Zee தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பாட்டு நிகழ்ச்சியான Sa Re Ga Ma Pa, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த பாட்டு நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக மாறியது, குறிப்பாக Sa Re Ga Ma Pa சீசன் 4 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிரபல திரையிசை பின்னணி பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் நடுவர்களாக இணைந்து பல்லாயிரம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள இந்த Sa Re Ga Ma Pa சீசன் 4, இறுதி சுற்றுடன் இனிதே முடிவடைந்தது. இதில் வெற்றியாளராக வாகைசூடினார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டியாளர் மகிழன் பரிதி.
Sa Re Ga Ma Pa சீசன் 4 -ன் இறுதி போட்டி 20ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த கடைசி கட்ட போட்டியில் 6 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதி சுற்றில் மகிழன் பரிதி, ஸ்வீதா சிருஷ்டி, சரத் சார்ஸ், அமன் சாகா, சரண் சாண்டி மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் தேர்வாகினர்.
எண் | போட்டியாளர் | இடம் |
---|---|---|
1 | மகிழன் பரிதி | வெற்றியாளர் |
2 | ஸ்வீதா சிருஷ்டி | இரண்டாவது இடம் |
3 | சரத் சார்ஸ் | மூன்றாவது இடம் |
4 | அமன் சாகா | – |
5 | சரண் சாண்டி | – |
6 | வீரபாண்டியன் | – |
இதில் முதல் இடத்தை மகிழன் பரிதி வெல்ல, இரண்டாவது இடத்தை ஸ்வீதா சிருஷ்டி வென்றார். மூன்றாவது இடத்தில விழுப்புரத்தை சேர்ந்த வீரபாண்டியன் வென்றார். இந்த நான்காவது சீசனில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றும் மக்களால் பெரியளவில் பாராட்டப்பட்டது.
இறுதி போட்டியில் மகிழன் பரிதி, ‘மலர்களே மலர்களே’ பாடலை பாடினார். இரண்டாவது இடம் பிடித்த ஸ்வீதா சிருஷ்டி, ஹிந்தி படத்தின் தமிழாக்க பாடலான ‘ஹே ராமா’ பாடலையும் மூன்றாவது இடத்தை பிடித்த வீரபாண்டியன் ‘நான் ஆட்டோகாரன்’ பாடலையும் பாடினார்கள்.
உலகளவில் இருந்து மலேஷியா, சுவிட்ஸர்லாந்து, இலங்கை ஆகிய இடங்களில் இருந்தும் போட்டியாளர்கள் போட்டியிட்ட Sa Re Ga Ma Pa சீசன் 4 நிகழ்ச்சியில், நடுவர்களின் கணிப்பு படியும் போட்டியில் அவர்களின் திறமையின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறினர்.
இந்த சீசனில் ஒவ்வொரு வாரமும் சிறந்த போட்டியாளர்கள் யார் என நடுவர்கள் முடிவெடுப்பதை போல, கடைசியில் தேர்வான 6 இறுதி போட்டியாளர்களில் 3 நபர்கள் பட்டங்களுடன் சென்றனர். இந்த மூன்று வெற்றியாளர்களை பாராட்டி பட்டம் வழங்கினார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.