளாமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது.
Priyanka Deshpande -வுக்கு ஆதரவாக பேசுபவர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான கோமாளியான குரேஷி, முதலில் மணிமேகலை உடைய விடீயோவிற்கு “All The Best for your future” என Comment செய்திருந்தார். ஆனால் அதை பிறகு நீக்கிவிட்டு, தற்போது உண்மையில் நடந்தது என்ன என்பதை ஒரு விடியோவாக பதிவிட்டுள்ளார். இதில் ப்ரியங்காவுக்கு ஆதரவாக பேசும் வகையில் பேசியுள்ளார்.
இதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருபவர் சுனிதா. இவரும் ப்ரியங்காவுடைய நெருங்கிய தோழியாவார். இவரும் இன்று குரேஷி வெளியிட்டதை போலவே இன்ஸ்டாகிராமில் Live சென்று, இந்த பிரச்சனையில் நடந்ததை பேசியுள்ளார். அதோடு “ஒரு Co -contestant ஆ eliminate ஆகியவர்களை பத்தி பேசுவது நியாயம் தானே” என கூறியுள்ளார்.
இதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியங்காவுடன் இருந்த நடிகை பாவ்னி “I Stand With Priyanka” என கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். மற்றும் Super Singer நிகழ்ச்சியில் பிரபலமான DJ Black என்ற சுதன் குமார், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “உண்மை ஒருநாள் வெல்லும்” என்ற பாடலை பதிவிட்டு அவரின் கருத்தை பகிர்ந்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]