Home shows தமிழ் சினிமா ப்ரோமோஷன்களுக்கு ரியாலிட்டி ஷோக்கள் உதவுகிறதா?

தமிழ் சினிமா ப்ரோமோஷன்களுக்கு ரியாலிட்டி ஷோக்கள் உதவுகிறதா?

ஒரு படத்தை சின்னதிரையில் promote செய்வதால் இப்படி கூட நடக்கிறதா?? 

by Sruthi Balasubramanian

தினம் தினம் வளர்ந்து வரும் துறையாக விளங்கும் பொழுதுபோக்கு துறையில் தொலைக்காட்சியும் திரைப்படங்களும் பெரும் பங்கு வகிக்கிறது! ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான தொடர்போடு இருந்தாலும், வெகுகாலமாக தமிழ் சினிமாவும் தமிழ் தொலைக்காட்சியும் விலகியே இருந்தது என்றே சொல்லலாம். காரணம், திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி பொழுது போக்கு நிகழ்ச்சிகள் போல் அணைத்து வித மக்களையும் அணைத்து இடங்களிலும் சென்று அடைவதில் கஷ்டப்படுகிறது. இதைச் சரிக்கட்டும் விதமாகச் சமீபத்தில் திரைப்பட ப்ரோமோஷன்களை ‘interview’, ‘fans meet’, ‘poster promotion’ என்று அந்த காலம் போலவே இல்லாமல் ‘promotion with influencers’ மற்றும் ‘promotions at reality shows’ காலமாக மாறிவிட்டது. 

Veetla Visesham poster

திரைப்பட ப்ரோமோஷன் என்பதன் இலக்கு, பார்வையாளர்களுக்குப் படத்தைப் பற்றி எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியது.திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீடியாவுடன் இணைந்து, படங்களின் டீஸர், டிரெய்லர் போன்றவற்றை வெளியிடுகின்றன. இந்தியாவில் ஹிந்தி சினிமாவை பொறுத்தவரை அவர்கள் சில வருடங்கள் முன்னரே தங்கள் படங்களை ஹிந்தி தொடர்கள் மூலியமாக promotion செய்யத் தொடங்கிவிட்டனர். அதே போல் தற்போது கோலிவுட்டும் ஆரம்பித்து இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. உதாரணமாக, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ பட ப்ரோமோஷனிற்காக ஜீ தமிழில் ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருந்த ‘புது புது அர்த்தங்கள்’ தொடரில் பாலாஜியும் அபர்ணா பலமுரளியும் ஒரு நாள் கலந்து கொண்டு தங்கள் படத்தை promote செய்தனர். அந்த சமயம் இந்த ப்ரோமோஷன் வழி பிரபலமாகிக்கொண்டு இருந்தது.

Siddharth ப்ரோமோஷன் at cook with comali

வழக்கம் போல் பாட்டு நிகழ்ச்சிகளில் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் மட்டும் வந்து கெஸ்டாக கலந்து கொண்டு தங்கள் படத்தை promote செய்யாமல் தற்போது ‘Game Shows’களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்றும் கூறலாம். மாநாடு படத்திற்காகச் சிம்பு, சித்தா படத்திற்காக சித்தார்த், 99 பாடலுக்காக A.R. ரஹ்மான் போன்று இன்னும் பல பேர் தங்களது பட புரோமோஷனிற்காக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். 

Vijay Sethupathi in Start Music

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா புரோமோஷனிற்கு குக் வித் கோமாளி மற்றும் விஜய் டிவியின் மற்றொரு பிரமாண்ட நிகழ்ச்சியான ‘start music’ க்கும் தனது படக்குழுவினருடன் கலந்துகொண்டார். ‘விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிகளில் எப்படி?’ என்று அனைவரும் வியக்க அங்கு தான் திரைப்பட குழுவினர்கள் தங்களது ‘marketing strategy’யை உபயோகப் படுத்தியுள்ளனர். பல லட்ச ரசிகர்களைக் கொண்ட இந்நிகழ்சிகளில் ‘promote’ செய்வதன் மூலம் திரை ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.