சென்ற ஆண்டு ஜீ தமிழில் லான்ச் செய்யப்பட்டு இதுவரை 40 எபிசோடுகளை கடந்துள்ளது ‘SAREGAMAPA Li’l Champs சீசன் 4’. வாரம் ஒரு தலைப்பு அல்லது கோலிவுட் வெள்ளித்திரை மற்றும் இசை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் நபர்களை கொண்டாடும் வகையில் சுற்றுகள் அமைக்கப்படும். இந்த சீசனின் நடுவர்கள் பிரபல பாடகர்கள் சைந்தவி, ஸ்ரீனிவாஸ், சுவேதா மோகன் மற்றும் SP சரண் ஆகியோர் ஆகும்.
SAREGAMAPA Li’l Champs சீசன் 4: பெர்ஃபாமன்ஸ் சுற்று
ஜீ தமிழின் SAREGAMAPA Li’l Champs சீசன் 4 நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எளிய பின்னணியில் இருந்து வரும் பல திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கனவுகளை நிறைவேற்றி வரும் இந்த நிகழ்ச்சியின் மீது மக்களின் மத்தியில் நல்ல அபிமானம் உருவாகியுள்ள காரணத்தால் சீனியர்/ஜூனியர் என இருவகையான நிகழ்ச்சிக்கும் தங்களின் ஆதரவை ரசிகர்கள் தந்த வண்ணம் உள்ளனர். 8 & 9 மார்ச் 2025 அன்று ஒளிபரப்பாகவிருக்கும் எபிசொட் ‘பெர்ஃபாமன்ஸ் சுற்று’ அடிப்படையில் உருவாகியுள்ளது. கோலிவுட்டின் தனித்துவமான வெற்றி பெற்ற கதாபாத்திரங்கள் மையப்படுத்தி அதே வேடத்தில் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
Read More: Week 4 UR TRP ரேட்டிங்: டாப் 10 தமிழ் ரியாலிட்டி ஷோ
Chumma-vey Perform pannuvom Performance round-ah miss pannuvomaaa😉❤️🔥❤️🔥
— Zee Tamil (@ZeeTamil) March 6, 2025
Saregamapa Li’l Champs Season 4 | Performance Round | Sat and Sun at 7.00 PM.#SaregamapaLilChampsSeason4 #SaregamapaS4 #SaregamapaTamil #ZeeTamil pic.twitter.com/xjMIunuSix
அதை குறித்த ப்ரோமோவில் நடுவர்கள் SP சரண் – தேவர்மகன், ஸ்ரீனிவாஸ் – படையப்பா, சுவேதா மோகன் – ஜெஸ்ஸி, சைந்தவி – அம்மன் வேடத்தில் வருகை தருகின்றனர். போட்டியாளர்கள் அவ்வை சண்முகி, சிங்காரவேலன், மற்றும் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் வரும் ‘வலையப்பட்டி’ பாட்டில் வரும் இரு குரல்களுக்கு ஏற்றார் போல் பாதி பெண் வேடம் பாதி ஆண் வேடம் இட்டு இதுவரை மக்கள் காணாத புதுமைகளை இந்த சீசன் போட்டியாளர்கள் புரிந்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஜீ தமிழ் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: Sa Re Ga Ma Pa சீசன் 4 – வெற்றியாளரானார் மகிழன் பரிதி!
நிகழ்ச்சி பெயர் | SAREGAMAPA Li’l Champs சீசன் 4 |
தொலைக்காட்சி | ஜீ தமிழ் |
ஒளிபரப்பாகும் நாள் | 8 & 9 மார்ச் 2025 |
கிழமை | சனி & ஞாயிறு |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]