குக் வித் கோமாளி சீசன் 5ல் கடந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதமாக பிரபலமாக பேசப்பட்ட போட்டியாளர் Shaalin Zoya வெளியேற்றப்பட்டார். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் promo வீடியோக்களில் விஜய் டிவியின் TRPயை உயர்த்தியவர் இந்த Shaalin Zoya தான். அவரின் மேல் எழுந்த குற்றச்சாட்டே இதுதான். வெறும் நகைச்சுவை கன்டென்ட் தருவதற்காக மட்டுமே அவரை வெளியேற்றாமல், தகுதியான போட்டியாளர்கள் பலரை வெளியேற்றியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த வாரம் குக் வித் கோமாளியில் ‘International Cuisines’ ரவுண்டு. இதில் போட்டியாளர்கள் வெளிநாட்டு உணவுகளை விதவிதமாக சமைக்க வேண்டும். இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், கிராமத்து பாட்டிகள் சிலருடன் சேர்ந்து கோமாளியின் சேட்டைகளை சமாளித்து variety ஆன உணவுகளை சமைப்பது தான் டாஸ்க். இதில் இரண்டு ப்ரோமோக்களை வெளியிட்ட விஜய் டிவி, அதில் இந்த வாரத்தின் டாஸ்க் பற்றி வீடியோ வெளியானது.
மாதம்பட்டி ரங்கராஜ் – சமையல் மற்றும் சினிமாவில் வெற்றி பயணம்!
மூன்றாவது ப்ரோமோவில் செஃப் தாமு ஒரு புது கெஸ்ட் வருகிறார் என்று கூற, மறுபடியும் குக் வித் கோமாளி செட்டுக்குள் நுழைந்தார் ஷாலின் ஜோயா. கடந்த வாரம் eliminate செய்யப்பட்ட இவர், இந்த வாரமும் content கொடுப்பதற்காக வந்துள்ளது இந்த நிகழ்ச்சியின் TRP strategyயாக அப்பட்டமாக தெரிகிறது. நடிகர் வசந்த் ரவியின் வெளியேற்றத்தை மக்கள் குறிப்பிட்டு கேள்வி கேட்க, கடந்த வாரம் ஷாலின் ஜோயாவை இக்கட்டான சூழ்நிலையில் வெளியேற்றிய குக் வித் கோமாளி குழு, மறுபடியும் இந்த வாரமே அவரை விருந்தினராக அழைத்துள்ளது தெளிவாக பார்வையாளர்களை ஈர்க்க தான்.
இதற்கு முன் மதுரை முத்து அவர்களை ஒரே சீசனில் எலிமினேட் செய்து மீண்டும் கோமாளியாக கன்டென்ட் கொடுக்க பயன்படுத்தினார்கள். அதையடுத்து தற்போது ஷாலின் ஜோயாவை மறுபடியும் வரவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]