ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற Sa Re Ga Ma Pa Li’l champs என்ற ரியாலிட்டி ஷோவை தமிழிலும் அறிமுகப்படுத்த எண்ணிய ஜீ குழுமம் 2016-ஆம் ஆண்டு முதல் சீசனை தொடங்கினர். கார்த்திக், விஜய் பிரகாஷ், மற்றும் சுஜாதா நடுவர்களாக, vj அர்ச்சனா தொகுப்பாளினியாக நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்-க்கு போட்டியாக இந்நிகழ்ச்சி கருதப்பட்டது. இருப்பினும் அதற்கடுத்த சீசன் 2018-ல் ஒளிபரப்பப்பட்டது, பின்னர் மூன்றாவது சீசன் கடந்த வருடம் ஒளிபரப்பானது. இதில் கில்மிஷா என்ற போட்டியாளர் title winner-ஆக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது நான்காவது சீசன் துவங்க உள்ள நிலையில் அதற்கான முதல் கட்ட நேர்முக தேர்வு திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீ காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு அடுத்து சென்னை மற்றும் மதுரையில் செப்டம்பர் 1-ஆம் தேதி ஒரே நாளில் இரு இடங்களிலும் காலை 10 மணி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. சென்னை ராமாபுரத்தில் இருக்கும் SRM நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை எதிர் ரோட்டில் அமைந்துள்ள அம்பிகா காலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வயது 6 – 14 என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் வயதை உறுதி செய்யும் சான்றிதழையும் எடுத்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுதுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]