ஜீ தமிழ் டிவியில் 5 – 14 வயது குழந்தைகளுக்காக சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி 2017 -ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. சிறந்த குரல்வளம் உள்ள குழந்தைகள் தங்கள் திறமையை நிரூபிக்கும் மேடையாக சரிகமப லிட்டில் camps நிகழ்ச்சி இருந்து வருகிறது.
இது வரை 3 சீசன் முடிவடைந்த நிலையில் முதல் 3 Sa Re Ga Ma Pa Lil Champs சீசனையும் அர்ச்சனா தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசன் இறுதி போட்டிக்கு நடிகர் ஜீவா கெஸ்ட் ஆக வந்தார். 2 -வது சீசனுக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
முதல் 2 சீசன் வெற்றியை தொடர்ந்து 3 -வது Sa Re Ga Ma Pa Lil Champs சீசன் பெரிய அளவில் நடைபெற்றது. இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
Vanthutomnu Sollu🕺🔥
— Zee Tamil (@ZeeTamil) October 28, 2024
Saregamapa Li'l Champs Season4.#SaregamapaLilChampS4 #SaregamapaS4 #SaregamapaTamil #ZeeTamil pic.twitter.com/RsTSYSZVRh
இந்த ஆண்டில் Sa Re Ga Ma Pa Lil Champs சீசன் 4 நவம்பர் 2 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு கூடுதல் கவனம் பெரும்.
Champs Music Galatta Start uh 🔥😍
— Zee Tamil (@ZeeTamil) October 29, 2024
Saregamapa Li'l Champs Season4 | நவம்பர் 2 முதல் | Sat & Sun 7.00 pm.#SaregamapaLilChampS4 #SaregamapaS4 #SaregamapaTamil #ZeeTamilPromo #Promo #ZeeTamil pic.twitter.com/WEDbyuEt7Q
ப்ரோமோ வீடியோவில் குழந்தை தொலைந்து விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கொண்டு அங்கு பாட்டுப்பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தும் படியாக இருந்தது.
நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் பங்கு பெறும் குழந்தைகள் தொகுப்பாளர், நடுவர்கள் போன்ற அப்டேட் வரும் நாட்களில் தெரியவரும். சமீபத்தில் சரிகமப நிகழ்ச்சியின் 4 – வது சீசனில் மகிழன் பரிதி இறுதிப்போட்டியில் வென்றார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]